அக்குபங்சர்
மருத்துவத்தின் தந்தையும்,
"ஹெல்த் டைம்" மாத இதழின் ஆசிரியருமான திரு.டாக்டர்.பஸ்லுர்
ரஹ்மான்
M.B.B.S.DV.MD.PhD (ACU) அவர்கள் மனித குலத்திற்கு ஆற்றி வரும் சேவை மகத்தானது.
அதிலும் மனிதர்கள் அனைவரும் நலமான உடல் நலத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக வேண்டி
தனக்கு இறைவன் மூலம் அறிவிக்கப் பட்ட ஞானங்களை உடனுக்குடன்
"ஹெல்த் டைம்" மாத இதழில் எழுதி வருகிறார். அவ்வாறு எழுதப் பட்ட " நீடித்த
நல் வாழ்விற்கு மிகச் சிறந்த வழிமுறைகள்" என்ற கட்டுரை நமது அனைவரின்
நலத்தை கருத்தில் கொண்டு இணையத்தில் வெளியிடப் படுகிறது. இக்கட்டுரையானது "
புதிய அக்குபங்சர் உங்களுக்காக " என்ற அவரது நூலிலும் வெளியிடப் பட்டுள்ளது.
நீடித்த நல் வாழ்விற்கு மிகச்
சிறந்தவழிமுறைகள்
வாசகர்களே,
உங்களுக்காக
இறைவன் ஞானங்களில் மிக உயர்ந்ததும், மிக இலேசானதுமான எளியதொரு வழிமுறையை உங்கள் அனைத்து
நோய்களையும் குணமாக்கிக் கொள்வதற்காக இங்கு விளக்கப் படுகிறது.
நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஞானம் மனிதர்களால் கற்றுக்
கொடுக்கப்பட்டதல்ல. குப்பைத் தொட்டிக்குச் சமமான மருத்துவ அறிவிலிருந்து எடுக்கப்
பட்டதுமல்ல. உலகில் வேறு எவராலும் சொல்லப்பட்டதுமல்ல. ஆகவே, இது இறைவன்
புறத்திலிருந்து ஞானமாக இருக்க வேண்டுமே தவிர, மனித சமுதாயத்தில் இன்று இந்த வழிமுறை இதுவரை இல்லாத
ஒன்றாகும். எனவே,
அனைத்துப்
புகழும் இறைவன் ஒருவனுக்கே!
நீங்கள் அறிந்து கொள்ள
வேண்டும். எந்தவொரு நோயையும், எந்தவொரு மருத்துவத்தாலும், மருத்துவ முறையாலும் ஒருபோதும் குணப் படுத்த முடியாது.
கட்டுப்படுத்தவும் முடியாது. இறைவன்
அனுமதியிருந்தால் தவிர. ஆகவே இந்த இறைஞானம் இப்பொழுது உங்களுக்கு
முன்பாக இருக்கிறது.
கீழே தரப்பட்டுள்ள
விளக்கத்தையும், எளிதான அணுகுமுறையையும்
நீங்கள் பின்பற்றுவீர்களானால், ஒவ்வொரு நோயும் உங்கள் உடலை விட்டும், உங்கள் உள்ளத்தை
விட்டும் படிப்படியாக நீங்கும். உருவாகிக் கொண்டிருக்கும் நோயும் உங்கள் உடலில்
உருவாகிக் கொண்டிருக்கும் நிலையிலேயே நீங்கள் உங்கள் நோயை உணர்வதற்கு முன்பாகவே
அது மறைந்தும் போகும். எவ்வளவு எளிமையான ஒரு வழியைக் கற்றுக் கொடுத்தாலும்
சரிதான். இறைவன் நாட்டம் இருந்தால் தவிர, நீங்கள் இதை வெகு சாதாரணமாக கருதி விடுவீர்கள்; இன்னும் புறக்கணித்தும்
விடுவீர்கள். எனவே,
பெருமை
கொண்டோர் இந்தக் கட்டுரையின் மிகப் பெரும் இறை பாக்கியத்திலிருந்து விலக்கப்
பட்டவர்கள் ஆவார்கள்.
வாசகர்களே, உங்களிடம் பெருமை குணம்
இருக்கலாம். அதிலிருந்தும் உங்களைப் பாதுகாக்க உங்கள் இறைவனிடம் மனமார்ந்த
பிரார்த்தனையை மேற்கொண்டவர்களாக இனி இந்த
கட்டுரையைப் படியுங்கள்.
