சனி, 25 நவம்பர், 2017

அனைத்து நோய்களுக்கும் முக்கிய காரணம் நுரையீரலின் இயக்கக் குறைவே !





நாம் ஒரு  குற்றம் செய்து விட்டால், அல்லது  அதனைச் செய்யும் நிலையில் பிறர் பார்த்து விடுவார்கள் என்ற பயம் தோன்றும் போது மார்பு படபடக்கிறது. மூச்சிரைக்க ஆரம்பிக்கிறது. வியர்க்கவும் செய்கிறது. இம்மூன்றும் நம் குற்றத்தை நமக்கு அறிவுறுத்தும் எச்சரிக்கை உணர்வுகளாகும். இம்மூன்றும் நம் குற்றத்தை நமக்கு அறிவுறுத்தும் எச்சரிக்கை உணர்வுகளாகும். இந்த பயம், படபடப்பு, வியர்வை போன்ற எச்சரிக்கை உணர்வுகளை அடக்கும் சக்தி மனிதர்களிடம் இல்லை. இந்த எச்சரிக்கைகள் நமது குற்றங்களை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; அவன் நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பதிலிருந்தும் நாம் நம்மை அவனிடமிருந்து மறைத்துக் கொள்பவர்கள் இல்லை என்பதை மார்பு படபடப்பும், பயம், வியர்வை, மூச்சிரைப்பு போன்றவை உணர்த்துகிறது.
       நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நன்றாக அறிந்தும், நம்மையே  அறியாமலும் தவறுகள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். முதன்முறையாக தவறு செய்யும் போது இறைவன் நம்மிடம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எச்சரிக்கிறான். ஆனால் அவனை உதாசீனப்படுத்தி நம் தவறுகளில் நிலைக்கும் போது நம்மீது ஒரு குறிப்பிட்ட காலத் தவணையின் பேரில் நமக்குரிய தண்டனை பிற்படுத்தப் படுகிறது.
       பயமும், படபடப்பும், மூச்சிரைப்பும் முதன்முறையாக தவறு செய்யும் போது ஏற்படுகிறதே, அதுதான் உடல் உறுப்புக்களின் உறுப்புக்கள் இயற்கை உணர்வுகளுடன் உண்மையைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தருணமாகும். நாம் திருத்திக் கொள்ளாமல் நம் தவறுகளிலும், குற்றங்களிலும் நிலைத்திருக்கும் போது இறைவன் தன் எச்சரிக்கைகளை உணராத வண்ணம் நுரையீரல்களை உணர்வுகள் அற்றதாக்கி விடுகிறான். இதுவே நுரையீரல்கள் தன் உணர்வுகளை இழக்கக் காரணமாகி விடுகிறது. வெளிப்புறச் சூழலின் வாயு மண்டலத்தின் வாயுக்களை சரிவிகிதத்தில் உணர்ந்து கிரகிக்கக் கூடிய தன்மையை இழந்து விடுகிறது. இதுவே அனைத்து நோய்களும் உருவாகக் கூடிய சூழலை உருவாக்கி விடுகிறது.
              டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் MBBS DV MD PhD (Acu)
              நன்றி;  ஹெல்த் டைம் அக்டோபர் 2017 மாத இதழ்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக