சர்க்கரை-டயாபடீஸ் என்ற
நோய் (அது ஒரு நோயே அல்ல) பற்றி " இனிப்பு " என்ற புத்தகம் எழுதியவரும், சர்க்கரை நோயைப் பற்றிய ஆவணப் படம் எடுத்து வருபவருமான
திரு.ம.செந்தமிழன் அவர்கள் தொலைக்காட்சியில் நடைபெற்ற "நீயா ? நானா ?"நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது
தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை,அவரது முகநூலில் பகிர்ந்து
கொண்டதை, நமது அனைவரின் நலன் கருதி இங்கு
வெளியிடப் படுகிறது.
உங்களிடம் சொல்ல
விரும்பும் அழுத்தமான சேதி!
ம.செந்தமிழன்
ம.செந்தமிழன்
’பசுமைப் புரட்சியின்
விளைவாகத்தான் பஞ்சாப் சாராயத் தொழில் வளர்ச்சியடைந்தது’ என சாராய ஆலை அதிபர் தனது அந்தரங்க கூட்டத்தில் பேசினால் அதில்
வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், பொதுமக்கள் பார்க்கும்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ‘அறிவு ஜீவி’ ஒருவர் பேசுகிறார். அதே நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன்
என்பதால் அந்த சொற்களின் கழிவு என்மீதும் தெறித்ததை அருவருப்பாக உணர முடிகிறது.
வேறொரு இளைஞர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். அவர் முன்னால் இயற்கை வேளாண்மையில் விளைந்த பழங்களையும், மரபணு மாற்றப்பட்ட பழங்களையும் வைத்தால் அவர் இயற்கை வேளாண் பழங்களைத்தான் சாப்பிடுவாராம். ஆனால், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் எந்தத் தீமையும் இல்லையாம். ஆகவே, நாமும் நம் சந்ததிகளும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளைத் தின்றுகொள்ளலாமாம். இதுதான் அவர் கற்ற கல்வியின் நேர்மை!
மற்றொருவர், ‘நான் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் எல்லாம் மிகவும் பாதுகாப்பானவை. இவ்வாறு சொல்வது எனது நம்பிக்கை. இது ஆய்வுப்பூர்வமான முடிவல்ல’ என்று துளியும் கூச்சமின்றிப் பேசுகிறார்.
இந்த மூவரின் முதுகுகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த விவசாயிகள், ‘கத்தரிக்காயில் அதிகம் நஞ்சு தெளிக்கிறோம், உருளைக் கிழங்கை வாங்கிவிடாதீர்கள் அது முழுவதும் ஆபத்தானது, முட்டைகோசு என்றாலே நச்சுக் காய்தான், காலி பிளவரை நச்சு நீரில் முக்கி எடுப்போம்’ என்று வாக்குமூலம் தருகிறார்கள்.
இந்த நீயா நானாவில் இயற்கை வேளாண் அணியில், நாங்கள் பேசியவற்றைவிட எதிரே இருந்தவர்கள் பேசியவை மிகுந்த கவனத்திற்குரியவை.
நண்பர்களே, உங்களிடம் ஒரே ஒரு கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்,
‘நிச்சயமாக நாம் விற்கப்பட்டுவிட்டோம். நமது உணவு உரிமை நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு விட்டது. நமது வேளாண்மை உரிமை கொள்ளையிடப் பட்டு விட்டது’
உணவையே நஞ்சாக மாற்றிய குரூர அறிவியலின் பலிகள் நாம். அது நம்மைப் பலி கேட்கிறது. நம்மில் பலர் அதற்குப் பலியாகிக் கொண்டும் இருக்கிறோம்.
நம்மிடம் தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. நம்மிடம் ஆண்ட்ராய்ட் அலைபேசிகள் உள்ளன. நம்மிடம் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளன. நம்மிடம் வசதியான வாகனங்கள் உள்ளன. நமது குடிநீர் நம்மிடம் இல்லை. நமது உணவு நம்மிடம் இல்லை. நமது நிலங்களும் நம்மிடம் இல்லை.
நேற்றைய நீயா நானா பார்த்துவிட்டு சென்னையிலிருந்து பேசிய எங்கள் தோழி பின்வருமாறு கூறினார், ‘என் மகனை நான் பெற்றிருக்கக் கூடாது. வாழத் தகுதியில்லாத சமூகத்தில் அவன் பிறந்துவிட்டானே. அவனுக்கு நான் எந்தக் காயை, எந்தப் பழத்தை நம்பிக் கொடுப்பேன்’
நீயா நானாவில் நான் பேசியதைப் பாராட்டி வாழ்த்துச் சொல்லும் நண்பர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. ஆனால், அவை இப்போது தேவையற்றவை. நமக்காக நாம் பேசித்தான் ஆக வேண்டும். நமது சமூகத்திற்காக நான் பேசுகிறேன். இது என் கடமை. நீங்கள் உங்கள் கடமையை உணருங்கள்.
முதலில், இந்த அவல நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். நமது உணவையே நஞ்சாக்கும் பணியில் ஈடுபடும் மனிதர்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக, நமது விளைநிலங்களை, நமது உழவர்களை, நமது மரபுகளைப் பாதுகாக்கும் பணிகளில் உடனடியாக ஈடுபடுங்கள். நாம் பணியாற்றியே தீர வேண்டிய நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. நமது சமையலறைக்குள் ஆட்கொல்லி நஞ்சுகளை அனுமதிப்பதைக் காட்டிலும் ஆபத்து ஏதுமில்லை.
நம் பிள்ளைகளின் முகங்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஊட்டி விடும் ஒரு பிடிச் சோறு நஞ்சற்றதாக இருக்கட்டும்!