திங்கள், 27 ஏப்ரல், 2015

பேசக் கூடாத விஷயமா மாதவிடாய் (Menses) ?

             அக்குபங்சர் ஹீலர்களாகிய நாம் மாதவிடாய் என்பதை நீர் மூலகத்தின் கழிவு நீக்கமாக கருதுகிறோம். அக்குபங்சர் மருத்துவமும் மாதவிடாய் என்பதை நீர் மூலகம் மாதந்தோறும் வெளியேற்றும் கழிவு நீக்கமாகத்தான் உலகம் முழுவதும் கருதுகிறது.நீர் மூலகம் நிலம் மூலகத்தின் மூலம் அதிகம் பாதிக்கப் பட்டால் இரத்தப் போக்கு அதிகமாகவும், அதே நீர் மூலகம் காற்று மூலகத்தின் மூலம் அதிகம் பாதிக்கப் பட்டால் வெள்ளைப் படுதல் அதிகமாகவும் இருக்கும் என்பதன் அடிப்படையில் நாம் அதற்கேற்ப சிகிச்சை அளித்து வருகிறோம். அதே நீர்மூலப் பொருளின் உறுப்பான கர்ப்பப்பையில் குழந்தை கருக்கொள்ளும் போது மாதவிடாய் நின்று விடுகிறது. இவ்வாறு பெண்களின் உடலின் ஒரு இயற்கையான கழிவு நீக்கமே மாதவிடாய்  என்பதனை நமது சமூகத்தில் பேசக் கூடாத ஒரு விஷயமாக கருதப் பட்டு அது எவ்வாறெல்லாம் சமூகப் பார்வையில் பார்க்கப் படுகிறது என்பது குறித்து "இந்து" தமிழ் நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்று நமது அனைவரின் நலன் கருதி இணைய தளத்தில் வெளியிடப் படுகிறது.  
                             பேசக் கூடாத விஷயமா மாதவிடாய்  (Menses)
                                                                                                        என் கௌரி.
                                         பெண் உடலில் நடக்கும் இயல்பான உடலியல் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படையாக பேசுவது இன்னமும் நம் சமூகத்தில் அருவருப்பானதாகவும்,அவமானமாகவும் பார்க்கப் படுகிறது. மாதவிடாய் என்பது வெளிப்படையாக பேசக் கூடாத விஷயமல்ல.பெண்களின் உடலியல் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டிய கடமை மனித சமூகத்துக்கு இருக்கவே செய்கிறது.மனித சமூகத்துக்குள் ஆண்களும் அடக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் ஒரு பெண் பூப்பெய்தும்போதே அவளுக்கு அளிக்கப் படும் முதல் அறிவுரை தன் அப்பாவிடம் கூட மாதவிடாயைப் பற்றி பேசக் கூடாது என்பதுதான்.
                                             மாதவிடாயின் போது ஒரு பெண் அசுத்தமாக இருக்கிறாள்.அவள் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் அசுத்தமானது.அதனால் அவள் கோயிலுக்குச் செல்லக் கூடாது, சமையலறைக்குள் செல்லக் கூடாது, ஊறுகாயைத் தொடக் கூடாது போன்றவற்றை இப்போது்ம் நாம் எதிர் கொள்ளவே செய்கிறோம்.
                                   மாதவிடாயைச் சுற்றி சுழலும் இந்த மாதிரியான கற்பிதங்களை உடைக்கும் விதமாகப் பல விழிப்புணர்வு முயற்சிகள் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றன.சமீபத்தில் டெல்லிப் பல்கலைக் கழக மாணவர்கள், ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் ஆகியோர் இணைந்து அப்படியொரு விழிப்புணர்வு பேரணியை நடத்தியிருக்கிறார்கள்." கம் அண்ட் ஸீ தி பிளட் ஆன் மை ஸ்கர்ட்" (Come and see the blood on my skirt) என்ற அந்தப் பேரணியில் மாணவர்கள், மாணவிகள்,பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர். பெண்கள் மாதவிடாயின்போது தாங்கள் சந்திக்கும் பல்வேறு விதமான பிரச்சினைகளைப் பற்றி அந்த அணி வகுப்பில் விவாதித்திருக்கிறார்கள்.சமூகம் மாதவிடாயைப் பார்க்கும் பார்வை இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் "பிசிஓடி" (Polycystic ovary disorder) என்னும் மாதவிடாய்ப் பிரச்சினையைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள்.இந்த முயற்சியை பல தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள்.
                                         இந்தப் போராட்டங்களுக்கான முன்னுதாரணங்களை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சேர்ந்த பத்தொன்பது வயது எலோனா கஸ்ட்ராட்டி.சானிட்டரி நாப்கின்களில் பெண்ணிய வாசகங்களை எழுதிப் பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஒட்டுவதன் மூலம் "பேட்ஸ் அகெய்ன்ஸ்ட் செக்ஸிஸம்"( Pads against sexism) என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார்.இது சமூக வலைத்தளங்களில் விரைவாகப் பரவியது.இந்தப் போராட்ட வடிவத்தை முன்மாதிரியாக வைத்து ஜமியா மிலியா பல்கலைக் கழக  மாணவர்கள் அதே பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.ஆனால் இந்த "பேட்ஸ் அகெய்ன்ஸ்ட் செக்ஸிஸம்:” பல்கலைக்கழக நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாதவிடாய் சம்பந்தமான எல்லா விஷயங்களும் சமூகத்தில் பேசக் கூடாத விஷயமாக இருப்பது அவர்களுக்குப் புரிந்தது.அதன் விளைவுதான் கடந்த வாரம் நடைபெற்ற   கம் அண்ட் ஸீ தி பிளட் ஆன் மை ஸ்கர்ட்" பேரணி.
                                               அத்துடன் சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமும் (Instagram) ஒரு பெண் தன் மாதவிடாயின் போது எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்தபோது அதை நீக்கியது.பிறகு அதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பியதும் அந்தப் படத்தை மறுபடிய்ம் பதிவிட்டது.இப்படி பெண்ணின் மாதவிடாயை ஏற்றுக் கொள்ள முடியாத மன்பான்மைதான் அதிகமாக நிலவுகிறது. கம் அண்ட் ஸீ தி பிளட் ஆன் மை ஸ்கர்ட்"பிரச்சாரம் மாதவிடாயைச் சமூகம் பார்க்கும் பார்வையை மாற்றுவதற்கான ஒரு தொடக்கம் என்கின்றனர் இந்தப் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்த மாணவர்கள். மாதவிடாய் என்பது ஒரு பேசக் கூடாத விஷயமல்ல என்பதை இந்தச் சமூகம் புரிந்து கொண்டால்தான் பெண்ணுடல் குறித்த ஆண்களின் தவறான பார்வை ஓரளவுக்காவது மாறும்.

                                                                                             நன்றி; இந்து தமிழ் நாளிதழ்  26 .04. 2015

வியாழன், 9 ஏப்ரல், 2015

பிடித்ததை சாப்பிடு !

பிடித்ததைப் பிடி
நமது நாக்கிற்கு எந்த உணவு பிடிக்கிறதோ, அது நமக்கு நல்லது. அதே சமயம் எந்த உணவு பிடிக்கவில்லையோ அந்த உணவு நமக்குக் கெட்டது. அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
உதாரணமாக ஒருவர் தனக்கு ஆப்பிள் பிடிக்கிறது என்று கூறுவார். அவருக்கு நீங்கள் 15 ஆப்பிள் பழங்களைக் கொடுத்து சாப்பிடச் சொல்கிறீர்கள். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் 3 நாட்களுக்கு வேறு எந்த உணவும் கொடுக்காமல் ஆப்பிள் பழத்தையே அவருக்கு பசி ஏற்படும் பொழுதெல்லாம் கொடுத்து கொண்டு இருங்கள்.
இரண்டாவது நாள் அல்லது மூன்றாவது நாள் அவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை ஆப்பிள் என்றாகிவிடும்.
இன்று பிடித்த ஆப்பிள் பழம் மூன்று நாட்களுக்கு பிறகு அவருக்கு ஏன் பிடிக்காமல் போய்விட்டது என்பதை யோசித்துப்பாருங்கள்.