நோய் என்றால் என்ன ?
உடல் கஷ்டங்கள் நோய்களாகும். உடல் கஷ்டங்களுக்குக் காரணம்
உடலிலுள்ள அனைத்து சக்திகளும் ஒரு நோயை எதிர்த்துப் போராடுவதே ஆகும். அந்தப்
போராட்டத்தின் விளைவு தலை முதல் கால் வரையிலான அனைத்து நோய்களின் அறிகுறிகளாகும்.
உடலில் உருவாகும் எந்தவொரு நோயையும் எதிர்ப்பதற்காகத் திரும்புவதன் காரணமாக, உடல் அசதி ஏற்படும;. சோர்வு அடையும். இது
எந்தவொரு நோயின் முதல் அறிகுறியாகும்.
உடல் அசதியும், சோர்வும் நோய்களின்
முக்கியமான ஆரம்ப அறிகுறியாகும். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரே நாளில் பல
நேரங்களில் அல்லது உடல் ஆரோக்கியமாக இருக்கும் நிலையிலேயே பல்வேறு சமயங்களில்
தற்காலிகமாக அசதியும்,
சோர்வும்
ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆம், ஓய்வே அது ஆகும்.
எப்பொழுது களைப்பு ஏற்படுகிறதோ அது நோயின் அறிகுறி என்று நாம் அறியும் பொழுது, மேற்சொன்ன உண்மையையும்
இணைத்துப் பார்க்க வேண்டும். அதாவது, உடலின் இயக்க சக்தியெல்லாம் உடலில் எங்கோ உருவாகிக்
கொண்டிருக்க நோயை அழிப்பதற்காக திருப்பப் பட்டிருக்கிறது என்பதை.
எனவே, இயற்கை இயக்க சக்திகள்
பெருமளவு குறைகின்றன. ஆகவே,
அசதியும், களைப்பும் ஏற்படுகிறது.
உடல் இயங்க மறுக்கிறது. கை கால்கள் சோர்ந்து போக நாம் சற்று களைப்பாறுகிறோம்.
அதாவது, இயக்க சக்திகள் நோயை
அழிப்பதற்காகத் திரும்பியதும், அது நோயை எதிர்த்து அழிக்கிறது. அழிக்கும் போராட்டத்தில்
ஈடுபடுகிறது. இறுதியாக நோய் அழிக்கப் பட்டு விடும்பொழுது, உடலின் சக்தி நோய்
எதிர்க்கும் சக்தியின் வீரியத்திலிருந்து சகஜ நிலைக்குத் திரும்பி, உடல் இயக்க சக்தியாக
மாறுகிறது. நம்முடைய ஓய்வு எடுக்கும் நேரமும்
முடிவடைந்து விடுகிறது. களைப்பு நீங்கி சுறுசுறுப்பாக படுக்கையை விட்டு
எழுகிறோம். சுகம் பெறுகிறோம்.
வாசகர்களே, இந்த ஒரு உதாரணம்
உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டியது உங்கள் மீது அழகான
கடமையாக்கப் பட்டிருக்கிறது.
இயக்க சக்தியானது கைகளையும் கால்களையும் மட்டும் இயக்குவதில்லை.
உடல் உள்ளுறுப்புக்களான இருதயம், வயிறு,
சிறுநீரகங்கள், கல்லீரல், மூளை, நரம்பு மண்டலம்
ஆகியவற்றையும் இயக்குகிறது. இதில் மிகவும் முக்கியமானது வயிறு ஆகும். ஏனெனில், வயிற்றிலிருந்துதான்
உடலின் இயக்க சக்திகள் அனைத்தும் உணவிலிருந்து கிரகிக்கப் படுகின்றன. வயிற்றின்
இயக்க சக்தி முறையாக இருக்குமானால், அதாவது அதனுடைய இயக்க சக்தியின் ஒரு பகுதி நோயை
எதிர்க்கும் சக்தியாக மாறாமல் இருக்கும் நிலையில்தான் பசி என்ற உணர்வு
ஏற்படுகின்றது. இன்னும்,
உடலில்
இயக்க சக்தியின் அளவு குறைந்து இருக்கும் போதும், உடலில் நோய்கள் இல்லாது இருக்கும் போதும் முறையான பசி
உருவாகிறது, உணவிலிருந்து இயக்க
சக்தியை கிரகிப்பதற்காக. எங்காவது உடலில்
நோய்கள் உருவாகிக் கொண்டிருக்குமானால், முதன் முதலாக எதிர்ப்பு சக்தியாக மாறும் இயக்க சக்தி
வயிற்றின் இயக்க சக்தியேயாகும். எனவே, பசியும், தாகமும் அற்றுப் போய் விடும்.
