சனி, 21 மார்ச், 2015

மருந்தே உணவானால் மக்கள் பொருளாதாரம் என்னவாகும் ?

இந்தியாவின் முதல் பெரும்பணக்காரர் திலிப் சங்வி - செய்தி சொல்வதென்ன !
ஒரு காலத்தில் நம் தேசத்தில் பெரும்பணக்காரர்கள் என்ற போட்டி டாட்டா மற்றும பிர்லா இடையிலே இருக்கும்
பிறகு ரிலையன்ஸ் திருபாய் அம்பானி பிறகு அவரின் மகன்கள்
ஆனால் இந்த ஆண்டு இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரராக சன் மருத்துவ குழுமத்தின் நிறுவனர் திலிப் சங்வி ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியை ஓரங்கட்டி விட்டு வந்திருக்கிறார்
சொத்து மதிப்பு 154000 கோடிகள் சற்றேறக்குறைய
நமது நாட்டின் மதிப்பு மிக்க மருந்து நிறுவனங்களான க்ளாஸ்கோ, ஃப்சைர், சிப்லா, ரன்பேக்ஸி, டாக்டர் ரெட்டிஸ், மைக்ரோலேப்ஸ் ........... எல்லோரையும் பின்னுக்கு தள்ளி இந்த மருந்து நிறுவன அதிபர் முன்னால்.
இன்னொரு செய்தி இவர் தான் உலகின மிகப்பெரிய மருந்து தயாரிக்கும் தொழில் பணக்காரர் உலக பிரசித்தி பெற்ற ரேன்பேக்ஸி நிறுவனத்தையும் வாங்கப் போகிறாராம்
ஆனால் இது நல்ல அறிகுறியாக இல்லை
ஏனென்றால் ஒரு நாட்டில் விவசாயி ஒருவர் முதல் பணக்காரர் என்றால் விவசாயம் செழுமையாக இருக்கிறது என்று அர்த்தம்
ஏனென்றால் ஒரு நாட்டில் தொழில் அதிபர் ஒருவர் முதல் பணக்காரர் என்றால் தொழில் செழுமையாக இருக்கிறது என்று அர்த்தம்

ஒரு நாட்டில் மது தொழிற்சாலை நடத்துபவர் பெரும்பணக்காரர் என்றால் அதை வளர்ச்சி என்று கொள்ளாமல் தேசத்தில் குடிப்பவர்கள் அதிகரித்து விட்டனர் என்று தான் கொள்ள வேண்டும்

அதைப் போல் மருந்து தொழிலில் உள்ளவர் பெரும் பணக்காரர் என்றால் தேசத்தில் விவசாயம் மற்றும் தொழில் பின்னுக்குப் போய் நோய் அதிகரித்து விட்டது என்றுதானே எணணத் தோன்றும்
 உலகின் மிக அசுத்தமான நகரம் டெல்லி எனவும் உலகில் உள்ள முதல் 20 மிக அசுத்தமான நகரங்களில் 13 நமது நாட்டிலே உள்ளன என்று உலக சுகாதார மைய்யம் தெரிவித்துள்ளதும் இந்த செய்தியும் நம்முடைய சுகாதார சூழலையே பறைசாற்றுகின்றன.
நாம் விழித்துக் கொள்ள வேண்டும். வியாதிகளை குறைக்க ஒவ்வொரு இந்தியனும முயல வேண்டும் சுற்றுப்புற சூழலை மாசு ஏற்படுவதை தவிர்க்க முயல வேண்டும்

உறுபசியும ஓவாப் பிணியும் செறு பகையும
சேராதி   யல்வது நாடு
என்று வள்ளுவன் நாட்டிற்கு இலக்கணம் வகுக்கிறான்
அதாவது ஒரு நாடு சிறந்த நாடு என்றால் அங்கு
பசி இருக்க கூடாது
நோய் இருக்க கூடாது
பகை இருக்க கூடாது (வெளிநாட்டு பகையும் உள்நாட்டிலே பாதுகாப்பும் இருக்க வேண்டும்)
சன் மருத்துவ குழுமம் (SUN PHARMA) பற்றிய தகவல்கள் அதன் வெப் சைட்டில் எக்கச்சக்கமாய் கிடைக்கிறது. விரும்புவோர் பார்க்கலாம்.
இணைப்பு : http://www.sunpharma.com/
 