அதாவது எப்பொழுது நமது நாக்கு ஒரு உணவு, காய்கறி, பழங்கள் பிடிக்கிறதோ அந்த உணவில் உள்ள தாதுக்கள், உயிர்ச்சதுக்கள், பிராணசக்தி போன்றவை நமது உடலில் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
முதல நாளில் ஆப்பிள் ஏன் பிடித்தமானதாக இருந்தது என்றால் ஆப்பிளில் உள்ள தாதுக்கள், உயர்ச்சதுக்கள், பிராணசக்தி போன்றவை நமது உடலில் குறைபாடக இருந்திருக்கின்றன. இரத்தத்தில் சில தாதுக்கள் குறைவாக இருந்திருக்கிறது. அந்தப் பொருட்கள் அந்த ஆப்பிள் பழத்தில் இருந்திருக்கிறது. எனவே ஆப்பிள் நமக்கு பிடித்திருக்கிறது.
மீண்டும் மீண்டும் ஒரே பொருளை சாப்பிடும்பொழுது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல நமது உடலில் அந்த தத்துவம் வேலை செய்துகொண்டே இருக்கிறது. ரத்தத்தில் மற்றும் உடலில் தேவைப்படும் சத்துக்கள் போதுமான அளவுக்கு சேர்ந்துவிட்ட நிலையில் திருப்தி அடைந்து விட்ட நிலையில் நமக்கு அந்த ஆப்பிள் தேவைப்படுவதில்லை. எனவே ஆப்பிள் நமக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது.
கால்சியம், அயன், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை நம் உடலுக்குத் தேவைப்படும் தாதுக்கள் என்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லும்பொழுது நமது உடல் இதை வேண்டாம் என்று முடிவெடுத்து நிராகரித்து விடுகிறது. உடலை விட்டு வெளியேற்றுகிறது.
எனவே எப்பொழுது ஒரு உணவு பிடிக்கிறதோ அதை ஆசையாக தாராளமாக சாப்பிடுங்கள். அதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் எப்பொழுது ஒரு உணவு பிடிக்கவில்லையோ, அது இலவசமாய் கிடைத்தாலும் தயவுசெய்து அதை தவிர்த்து விடுங்கள், மற்றவர்களையும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்த வேண்டாம். ஏனென்றால் மனதுக்குப் பிடிக்காமல் சாப்பிடும் ஒவ்வொரு கவளம் உணவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
அது எப்பிடி தீங்கு விளைவிக்கிறது என்றால், மூன்றாவது நாள் ஆப்பிளை நாம் பிடிக்காமல் சாப்பிடும் பொழுது அதை ஜீரணிக்க வேண்டிய சக்திகள் அனைத்தும் நமக்கு விரயமாகிறது மேலும் சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகள் அந்த சத்துப்பொருட்களை கழிவுகளாக மாற்றி அதை சிறுநீரகம் வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே நமது உடலில் உறுப்புகளுக்கு தேவையில்லாத வேலைப்பளு அதிகமாகிறது. எனவே பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும்.
பொதுவாக இப்பொழுது உள்ள மருத்துவத் துறையினரால் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தபடுகிரார்கள். உப்பு சாப்பிடாதீர்கள் BP அதிகரிக்கும் என்று எச்சரிகிரார்கள். கசப்பு, துவர்ப்பு, நாமே சாபிடுவதில்லை. காரம் சாப்பிட்டால் தோல் நோய் வரும் என்று பயமுறுத்துகிறார்கள். புளி சேர்த்துக் கொள்ளவேண்டாம் முழங்கால், மூட்டுகளில் வலி வேதனை ஏற்படும் என்கிறார்கள்.
பூமிக்கு கீழ் விளையும் பொருட்களை உணவாக கொள்ளவேண்டாம் வாயுத்தொல்லை ஏற்ப்படும் என்கிறார்கள். தக்காளியை சேர்த்துக்கொண்டாலோ சிறுநீரகத்தில் கல்வரும் என்று பயமுறுத்துகிறார்கள். உருளைக்கிழங்கு சேர்த்துக்கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படும் என்று புத்திசாலிகள் அறிவுரை சொல்கிறார்கள் கத்தரிக்காய் வேண்டாம், தோலில் நோய் வருமென்று உளறுகிறார்கள்.