உதாரணமாக, வெய்யிலில் சென்று
விட்டு வீடு திரும்பியதும் அல்லது மிகவும் களைப்பாக இருக்கும் பொழுது, தொண்டை வறட்சியின்
காரணமாக நீங்கள் தண்ணீர் அருந்துகிறீர்கள். அப்பொழுதே தொண்டையில் ஒரு மாதிரியாக
கரகரப்பு ஏற்படுகிறது. இது,
இதனைத
தொடர்ந்து உருவாக இருக்கும் தும்மல், ஜலதோஷம், சளி ஆகியவற்றின்
ஆரம்பம். தொண்டை கரகரப்பு ஏற்படும் அதே தருணம் உடம்புக்கு ஏதோ போன்று தோன்றும். அயர்ச்சியும்
இருக்கும். இந்த நிலை என்ன என்பதை இப்பொழுது நீங்கள் தெளிவாக உணர்ந்து
கொள்ளுங்கள். வெய்யிலில் அலைந்து விட்டு களைப்புடன் வீடு திரும்புகிறீர்கள்.
அந்தக் களைப்பு என்ன அறிவிக்கிறது என்றால் உங்களிடம் இருக்கக்கூடிய மிகுதியான
இயக்க சக்தி நோய் எதிர்ப்பு
சக்தியாக மாறிவிட்டது என்பதாகும். அது என்ன நோய் ? எப்படி திடீரென நோய் உருவாகிறது? வெளியில் கிளம்பும்
பொழுது சுறுசுறுப்புடன் தானே கிளம்பினீர்கள்? தேக ஆரோக்கியம் நன்றாகத்தானே இருந்தது? வீடு திரும்பியதும், தண்ணீர்
குடித்ததும்தான் திடீரென தண்ணீரின் ஒரு துளி தொண்டையில் சிக்கிக் கொண்டு கட்டியது
போன்று இருந்தது. அதைத் தொடர்ந்துதான தொண்டையில் கரகரப்பு, உடல் அசதி தோன்றியது.
இதற்காண காரணம் என்னவெனில், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வீட்டை விட்டு கிளம்பினீர்கள்.
அளவுக்கு மீறி வெயிலில் அலைந்து விட்டீர்கள். உங்களுடைய கை, கால்கள், முதுகு தசைநார்கள்
அனைத்தும் வலிகள் எடுக்கும் அளவுக்கு அலைந்து விட்டீர்கள். ஆகவே, இது ஒரு தற்காலிகமான
நோயின் சூழ்நிலையாகும். கொஞ்ச நேரம் படுத்து ஓய்வு எடுத்தால் சரியாகிவிடக் கூடியதே
ஆகும். ஏற்கனவே நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். ஒரு நோய் ஏற்படும் பொழுது, வயிற்றின் இயக்க சக்தி
முதலாவதாக நோய் எதிர்ப்பு சக்தியாக மாறுகிறது. ஆகவே, வயிற்றின் ஜீரணத் திறன் குறைந்து விடுகிறது. தண்ணீரைக்
கூட அது ஜீரணிக்க சக்தியற்றதாக ஆகி விடுகிறது. வயிற்றிலிருந்து அவ்வளவு இயக்க
சக்தியும் தசை நார்களுக்களின் ஊட்டத்திற்காக இருந்து விட்டது. அங்கு அதன் சோர்வை
நீக்கும் போராட்டத்தில் ஈடுபடும் போதுதான் அயர்ந்து போய் உட்கார்ந்ததும் கை, கால்களில் ஒருவிதமான
வலி தெரிகிறது. கொஞ்சம் படுத்து விட்டீர்களானால், சுகமான தூக்கத்தில் நீங்கள் ஆகிவிடுவீர்கள். பின்னர், ஓரிரு மணி நேரங்களில்
உங்களுடைய தசை நார்களில் ஏற்பட்ட அயர்ச்சி நீக்கப் பட்டதும் தூக்கம் கலைகிறது.