அக்குபங்சரில் இயற்கை விதி மீறல்களால், பஞ்ச பூத சக்திகள் தன் நிலை மாறுவதால் கழிவுத் தேக்கம் ஏற்பட்டு, கழிவு நீக்கமே நோய் அறிகுறிகளாக உருவாகின்றன.ஆனால் அந்த அறிகுறிகள் ஆங்கில மருத்துவத்தால்  மக்களிடம் நோய்களாக சொல்லி பயமுறுத்தப் பட்டு அவர்கள் பணம் எவ்வாறு கொள்ளையடிக்கப் படுகின்றன என்பதற்கு கீழே காணும் மருந்துகளே சாட்சி !
           BRAND NAME
         GENERIC NAME
      CATEGORY
       STRENGTH
 PACKING                   DETAILS        
THERAPY    AREA


AB PHYLLINE
ACEBROPHYLLINE
CAPSULES
100MG
STP OF 10 TAB/CAP
Respiratory
AB PHYLLINE SR 200
ACEBROPHYLLINE
-N/A-
-N/A-
-N/A-
Respiratory
AB PHYLLINE SYRUP
ACEBROPHYLLINE, METHYLPARABEN IP, PROPLYPARABEN IP
SYRUP
10MG, 1.80MG
1 BTL
Respiratory
ACAMPROL
ACAMPROSATE CALCIUM
TABLETS
333MG
STP OF 6 TAB/CAP
Neurology and Psychiatry
ACUCAL
CALCIUM CITRATE, VITAMIN D3, MAGNESIUM HYDROXIDE
TABLETS
200MG
STP OF 10 TAB/CAP
Vitamins
ADCAPONE
ENTACAPONE
TABLETS
200MG
STP OF 10 TAB/CAP
Neurology and Psychiatry
ADDWIZE 10MG 10 TAB
METHYL PHENIDATE HYDROCHLORIDE VSP
TABLETS
10MG
STP OF 10 TAB/CAP
Neurology and Psychiatry
ADENOJECT 30MG/10ML 1 AMP
ADENOSINE
AMPOULES
30MG/10ML
1 AMP
Cardiology
ADENOJECT INJ 6MG/2ML 1 AMP
ADENOSINE
AMPOULES
6MG/2ML
1 AMP
Cardiology
ADESAM 200
S-ADENOSYL METHIONINE
-N/A-
200MG
-N/A-
Neurology and Psychiatry
ADESAM 400
S-ADENOSYL METHIONINE
-N/A-
400MG
-N/A-
Neurology and Psychiatry
ADFOVIR
ADEFOVIR DIPIVOXIL
TABLETS
10MG
STP OF 10 TAB/CAP
Infections
ADMENTA XR 14
MEMANTINE HYDROCHLORIDE
-N/A-
-N/A-
-N/A-
Neurology and Psychiatry
ADMENTA XR 7
MEMANTINE HYDROCHLORIDE
-N/A-
-N/A-
-N/A-
Neurology and Psychiatry
ADMENTA-10
MEMANTINE HYDROCHLORIDE
TABLETS
10MG
STP OF 10 TAB/CAP
Neurology and Psychiatry

வெள்ளி, 6 மார்ச், 2015

நமது அனைவரது கனவும் டாக்டராக, இன்ஜினியராக ஆக வேண்டும் என்பதுதானே !

                              நாம் அனைவரும் சிறுவர்களாக இருந்த போது பள்ளியில் படிக்கும் காலத்தில் "நான் நன்றாக படித்து பெரிய இன்ஜினியராக ஆக வேண்டும். நல்ல டாக்டராக ஆக வேண்டும்" என்பதே நமது எல்லோரது பெருங்கனவாக இருந்தது. நானும் அதுபோலவே சிறுவயதில் கனவுகளை சுமந்தவன்தான் ! ஆனால் பள்ளியிறுதி வகுப்பிற்கு மேல் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க இயலவில்லை. ஆனால் அகுபங்சர் என்ற மருத்துவத்தை பற்றி அறிந்த பிறகு, நானும்  அதனை கற்று ஒரு நோய் நீக்கும் நிவாரணராக, ஹீலராக(Acupuncturist ) ஆகியிருக்கிறேன்.
                                    இதைப் போல் ஒரு டாக்டராக ஆகவேண்டும் என்ற பெருங்கனவோடு படித்த ஒருவர் டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் இறைவழி மருந்தில்லா மருத்துவ கூட்டத்தில் கலநது கொண்டு ஆங்கில மருத்துவத்தில் இருந்து எவ்வாறு இறைவழி மருத்துவத்திற்கு மாறினார் என்பதனை கீழ்வரும் ஹெல்த் டைம் கட்டுரையின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டி இங்கு இணைய தளத்தில் வெளியிடப் படுகிறது.
                        வீட்டுச் சூழலில் இறையருளால் சுகப்பிரசவம் !  
    டாக்டர் ஆக வேண்டும்;மக்கள் போற்றி புகழ வேண்டும்,பெருமை கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் MBBS படிப்பை முடித்து விட்டு, அதைத் தொடர்ந்து மேற்படிப்பு பிரிவில் காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவப் படிப்பில் எனக்கு இடம் கிடைத்து கல்லூரியில் சேர்ந்த நேரம், முதன்முதலாக டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
                                        இறைவழி மருத்துவம் என்றால் என்ன என்பதைப் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது.உணர்ச்சிகளில் வாழாமல், உணர்வுகளில் வாழ வேண்டும்.அகப் பார்வை கொண்டு வாழ்தல்; ஞானம்,சிந்தனை கொண்டு செயல்படுதல் போன்றவை அக்கூட்டத்தின் மூலம் எனக்கு கற்பிக்கப் பட்டது.இறைவன் அருளால் இறைவழி வாழ்க்கை 2008ம் ஆண்டு முதல் எனக்கு கிடைத்தது. என் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தாட்சிகள் எனக்கு காண்பிக்கப் பட்டது.அதுவரை என்னுள் இருந்த உருவ வழிபாடும்,ஆங்கில மருத்துவ வழிமுறையும் இப்பொழுது அறவே நீங்கி மன அமைதியும், இறைவனின் அருளும் எனக்கு கிடைத்தது. 