நன்றாக யோசித்துப்பாருங்கள். இப்படி ஒவ்வொரு உணவிற்கும் ஏதாவது காரணம் கூறி சாப்பிட வேண்டாம் என்று தடை போடுகிறார்கள்.
இப்பொழுது உள்ள மருத்துவத் துறையினரால் சாப்பிடக்கூடாது என்று அவர்கள் குறிப்பிடும் உணவுகளை எல்லாம் எடுத்து ஓரமாக வைத்துவிட்டால் உங்கள் உணவுத்தட்டில் சாப்பிட ஒன்றுமே இருக்காது. கடைசியில் மருந்து மாத்திரைகள் மட்டுமே தவறாமல் சாப்பிட சொல்லி அறிவுறுதபடுகிறார்கள். மருந்து மாத்திரைகளையே ஜீரணம் செய்யும் இந்த உடலுக்கு பழங்களை ஜீரணம் செய்யத் தெரியாதா? தக்காளியை ஜீரணம் செய்யத் தெரியாதா? நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளில் மட்டுமே இருக்கிறது.
எனவே தயவு செய்து எந்த ஒரு சுவையையும் எந்த ஒரு உணவுப் பொருட்களையும் ஏதாவது காரணம் கூறி ஒதுக்கிவிடாதீர்கள் அனைத்துமே உடலுக்கு நல்லதுதான்.
எப்பொழுது ஒரு உணவை, இயற்கையாய் படைக்கப்பட்ட உணவை சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்களோ அவர்கள், அவை எல்லாவற்றையும் படைத்தது அவற்றிற்கான உணவையும் படைத்த இறைவனை முட்டாள் என்று கூறுகிறார்கள் என்று அர்த்தம்.
சப்போட்டா பழம் மனிதனுக்கு உடல் நலத்தில் தீங்கு விளைவிக்கும் என்று யாராவது கூறினால் எனக்கு சிரிப்பு மட்டுமே வரும். பழங்கள் சாப்பிடாதீர்கள், குழந்தைகளுக்கு சளிபிடிக்கும் என்று யாராவது கூறினால் நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். இவர்கள் அனைவரும் துரோகிகள். கடவுளுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.
இறைவன் படைத்து உணவாக அளித்த ஒன்றை சாப்பிடக்கூடாது என்று கூறுவது எவ்வளவு முட்டாள் தனமான பேச்சு. எனவே தயவு செய்து இனிமேல் எந்த உணவையும் மறுக்காதீர்கள். நிம்மதியாக சாப்பிடுங்கள். யாரோ நம்மை ஏமாற்றி வருகிறார்கள். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக நான் எப்படி உணவை சாப்பிடுவேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்த முறையை நீங்களும் பின்பற்றினால் உணவை மருந்தாக மாற்றுவது மிகவும் சுலபம்.
நான் என் உணவை வீட்டிலோ அல்லது ஓட்டலிலோ எடுத்துக் கொள்வது வழக்கம். தயரிக்கபட்டிருக்கும் உணவு வகைகள் எல்லவற்றையும் நாம் சாப்பிடும் இலையிலோ அல்லது தட்டிலோ சிறிதளவு அனைத்து வகைகளிலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை வீட்டில் தயாரிக்கப்படும் உணவில் இட்லி, சப்பாத்தி, பொங்கல், பூரி, என நான்கு வகைகள் இருந்தால் நாம் எப்படி சாப்பிடுகிறோம். முதலில் நான்கு இட்லிகளை சாப்பிட்டுவிடுகிறோம். பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பதைப் பற்றி கவனிப்பது கிடையாது. பிறகு? வேறு வழி இல்லாமல் சப்பாத்தி, பூரி, பொங்கல் என அவற்றையும் அடுக்கிக்கொள்கிறோம். இப்படி சாப்பிடக்கூடாது.
முதலில் ஒரு இட்லி, ஒரு சப்பாத்தி, கொஞ்சம் பொங்கல், ஒரு பூரி என தட்டில் எத்டுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இப்பொழுது நமது வீட்டில் சமைக்கப்பட்டிருக்கும் உணவில் அனைத்திலும் கொஞ்சம் நம் தட்டில் இருக்கிறது. பிறகு நான்கு வகைகள் கொண்ட உணவிற்கு தேவையான சட்னி, சாம்பார் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும். முதலில் இட்லியை எடுத்து வாயில் இட்டு மென்று சுவைத்து விழுங்கவேண்டும். அடுத்து இப்படியே ஒவ்வொரு வகையிலும் உள்ள உணவை சசிறிதளவு எடுத்து மென்று சுவைத்துப் பார்க்கவேண்டும்.