தூக்கத்தில் எழும் பொழுதும் மீண்டும் அதே புத்துணர்வு பெரும் வியாதியாக உருவெடுக்க
வேண்டியது ஒரு சில மணிநேர ஓய்வில் தவிர்க்கப்பட்டு விட்டது.
மிகவும் களைப்புற்று
இருக்கும் நேரங்களில் நாம் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது வழக்கம். அவ்வாறு தாகம்
எடுக்கும் பொழுது,
மிகவும்
உன்னிப்பாக கவனிக்க வேண்டியது உண்மையில் அது தாகமா ? அல்லது நாக்கு வறட்சியா என்பதைத்தான். தாகமாக
எடுக்குமானால் வேகமாகவும்,
அவசரமாகவும்
குடிக்கத் தோன்றாது. சாதாரணமாக, அமைதியாகவும், நிதானமாகவும்தான் குடிப்பீர்கள். இது வயிற்றின் ஜீரண சக்தி நன்றாக
இருப்பதை உணர்த்துகிறது. வயிற்றில் ஜீரண சக்தி இருக்கும்பொழுது, வாயிலிருந்து தொண்டை, உணவுக்குழல் மற்றும்
வயிறு வரை அதனுடைய இயக்க சக்தி பாதுகாப்பானதாக இருக்கிறது. வயிற்றில் எப்பொழுது
இயக்க சக்தி குறைகிறதோ,
அப்பொழுது
வாய், தொண்டை, உணவுக்குழல் ஆகிய
உறுப்புக்கள் பலவீனமாகவே இருக்கின்றன. இந்த நிலையில் தண்ணீர் குடிப்பது இந்த உறுப்புக்களை
பாதிக்கும். பெரும்பாலும்,
தொண்டையில்
தண்ணீர் குடிக்கும்பொழுது சுரீரென சிக்கிக் கொள்கிறது. அந்த ஒரு துளி தண்ணீர்
தொண்டையில்
சிக்குவது
அந்த க்ஷணமே தொண்டையில் கரகரப்பை ஏற்படுத்துகிறது. மூக்கில் முணுமுணுப்பையும் கண்களில்
ஒருவிதமான அயர்ச்சியையும்,
எரிச்சலையும்
கூட ஏற்படுத்துகிறது. முகம் பூராவும் ஜலதோஷத்தில் அயர்ச்சியுடன் சோர்ந்துவிடும்.
இந்த நேரத்தில்தான்
தொண்டையில் ஏதோ செய்கிறது என்று நீங்கள் இன்னும் அதிகமாக தண்ணீர் குடிப்பீர்கள்.
இன்னும் சுடு தண்ணீரையும் குடிப்பீர்கள். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ, அந்தளவுக்கு மேற்சொன்ன
உங்களுடைய அவ்வளவு நிலைகளும் தீவிரமடையும். அதாவது, தொண்டை கரகரப்பு அதிகமாகும். மூக்கிலிருந்து நீர் வழிய
ஆரம்பிக்கும். தும்மல் அதிகமாகும். கண்கள் எரிச்சலுடன் குளமாகும். இலேசான
அசதியுடன் ஜீரமும் ஆரம்பமாகும். உடல் வலியும், தலைவலியும் இதனைத் தொடரும்.
வாசகர்களே, இதுவே அனைத்து
நோய்களுக்கான ஆரம்பமாகும். நீங்கள் முதன்முதலாக தண்ணீர் குடித்தீர்களே அங்கு
ஆரம்பமாகியதுதான் உங்கள் கேடுகளின் துவக்கம்.
சளி முதலாக பெரும்
வியாதிகளான முடக்கு வாதம், கான்ஸர் வரையில் எந்த நோயும் நம்மை தீண்டாது !
சற்று முன்னர் பார்த்தோம். வயிற்றில் போதுமான இயக்க சக்தி
இருக்குமானால், களைப்பின் காரணமாக
உங்களுக்கு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு நிதானமாகவும், சாதாரணமாகவும்
இருக்கும்.
இதற்கு
மாறாக அவசரத்துடனும்,
மடக்மடக்கென்று
குடிக்க வேண்டும் என்ற வேகம் இருக்குமானால், நிச்சயமாக நீங்கள் தண்ணீர் குடிக்கக் கூடாது. இது எச்சரிக்கை.
நிச்சயமாக நீங்கள் தண்ணீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில், அது தாகமல்ல. வெறும்
நாவறட்சிதான. அல்லது தொண்டை வறட்சிதான். வயிற்றுக்குள் தண்ணீர் இறங்கக் கூடிய
நிலையல்ல அது. வயிற்றில் நிச்சயமாக ஜீரண சக்தி இல்லை. தண்ணீர் வயிற்றுக்குள்
மடமடவென்று இறங்கும் பொழுது, அதே சமயம் வயிறு மேலும் பலவீனமடைகிறது. இது உணவுக்குழலிலும், தொண்டையிலும், நாக்கிலும் நோயின்
நன்மைகளை ஏற்படுத்தி விடுகிறது. தொண்டை கட்டி விடும். நாக்கு ருசியிழந்து சப்பென்று
ஆகிவிடும். வாய் ஏதோ போன்று இருக்கும். எந்த உணவு சாப்பிட்டாலும் நாக்குக்கு
திருப்தியாக இருக்காது. ஆகவே, இந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? நிச்சயமாக நீங்கள்
தண்ணீர் குடிக்கக் கூடாது. ஆனால், இலேசாக,
தண்ணீரைக்
கொஞ்சமாக உறிஞ்சி நாக்கு வறட்சிக்கும், தொண்டை வறட்சிக்கு மட்டுமே ஊட்டம் அளிக்கக் கூடிய
விதத்தில் நனைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவுதான் உங்களுக்கு தேவையான தண்ணீராகும்.
நாக்கு வறட்சி ஏற்படும் போதெல்லாம் தொண்டையை நனைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர்
நனைக்கப் பட்ட தண்ணீர் வயிற்றுக்குள் இறங்குவது அதற்கு நன்மையானதாகும். இவ்விதமாக
உங்களுடைய தண்ணீர் வேட்கை அடங்கும் பொழுது உண்மையான தாகத்தை ஏற்படுத்தும். இனி, நீங்கள் தண்ணீரை
அவசரமின்றி நிதானமாக குடிக்கலாம். இது ஆரோக்கியமானது. இந்தப் பாதுகாப்பை நீங்கள்
சற்றே உங்களுடைய உடல் ஆரோக்கியம் கருதி, நிதானித்து மேற்கொண்டு விடுவீர்களானால், உங்களுக்கு சிறு
தும்மல், சளி முதலாவதாக பெரு
வியாதிகளான முடக்குவாதம்,
கான்ஸர்
வரையில் எந்த நோயுமே ஒருபோதும உங்களைத் தீண்டாது என்பதை இந்தத் தருணத்தில்
உங்களுக்காக கற்பிக்கப் படும் இறைஞானமாக நீங்கள் கொள்ளுங்கள்.
ஆனால், இந்த இறைஞானமில்லாத
நிலையில், இப்பொழுது பலவிதமான
நோய்களின் அவற்றினுடைய போக்குகளில் பற்பல காலகட்டங்களில் பெரும் துன்பங்களுடன்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதிலிருந்து சுகமாக குணமடைவதற்கான வழி என்ன
? சற்று சிந்தித்துப்
பார்ப்பீர்களானால,
நீங்கள்
உபயோகப்படுத்த வேண்டியது மேற்சொன்ன இறைஞானம்தான்.
ஆகவே, நீங்கள் செயல்பட
வேண்டிய முறையை இப்பொழுது விள்க்குகிறேன். நோயாளிகள் அனைவரும் அவர்கள்
அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனை எத்தகையதாக இருந்தாலும் சரி, அது எந்த நோயாக
இருந்தாலும் சரி. கவனமாக கேட்கட்டும்.
நாம்
அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு நோயும் உருவாகும் பொழுது உடல் உறுப்புகளின் இயக்க
சக்திகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியாக மாறுகிறது. இதில் மிகப் பிரதானமாக
உயிர் காக்கும் போராட்டத்தில் ஈடுபடக் கூடிய உறுதி மிக்க இயக்க சக்தி வயிற்றின்
இயக்க சக்தியே ஆகும். வயிற்றின் இயக்க சக்திதான்
எந்தவொரு நோய்க்கும் பிரதான எதிர்ப்பு சக்தியாக அமைகிறது. நோயின்
ஆரம்பத்திலிருந்து நோயின் முடிவு வரை வயிற்றின் இயக்க சக்தி நோய் எதிர்ப்பு
சக்தியாக நிலைத்து நிற்கும்.