                                                  விபத்தினால் இரு முழங்கால் முட்டி ஜவ்வில் ஏற்பட்ட வலியை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணப் படுத்த முடியும் என்று கூறப்பட்ட ஆங்கில மருத்துவக் கூற்றை இறைவன் அருளால் பொய்யாக்கி முழுமையாக அவனுடைய அருளால் நீங்கியது. தோல் அலர்ஜி ஏற்பட்டு பல வருடங்களாக மாத்திரை,மருந்துகளை சாப்பிட்டு வந்து குணமாகாமல் இருந்த என்னை இறைவழி வாழ்க்கையின் மூலம் முற்றிலுமாக என் உடலில் அலர்ஜி மறைந்தது,இறைவழியில் திருமணம், இறைவன் அருளால் முதல் குழந்தை வீட்டிலேயே சுகப்பிரசவம்,இன்னும் தினம் தினம் அனைத்து காரியங்களிலும் இறைவனின் அத்தாட்சிகள் தெளிவாக்கப் பட்டது.
                                                  இறைவன் அருளால் இரண்டாவது குழந்தை கருவுற்றது. 'அவன்தான் கர்ப்ப காலங்களில் தான் நாடிய படி உங்களை உருவாக்குகிறான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும்,ஞானம் மிக்கவனாகவும் இருக்கிறான்; எங்களுக்கு இரக்க சிந்தனையையும், பரிசுத்தத் தன்மையையும் அளிப்பாயாக; பயபக்தியுடையவராக இருக்கச் செய்வாயாக; அவர் பிறக்கும் நாளிலும்,இறக்கும் நாளிலும் இன்னும் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது சாந்தியும்,சமாதானமும் நிலைத்திருக்கச் செய்வாயாக' என்று இணையதளத்தில் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் எழுத்து மற்றும் பேச்சின் மூலம் அருளப் படும்  இறை செய்திகள் அனைத்தும் என் பிரார்ததனையாக மனதில் அமைந்தது.
                              எனக்கு பிரசவம் இலேசாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை மனதில் பத்து மாதங்களும் இருந்தது. 17.01.2015 அன்று இலேசான வலி அடிமுதுகில்  ஐந்து மணிக்கு மேல் ஏற்பட்டு, பத்து மணியளவில் கர்ப்பப் பை சுருங்குதல் அதிகமடைந்தது. வீட்டில் நானும், என் கணவரும் இறைவனிடமே பிரார்த்தித்துக் கொண்டும், டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களிடம் தொடர்பு கொண்டோம்.அவர் " கவலையும்,பயமும் கொள்ள வேண்டாம்; இறைவனின் உதவி நல்லபடியாக அமையும்." என்றார்.அந்த பிரார்த்தனை என்னுள் இருந்த சிறு பயத்தையும், கவலையையும் முற்றிலும் நீக்கியது. 
                    11.30 மணியளவில் குழந்தையின் தலை தெரிந்து, உடனே வெளியேறியது. தண்ணீர் பையுடன் அதுவரை அது உடையவில்லை.ஒரு நிமிடத்திற்குள் குழந்தை வெளியேறி அழுது உயிர் பெற்றது. குழந்தை தொப்புள் கொடியுடன் தாய்ப்பால் அருந்தியது. அடுத்த 5ஆவது நிமிடத்தில் நச்சுக் கொடி வெளியேறியது.பிறகு 20,25 நிமிடங்களுக்குப் பிறகு தொப்புள் கொடி வெட்டப் பட்டது. இவை அனைத்தும் இறைவனின் அருளால் என் கணவரின் மூலம் எங்கள் வீட்டின் அறையிலேயே நிறைவேறியது.
       எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய இறைவன் ஒருவனுக்கே !
                       டாக்டர் S.சர்மிளா.MBBS,MD.டாக்டர் K.ராஜ்சாண்டன். MBBS,MD
                                                                         சென்னை செல்; 94861 67715, 98942 23017