உதாரணத்திற்கு உங்களுக்கு முதலில் சப்பாத்தி சாப்பிட தோன்றுகிறது. சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள் சிறிது சாப்பிட்டவுடன் பிடிக்கவில்லை என்றால் சப்பாத்தி சாப்பிடவேண்டாம். பிறகு இட்லி சாப்பிடுகிறீர்கள். இட்லி பிடிக்கிறது. இட்லியில் உள்ள தாது பொருட்கள் உடலுக்கு தேவையாக இருக்கிறது. அதை சாப்பிடலாம். சப்பாத்தியில் உள்ள தாது பொருள் உடலுக்கு தேவையில்லை. எனவே அதை ஒதுக்கிவிடலாம். அதே போல் மீதமுள்ள உணவு வகைகளையும் இப்படியே சுவைத்து பார்த்து பிடிக்கிறது எனில் சாப்பிடலாம். பிடிக்காததை ஒதுக்கிவிடலாம். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை. பிடிக்காத உணவயும் தட்டில் வைத்து விட்டார்களே என்ற காரணதிற்க்காகவே நிறைய பேர் பிடிக்காத உணவை சாப்பிட்டு விடுவதை வழக்கமாகவே செய்து வருகின்றனர்.
பஃபே சிஸ்டம் என்று புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள (சுயசேவை முறை என்றும் சொல்லலாம்) முறையில் எல்லாவகை உணவுகளையும் கொண்டுவந்து டேபிளில் வைத்துவிடுவார்கள். அவரவர்க்கு எது விருப்பமோ அதே உணவை விரும்பிய அளவு சாப்பிடலாம் என்ற முறையில் தற்பொழுது பரவலாக இம்முறை வழக்கத்தில் உள்ளது. நிறைய உணவகத்திலும் இம்முறை கையாளப்படுகிறது. பெரும்பாலும் விழாக்களில் இதை காண முடிகிறது. இது ஒரு நல்ல வரவேற்க்கதக்க உணவு முறை. ஏனெனில் நமக்கு எது பிடிக்கிறதோ அந்த உணவை விரும்பி உண்பதற்கான சிறந்த முறை இது.
எனக்கு இந்த முறையில் உணவு வழங்கப்படுவதாயின் மிகவும் சந்தோசமாக சாப்பிடுவேன்.
உதாரணமாக நான் பல ஊர்களுக்கும், பல நாடுகளுக்கும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக சென்று வரும் பொழுது, அங்கிருக்கும் ஓட்டல்களில் உணவு உண்ணும் பொழுது இந்த மாதிரி பஃபே சிஸ்டத்தில் உணவு உண்ண வாய்ப்பு கிடைக்கிறது. அப்பொழுது நான் என்ன செய்வேன் என்றால் இரண்டு மூன்று தட்டுகளில் அங்கு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் எல்லாவற்றிலும் இருந்து கொஞ்சம் எடுத்து தட்டுகளில் போட்டுக்கொள்வேன். அதே போல எல்லா வகை பழங்கள், நெய், தேன், ரொட்டி, பொரியல் வகைகள் என அனைத்து வகைகளில் இருந்தும் கொஞ்சம் எடுத்துக்கொள்வேன்.