வயிற்றின் இயக்க சக்தி நோய் எதிர்ப்பு சக்தியாக மாறிவிட்டால், வயிற்றில் அதன் இயக்க
சக்தி இருக்காது என்பதனை நாம் தெளிவாக மனதில் கொள்ள வேண்டும். ஆகவேதான்
பெரும்பாலும் அனைத்து மருத்துவங்களும் ஒன்று பத்தியம் என்ற பெயரிலோ, அல்லது பட்டினி என்ற
பெயரிலோ மனம் போன போக்கில் உணவுக் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். இன்னும்
வயிற்றைக் காயப்போடுவது நல்லது என்று விரதத்தையும் மேற்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏதோ
வயிற்றிலிருந்துதான் நோய்கள் பிறக்கின்றன என்பதை ஓரளவுக்கு உணர்ந்துதான்
இருக்கிறார்கள். இருந்தாலும் அதைப்பற்றிய தெளிவான ஞானமில்லாத நிலையில்
குழப்பத்தையே தங்கள் மருத்துவமாக ஆக்கிக் கொண்டு துன்பத்திலும், வேதனையிலும்
அதிகமாக்கிக் கொள்கிறார்கள். ஆகவே, வாசகர்களே, இப்பொழுது உங்களுக்கு இறையருளைக் கொண்டு தெளிவான ஞானம்
அளிக்கப் படுகிறது. படியுங்கள்.
பலவிதமான நோய்களால்
வாடிக்கொண்டிருக்கும் நீங்கள் இப்பொழுது உணரவேண்டியது உங்கள் வயிற்றில் ஜீரண சக்தி
இல்லை என்பதே ஆகும். ஜீரண சக்தி இல்லையென்றால், அதன் பொருளாவது. உங்களுடைய வயிறானது உணவையோ, அல்லது தண்ணீரைக் கூட
ஜீரணிக்க சக்தியில்லாமல் இருக்கிறது என்பதுவேயாகும்.
ஆகவே, நீங்கள் இனி செய்வது
என்ன ? பசி எடுக்கும் வரையில்
எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது. ஒரு பருக்கை உணவு கூட கூடாது. தண்ணீர் தாகம்
எடுக்கும் வரையில்,
தண்ணீரும்
அருந்தக் கூடாது.
தண்ணீரை ஜீரணிப்பதற்கு
ஜீரண சக்தி அவசியம்
உணவு,
தண்ணீர்
ஆகிய இவ்விரண்டில் எது ஜீரணத்திற்குக் கடினமானது என்பதை உணருங்கள். நிச்சயமாக
தண்ணீரை விட, உணவு கடினமானது.
சக்தியில்லாத நிலையில் எந்த உணவும் அஜீரணத்தை அதிகமாக்கும். அஜீரணமே ஜீரம்
அதிகமாவதற்கும் காரணமுமாகும். ஜீரம் உருவாவதற்கு காரணம் அஜீரணம்தான். ஜீரம்
உருவாகிறது என்றால் அல்லது இருக்கும் ஜூரம் அதிகமாகிறது என்றால், நோய்
உருவாகியிருக்கிறது அல்லது நோயின் தீவிரம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.
நீங்களும் பெரும்பாலும் இதை உணர்ந்திருப்பீர்கள். ஜீரத்தின் போது சாப்பிட்டாலும்
ஜீரம் அதிகமாகும். ஆனால்,
இந்த
அடிப்படை உண்மையை பின்பற்றத் தவறுவது எதில் என்றால், தண்ணீர் அருந்துவதில்தான். தண்ணீரை ஜீரணிப்பதற்கும் ஜீரண
சக்தி தேவை என்பதை நீங்கள் எவ்விதம் உணரத் தவறிவிட்டீர்கள் ? வயிற்றில் ஜீரண சக்தி
இல்லாதபோது, தண்ணீர் தாகம்
நிச்சயமாக இருக்காது. தண்ணீர் தாகம் எடுக்குமானால், வயிற்றுக்கு ஜீரண சக்தி ஓரளவுக்கு திரும்பியிருககிறது
என்பது பொருளாகும். ஆனால்,
உணவை
ஜீரணிக்கக் கூடிய சக்தி வந்துவிட்டது என்பது பொருளல்ல. பசி நன்றாக எடுக்கும்
வரையில் காத்திருக்க வேண்டும். ஏனெனில் உணவை ஜீரணிக்க இன்னும் அதிகமான உறுதியான
சக்தி தேவை. எந்த நோயிலிருந்தும் நாம் விடுதலை பெற இந்த இரண்டு விஷயங்களை தெளிவாக
சிந்தித்து உணர்ந்து செயல்படுங்கள்.