                                                                                               நன்றிஹெல்த் டைம் மார்ச் 2015

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

எது நல்லது ? மரபு முறை விவசாயமா ? நவீன முறை விவசாயமா ? ம.செந்தமிழன்

சர்க்கரை-டயாபடீஸ் என்ற நோய் (அது ஒரு நோயே அல்ல) பற்றி " இனிப்பு " என்ற புத்தகம் எழுதியவரும், சர்க்கரை நோயைப் பற்றிய ஆவணப் படம் எடுத்து வருபவருமான திரு.ம.செந்தமிழன் அவர்கள் தொலைக்காட்சியில் நடைபெற்ற "நீயா ? நானா ?"நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை,அவரது முகநூலில் பகிர்ந்து கொண்டதை, நமது அனைவரின் நலன் கருதி இங்கு வெளியிடப் படுகிறது.
உங்களிடம் சொல்ல விரும்பும் அழுத்தமான சேதி!
                                                                                             ம.செந்தமிழன்

                           ’பசுமைப் புரட்சியின் விளைவாகத்தான் பஞ்சாப் சாராயத் தொழில் வளர்ச்சியடைந்ததுஎன சாராய ஆலை அதிபர் தனது அந்தரங்க கூட்டத்தில் பேசினால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், பொதுமக்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ‘அறிவு ஜீவிஒருவர் பேசுகிறார். அதே நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன் என்பதால் அந்த சொற்களின் கழிவு என்மீதும் தெறித்ததை அருவருப்பாக உணர முடிகிறது.
வேறொரு இளைஞர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். அவர் முன்னால் இயற்கை வேளாண்மையில் விளைந்த பழங்களையும், மரபணு மாற்றப்பட்ட பழங்களையும் வைத்தால் அவர் இயற்கை வேளாண் பழங்களைத்தான் சாப்பிடுவாராம். ஆனால், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் எந்தத் தீமையும் இல்லையாம். ஆகவே, நாமும் நம் சந்ததிகளும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளைத் தின்றுகொள்ளலாமாம். இதுதான் அவர் கற்ற கல்வியின் நேர்மை!
மற்றொருவர், ‘நான் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் எல்லாம் மிகவும் பாதுகாப்பானவை. இவ்வாறு சொல்வது எனது நம்பிக்கை. இது ஆய்வுப்பூர்வமான முடிவல்லஎன்று துளியும் கூச்சமின்றிப் பேசுகிறார்.
இந்த மூவரின் முதுகுகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த விவசாயிகள், ‘கத்தரிக்காயில் அதிகம் நஞ்சு தெளிக்கிறோம், உருளைக் கிழங்கை வாங்கிவிடாதீர்கள் அது முழுவதும் ஆபத்தானது, முட்டைகோசு என்றாலே நச்சுக் காய்தான், காலி பிளவரை நச்சு நீரில் முக்கி எடுப்போம்என்று வாக்குமூலம் தருகிறார்கள்.
இந்த நீயா நானாவில் இயற்கை வேளாண் அணியில், நாங்கள் பேசியவற்றைவிட எதிரே இருந்தவர்கள் பேசியவை மிகுந்த கவனத்திற்குரியவை.
நண்பர்களே, உங்களிடம் ஒரே ஒரு கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்,
நிச்சயமாக நாம் விற்கப்பட்டுவிட்டோம். நமது உணவு உரிமை நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு விட்டது. நமது வேளாண்மை உரிமை கொள்ளையிடப் பட்டு விட்டது
உணவையே நஞ்சாக மாற்றிய குரூர அறிவியலின் பலிகள் நாம். அது நம்மைப் பலி கேட்கிறது. நம்மில் பலர் அதற்குப் பலியாகிக் கொண்டும் இருக்கிறோம்.
நம்மிடம் தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. நம்மிடம் ஆண்ட்ராய்ட் அலைபேசிகள் உள்ளன. நம்மிடம் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளன. நம்மிடம் வசதியான வாகனங்கள் உள்ளன. நமது குடிநீர் நம்மிடம் இல்லை. நமது உணவு நம்மிடம் இல்லை. நமது நிலங்களும் நம்மிடம் இல்லை.
நேற்றைய நீயா நானா பார்த்துவிட்டு சென்னையிலிருந்து பேசிய எங்கள் தோழி பின்வருமாறு கூறினார், என் மகனை நான் பெற்றிருக்கக் கூடாது. வாழத் தகுதியில்லாத சமூகத்தில் அவன் பிறந்துவிட்டானே. அவனுக்கு நான் எந்தக் காயை, எந்தப்  பழத்தை நம்பிக் கொடுப்பேன்
              நீயா நானாவில் நான் பேசியதைப் பாராட்டி வாழ்த்துச் சொல்லும் நண்பர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. ஆனால், அவை இப்போது தேவையற்றவை. நமக்காக நாம் பேசித்தான் ஆக வேண்டும். நமது சமூகத்திற்காக நான் பேசுகிறேன். இது என் கடமை. நீங்கள் உங்கள் கடமையை உணருங்கள்.
                                முதலில், இந்த அவல நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். நமது உணவையே நஞ்சாக்கும் பணியில் ஈடுபடும் மனிதர்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக, நமது விளைநிலங்களை, நமது உழவர்களை, நமது மரபுகளைப் பாதுகாக்கும் பணிகளில் உடனடியாக ஈடுபடுங்கள். நாம் பணியாற்றியே தீர வேண்டிய நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. நமது சமையலறைக்குள் ஆட்கொல்லி நஞ்சுகளை அனுமதிப்பதைக் காட்டிலும் ஆபத்து ஏதுமில்லை.
நம் பிள்ளைகளின் முகங்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஊட்டி விடும் ஒரு பிடிச் சோறு நஞ்சற்றதாக இருக்கட்டும்!

திங்கள், 9 பிப்ரவரி, 2015

அளவாக மது (ஆல்கஹால்) அருந்தினாலும் அது ஆபத்தே!