நீங்கள் இம்மாரியான உணவு வகைகள் சாப்பிடும் பொழுது எல்லாவற்றிலும் சிறிது சிறிது எடுத்து கொண்டு வந்து சாப்பிட அமருங்கள். சில உணவுப் பொருட்கள் ஒருவாய் சாப்பிடும்பொழுதே பிடிக்காது என்று தெரிந்து விடும். சில உணவு பொருட்கள் பார்க்கும் பொழுது நன்றாக இருக்கும். ஆனால் சாப்பிட நன்றாக இருக்காது. சில பொருட்கள் பார்க்கும் பொழுது பிடிக்காது ஆனால் சாப்பிடும் போது நமக்கு பிடிக்கும். இந்த உண்மையை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே உணவை பார்த்தவுடன் பிடித்தது, பிடிக்காதது என்று ஒதுக்காமல் எல்லவற்றையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு வரவேண்டும். பிறகு வாயில் வைத்து சுவைக்க வேண்டும். எது பிடிக்கவில்லையோ அதை ஒதுக்கிவிட்டு பிடித்த உணவை சாப்பிடவேண்டும். அதே சமயம் பிடித்த உணவையே பிடித்தது என்பதற்காக அதன் சுவை திகட்டி விட்ட பின்பும் தொடர்ந்து சாப்பிடக்கூடாது. உதாரணத்திற்கு கிச்சடி நமக்கு பிடித்த உணவு என்பதற்கு அதில் ஒரு மூன்று நான்கு கரண்டிகள் எடுத்து வந்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். கொஞ்சம் சாப்பிட்டவுடன் அதன் சுவை நமக்கு திருப்தி ஏற்பட்டு இனி போதும் வேறு ஏதாவது வகை உணவு சாப்பிடலாம் என்று தோன்றினால் மேற்கொண்டு மீதம் இருக்கும் கிச்சடியை சாப்பிடாமல் வைத்துவிடலாம். வேறு உணவை சுவைத்துப் பார்த்து அது பிடித்திருந்தால் அதை சாப்பிடலாம்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நமது நாக்குக்கு எந்த சுவை பிடிக்கிறதோ அதை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். எது பிடிக்கவில்லையோ அந்த உணவை சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். நமக்கு பிடித்த உணவை சாப்பிடுவது மருந்தாக செயல் படும். எனவே பிடிக்காத உணவை சாப்பிடவேண்டாம்.
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியமாகும்.

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அமைதியும் ஆரோக்கியமும்)

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

மூளைச் சாவு (BRAIN DEATH)

"மூளை இறக்குமா?..."
ஒருவருக்கு உயிர்இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்...
பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...
ஆனால்?...........இன்றோ!!!?
மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!
இரத்த ஓட்டம் இருக்கின்றது!
நாடி துடிப்பு இருக்கின்றது!
இதயத்துடிப்பும்இருக்கின்றது!
இருந்தும்...
மூளை இறந்துவிட்டது என்றுசொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது...
உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள்...
மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்...
மூளை இறந்துவிட்டது என்றுசொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...
மூளை இறக்குமா?
அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?
மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே...
நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...
பதில் சொல்லுங்கள்...
இறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...
காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கிகொண்டுதானிருக்கின்றது...
மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது இயங்கிகொண்டுதானிருக்க
ஹும்...
சிந்தியுங்கள்...
மக்களே!...
இதுஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!
இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான்
மிகக்கொடுமை...
உறுப்புதானங்களுக்கு நாம் எதிரியல்ல...
இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நாம் எதிர்க்கவில்லை...
உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின்உறுப்புகளை தானம் பெறுவதையும் நாம் எதிர்க்கவில்லை...
(இவ்வாறு உறுப்பு தானம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளின் கஷ்டங்களை ஆங்கில மருத்துவம் வெளிப் படுத்துவதில்லை.)
நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில்முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கிகொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்றுசொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்...
இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை!
பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை!!!
பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!
இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...
இனியாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது...
அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போகக் கூடாது...
காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து
உறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள்...
இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை
மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா?...
செய்ய மாட்டார்கள்...
மக்களே!
எச்சரிக்கையாக இருங்கள்!!
இவர்களின்நோக்கம் பணம் தான்...
மக்கள் நலமல்ல!!! என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
நம் மக்களும்,மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை...
கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் "Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.
கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர்பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.
அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ளஅவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்...
இதுஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.
உலகில்எத்தனையோ விதமான மருத்துவங்கள் இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும் கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை அப்படியே அரசும் மக்களும் நம்பியதால் இவர்கள் இந்த அளவுக்குவளர்ந்துவிட்டார்கள்.
1947-
ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம் விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த ஆங்கிலமருத்துவத்தையும் விரட்டியிருக்க வேண்டும்...