நாம் நோய்களிலிருந்து
விடுபடும் பொழுது மிகவும் பலவீனமாகத்தான் இருப்போம். நம்முடைய சக்தி
நிலைகளும் பலவீனமாகவே இருக்கும். இன்னும் சோர்வாகவும் இருக்கும். ஆகவே, நோய்கள் முறியடிக்கப்
பட்ட நிலையில், நோய் எதிர்ப்பு
சக்தியும் பலவீனமான நிலையில்தான் தத்தம் உறுப்புகளின் இயக்க சக்தியாக மாற
ஆரம்பிக்கிறது. இதன் காரணமாகவே, முதலில் வயிற்றின் இயக்க சக்தி திரும்புகிறது. படிப்படியாக அந்த
இயக்க சக்தி வெகுவிரைவில் வலுப்பெற்று விடும். சிறிய அளவில் இயக்க சக்தி
வயிற்றுக்குத் திரும்ப ஆரம்பிக்கும் பொழுது தண்ணீரின் தேவை அந்த வயிற்றுக்கு மிக
அவசியம்.
ஆனால், தண்ணீரை ஜீரணிக்கும்
தெம்பு அதற்கு இல்லை என்பதை நாக்கு வறட்சியின் மூலம் அது அறிவிக்கிறது. ஆகவே, நாக்கை நனைக்கக் கூடிய
அளவுக்கு அல்லது ஈரப்படுத்தக் கூடிய அளவுக்கு கொஞ்சமாக தண்ணீரை உறிஞ்சி, வாயை ஈரப்படுத்திக்
கொள்வீர்களானால் அது வயிற்றுக்கு மிகப் பெரும் பலத்தை அளிக்கும். பின்னர், அடிக்கடி நாக்கு
வறட்சியுடன் தொண்டை வறட்சியும் ஆரம்பிக்கும். ஆகவே, சிரமம் பாராமல், சலித்துக் கொள்ளாமல் கொஞ்சம் கொஞசமாக தண்ணீரை உறிஞ்சி, நாக்கையும், தொண்டையையும், வாயையும், உதடுகளையும்
ஈரப்படுத்திக் கொண்டே வாருங்கள். முதன்முதலாக தண்ணீரை விழுங்க வேண்டும் என்ற ஆசை
வரும். தானாகத் தண்ணீரைக் குடிக்க ஆரம்பிப்பீர்கள். நாக்கு முதலாக தொண்டை வரையில்
இன்னும் உணவுக்குழல் வழியாகவும் இறங்கி, அந்தக் தண்ணீர் வயிற்றை அடையும்பொழுது, கலகலப்பாக உணர்வீர்கள்.
எப்பொழுது தண்ணீரைக் குடித்ததும் உங்களுக்கு முதல் தெம்பு ஏற்படுகிறதோ, உங்களுடைய நோயின் பாதி
பாகம் உங்களை விட்டும் நீக்கப்பட்டு விட்டது என்று நீங்கள் கொள்ளுங்கள்.