தினமும் மிதமான அளவுக்கு மது அருந்தினால்,அது இதயத்திற்கு நல்லது, இரத்த அழுத்தத்தை குறைக்கும் என சில தரப்பில் சொல்லப் படுவது உண்டு.ஆராய்ச்சிகளிலும் உண்மையே என முன்னர் நிரூபிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக ஒரு கோப்பை 'ரெட் ஒயின்' அருந்தினால் அது இதயத்திற்கு மிகவும் நல்லது என,மற்றவர்களிடம் தகவல் பரப்பி வருவோர் அதிகம்.
                       ஆனால் இது தவறு என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக கூறியதாவது;
       "குடிப் பழக்கத்திற்கும், இதயத்தின் பலத்துக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.அமெரிக்கா,ஐரோப்பா,வடஅமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 155 ஆராய்ச்சியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.2.60 இலட்சம் பேர் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர்."
                   "குறிப்பிட்ட ஜீன்கள் கொண்ட நபர்கள்,வாரம் ஒன்றுக்கு,17 சதவீதத்திற்கும் குறைவான மது பானத்தை நுகரும் போது,அது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்பதும்,மாறாக இதயத்திற்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளதும் தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில்,மதுபானம் உபயோகிக்காத நபர்களுக்கு இதயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அதனால் குறைவாக மது அருந்தனாலும் அது பாதிப்பையே ஏற்படுத்தும்"
                   இவ்வாறு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
                                                                   நன்றி; தினமலர்,10.08.2014 கோவை பதிப்பு
               மேலே கண்டுள்ள மதுவைப் பற்றிய செய்தியானது பிரபல தமிழ் நாளிதழில் வந்ததாகும். நமது சமுதாயத்தில் மதுவைப் பற்றிய கூற்றுக்களும்,செய்திகளும் முரண்பாடான நிலையிலேயே நிலவி வருகின்றன. ஆதி நாளில்,இந்தியாவில் ஆரிய நாகரிகம் நிலவிய காலத்தில் அக்காலத்திய மனிதர்கள் சோம பானம்,சுரா பானம் ஆகியவைகளை அருந்தியதாக ரிக் வேதத்தில் கூறப் பட்டுள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது.
                     உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்பவும் மதுப் பழக்கமானது மனிதர்களால் கடைப் பிடிக்கப் பட்டு வரப் படுகிறது. மனித குலம் தோன்றிய ஆதி நாளிலிருந்தே மனிதன் மதுவை அருந்த  துவங்கி விட்டான். ஆதாம்,ஏவாள் காலத்திலேயே உண்ண தடை செய்த கனியை உண்டதன் மூலம் நமது பாவங்கள் தொடங்கியதாக பைபிளில் கூறப் பட்டது போல, ஆதி நாளிலேயே மனிதன் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகி விட்டான்..
                         2000 வருடங்களுக்கு முன்பே நமது தெய்வப் புகழ் திருவள்ளுவரும் தனது திருக்குறளில் "கள்ளுண்ணாமை" என ஒரு அதிகாரத்தை பதிவு செய்து தனது மதுவின் மீதான எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளார்.
                                     மதுவைக் குறித்த  நமது தமிழ்நாட்டின் இன்றைய நிலையை எண்ணிப் பார்த்தால் மனசாட்சியுள்ள எவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையே உள்ளது. அரசே மதுவிற்பனை செய்வதால் தமிழக மக்கள் அனைவருமே "குடிமகன்களாக" ஆகி விட்டார்கள். நடுத்தர மற்றும் வறுமைகோட்டிற்கு கீழ் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் அவர்கள் பெரும் வருமானம் அனைத்தும் இந்த மதுவிற்கே செலவு செய்தால் அவர்தம் குடும்ப வாழ்க்கைத் தரம்தான் எவ்வாறு இருக்கும்இந்த மதுப் பழக்கத்தால்தான் நாட்டில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும்,ஒவ்வொரு தேர்தலையும் இந்த மதுப்பழக்கமே தீர்மானிக்கிறது.
                         தேர்தல் = பணம் + மது
         தற்போது நிலவி வரும் இந்த நிலை எப்போது மாறும் ?
           இறைவன் நாடினால் !
                                   மது (ஆல்கஹால்) வின் தீமைகள் குறித்து ஆங்கில ஆசிரியர் Martha M. Allen என்பவர் எழுதிய  Alcohol: A Dangerous and Unnecessary  என்ற நூல்  www.gutenberg.org  என்ற இணைய தளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ள கிடைக்கிறது. இந்நூலில் மதுவின் தீங்குகளைப் பற்றி தெள்ளத் தெளிவாக விவரித்திருப்பதோடு,ஆல்கஹாலை மருந்துகளில் கலப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பின்விளைவுகளும் குறிப்பிடப் பட்டுள்ளன.
                          இன்று ஆங்கில மருத்துவத்தால் பரிந்துரைக்கப் படும் டானிக் மற்றும் அனைத்து திரவ மருந்துகளில் ஆல்கஹால் கலக்காத மருந்துகளே இல்லை.
                           மேலே கண்ட நூலில் காணப் படும் வாசகங்கள்
                                 Foods are substances which, when taken into the body, undergo change by the process of digestion; they give strength and heat and force; they build up the tissues of the body, and make blood; and they induce healthy, normal action of all the bodily functions.
 Alcohol does none of these.

"The internal use of alcohol in disease is as injurious as in health."