அப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும் சுதந்திரம் அடைந்து ஆங்கிலமருத்துவத்திற்கு அடிமையானதின் விளைவுதான் இன்று நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்...
இந்தியமருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே நோயை குணப்படுத்தும் சீன மருத்துவமான அக்குபஞ்சர் ஆகியவை இருக்க, மற்றும் ஆங்கிலமருத்துவத்தின் கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் உலகுக்கு வழங்கிய "ஹோமியோ மருத்துவம்"இது போன்ற நல்ல மருத்துவங்கள் எல்லாம் இருக்க
அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக இவர்களை பின் பற்றியதின் விளைவுதான் இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை எடுக்கிறார்கள்...
இந்தியமெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் என்றுபெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு அதில்ஆங்கில மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு அரசாங்கம் சேவகம் செய்வதால் தான் இந்த அவலங்களை, கொடுமைகளை நாம் அனுபவிக்கின்றோம்.
இந்தியமெடிக்கல் கவுன்சிலில் நமது இந்தியமருத்துவமும் இல்லை...
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்தமருத்தவமும் இல்லை...
மக்களே சிந்தியுங்கள்!...
நம் வரிப்பணத்தில் அந்நியநாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும்
புரிந்து கொள்ளுங்கள்...
திறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு மருத்துவங்களை படித்தபல இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில் தெரியாமல் போனதற்கும் அவர்கள் திறமை பயன்படாமல் அமுங்கி போனதற்கும் மக்களாகிய நாமும், அரசும் தான் காரணம்.
இந்த மருத்துவங்களுக்காக தேவையான உதவிகளை அரசு செய்திருக்குமானால் விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும் பெற்றிருக்கும்.
சமீபத்தில்198 ஆம்புலன்சுகளை வழங்கிய நம் தமிழகஅரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்!...
அரசும் இதனை உணர்ந்துசெயல்பட வேண்டும்!...
மேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில் கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி அரசாங்கம் இதை உடனடியாக தடுக்கவேண்டும்.
ஆங்கிலமருத்துவ கொடுமைகளிலிருந்து விடுதலை பெற நாம் தெளிவு பெற வேண்டும். அதற்காக முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும்.
நமதுவாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியமாகும்...
அதாவது,
"
கழிவின் தேக்கம் வியாதி..."
"
கழிவின் வெளியேற்றம் குணம்..."
"Accumulation of waste / toxins in our body is disease
  Elimination of waste / toxins is cure"
இதை மக்களுக்கு புரியவைப்பதே நமது நோக்கம்.
"
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"-திருக்குறள்.
அதாவது,
"
எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளாமல் உண்மை எதுஎன்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்."
நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்...
மருந்துகள் மற்றும்அழகுசாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கிலவைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.
அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.
ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல்
பின்வருமாறு:-
1.
எய்ட்ஸ் (AIDS)
2.
நெஞ்சுவலி (Angina)
3. குடல்வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6.
தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8.
உடலில்தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய் வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்றுகூறுவது.
12.
பிறவிக் கோளாறு
13.
காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15.
கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16.
வலிப்புநோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18.
உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.
19.
மார்பக வளர்ச்சிக்கு
20.
புரையோடிய புண் (Gagerence)
21. மரபணுநோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும்குறைந்த இரத்த அழுத்தம் (Blood Pressure)
26.
விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி,ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31.
ஆண் உறுப்புவளர்ச்சி,வீரியம்
32.
பற்களை உறுதிப்படுத்த
33.
மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம்அதிகப்படுத்தல்
37.
மூளை வளர்ச்சிக் குறைவு
38.
மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41.
உடல் நடுக்கம்(Parkinson)
42. மூலநோய் மற்றும்பவுத்திரம் (Piles)

43. வாலிப சக்தியை மீட்க
44.
குறைந்த (இள) வயதில்முதிர்ச்சியடைந்த தோற்றம்
45.
குறைந்த (இள) வயதில்தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும்முதுகுத்தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்(Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51.
காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).
மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்திய  சட்டம்  சொல்கிறது. மக்களே!
இனிமேலாவது விழிப்படையுங்கள்!!!
உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்!..
இந்த தகவல்கள் உண்மை என உணர்ந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்