விஷங்களாகும் பால், டீ, காபி
தண்ணீர் குடிக்க
ஆரம்பித்ததும் உங்கள் ஜூரம் வேகமாகக் குறைய ஆரம்பித்து விடும். உங்களுடைய
வயிற்றின் ஜீரணத்திறன் இப்பொழுது அதிகமாகி விடும். இலேசாக பசி எடுப்பது போன்ற
உணர்வு ஏற்படும். இருந்தாலும் அவசரப்பட வேண்டாம். இன்னும் அசதியும், ஜூர உணர்வும் இலேசாக
இருக்கத்தான் செய்கிறது. முற்றிலுமாக ஜூரம், அசதி உணர்வுகள் பூரணமாக நீங்கும் வரையில் கண்டிப்பாக
உணவு கூடாது. பால்,
டீ, காபி போன்றவை அனைத்தும்
கூட உணவு வகைகளைச் சார்ந்ததுதான். ஆகவே, இவை பாதகமானதாகும். பலரும் ஜூரம் இருந்து கொண்டிருக்கும்
போதே, பால், டீ, காபி போன்றவற்றையும்
இன்னும் ஹார்லிக்ஸ்,
காம்ப்ளான், வீவா, பூஸ்ட் போன்ற
கேடுகளையும், இன்னும் ரொட்டி, பன், பிஸ்கட் போன்ற மகாக் கேடானவைகளைளையும்
வேளாவேளைக்குக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அறிவார்களாக. நீங்கள்
உணவைக் கொடுக்கவில்லை. விஷத்தைக் கொடுக்கிறீர்கள். ஓரிரு நாளில் குணமாக வேண்டிய
நோய்கள் அனைத்தையும் இதன் காரணமாக, அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும், சாகும் வரையில்
அனுபவிக்க வேண்டிய அனைத்துக் கேடுகளையும் இப்பொழுது நீங்கள் ஊட்டிக்
கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து திருந்துங்கள்.
தாக உணர்வு முழுமையாக
ஏற்பட்ட பின்னர்தான் பசியுணர்வுக்கு உணவளியுங்கள். தாகம் நன்றாக ஏற்படும் பொழுதே
ஜூரம் அடங்கி விடும். ஜூரம் முழுமையாக நீங்கின பிறகு உருவாகும் பசிதான் உண்மையான
பசியாகும். வயிற்றுக்கு ஜூரணத்திறன் முழுமையாக வந்துவிட்டது என்பதை அறிவிக்கும்
பசியாகும். எனவே,
பாதி
ஜூரம் குறைந்தும்,
குறையாமலும்
இருக்கும்பொழுது,
பசியுணர்வு
இருந்தாலும், பசிக்கிறது என்று
கேட்டாலும், அது பொய்யான பசியாகும்.
ஆகவே, அவசரப்பட்டு உணவைக்
கொடுத்துவிடாதீர்கள். இன்னும், சில மணிநேரங்கள் தாமதியுங்கள். அல்லது ஒரு நாள் பொறுத்திருங்கள்.
ஜூரம் முழுமையாக நீங்கி,
தெளிவான பசி உருவாகும். இப்பொழுது நீங்கள் விரும்பும் ஆகாரத்தைக் கொடுங்கள்.
வாசகர்களே. தாகத்தையும், பசியையும் கொண்டு
உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தாகமில்லாமல் தண்ணீர் வேண்டாம்.
பசியில்லாமல் எந்த உணவும் வேண்டாம். தண்ணீர் தாகம் இல்லையென்றால், தாகம் எடுக்கும்
வரையில் உணவைத் தள்ளிப் போடுங்கள். உங்கள் குழந்தைகள் தண்ணீர் நன்றாகக்
குடிக்கும். சாப்பிடும் வேளையில் கூட தண்ணீர் குடிக்கும். ஆனால், நீங்கள் தடுப்பீர்கள்.
ஏனென்றால், தண்ணீர்
குடித்துவிட்டால் சாப்பிட முடியாது என்ற அடிப்படையில் இது நல்லதல்ல. உணவைவிட
தண்ணீர் மிக முக்கியமானதாகும். தண்ணீர் அருந்திய பிறகு பசி எந்த அளவுக்கு
இருக்கிறதோ, அந்த அளவுக்கு உணவை
உட்கொள்வதே நீடித்த நல்வாழ்வுக்கு சிறப்பான வழியாகும்.
வாசகர்களே. இறை
ஞானங்களிலிருந்து மிக அழகான பகுதி உங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. இது
உங்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம். இந்த இறை
ஞானங்களை நீங்கள் கிடைக்கப்பெற்றதற்காக இறைவனுக்கு நன்றியுடன் இருங்கள். இன்னும்
அதிகமான ஞானங்களுக்காகவும்,
உங்கள்
வளமான வாழ்க்கைக்காகவும் நீங்களும் இறைவன் பக்கம் திரும்புங்கள்.
நன்றி: " புதிய அக்குபங்சர் உங்களுக்காக...!" என்ற மருத்துவ நூல்.