வெள்ளி, 26 ஜூன், 2015

ஒரு ஆங்கில மருத்துவரின் ஆழ்மன ஏக்கம்

நண்பர்களே,
மரபு உணவுத் திருவிழாவை வாழ்த்தி முகநூல் தோழியும் மருத்துவருமான ப்ரியா அனுப்பிய கடிதம். பிரிட்டனில் மருத்துவராகப் பணியாற்றும் ப்ரியா, மிகவும் செம்மையா, இவ்வாழ்த்தையே ஒரு கட்டுரையாக வடித்திருக்கிறார். நம் அனைவருக்குமான வழிகாட்டும் கட்டுரைகளில் இக்கட்டுரையும் பயன்படும் என நம்புகிறேன்.
வாசியுங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

Priya
Contact details:
Dr. Priya Vijayaragavan
Medical Registrar,
Bassetlaw District General Hospital
Worksop, Nottinghamshire
UK – S80 2BJ
Email: drvpriya@gmail.com
அன்புள்ள செந்தமிழன் அவர்களுக்கு,
ஒரு மருத்துவராக சமீபத்தில் நான் பார்க்கும் ஒவ்வொரு நோயாளியும் அவர்களின் உடல் பாதிப்புகளும், ஒவ்வொருவரின் இறப்பும் என்னை யோசிக்கவைத்துக்கொண்டே இருக்கின்றது. தினம் தினம் புது புது மருந்துகள் கண்டுப்பிடித்துக்கொண்டே இருக்கிறோம். நோய்களின் தன்மையும் வேறுப்பட்டு கொண்டே இருக்கிறது. நூறு வருடங்களுக்கு முன் ஆட்கொல்லிகளான புற்றுநோயும், நீரிழிவு நோயும், இருதய நோயும் இருந்திருக்கக்கூடுமோ, இருந்திருக்கலாம். ஆனால் இந்த அளவில் இருந்திருக்குமா என்று கேட்டால் நிச்சயமில்லை என்பதே பதில். 
கடைசியாக நான் படித்த WHO (World Health Organization) ஆய்வில், 2020ல் 26 லட்சம் இந்தியர்கள் இருதய நோயால் இறக்கலாம் என்றும் இறப்பவர்கள் பெரும்பாலும் 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள் என்கிறது இந்த கணிப்பு. Global Burden of Disease (GBD) study சொல்கிறது இந்தியாவில் 70 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அடுத்த பத்து வருடத்தில் 52% இருதய நோயால் இறப்பதை உலக அளவில் (EME – established market economy) ஒப்பிட்டு பார்க்கும் போது மற்ற நாடுகளில் 23% தான். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி பாதிப்படையும் என்றும் சொல்கிறது இதே கணிப்பு
2000
ம் ஆண்டு ஆய்வில் கிட்டத்தட்ட 3 கோடி இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) இருந்ததாகவும் அது 8 கோடியாக 2030ல் ஆகும் என்றும் சொல்கிறது இதே ஆய்வு. இதே கதை தான் உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவைகளுக்கும். இவையெல்லாம் Non communicable என்று சொல்வார்கள். அதாவது ஒருத்தருக்கு ஒருத்தர் தொற்றாத நோய்கள். தொற்றும் உயிர்கொல்லி நோய்களான காசநோய், HIV/AIDS பற்றியெல்லாம் சேர்க்கவில்லை இந்த பட்டியலில். 
ஒரு நாட்டில் இப்படி என்றால், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை நோயாளிகள். ஒரு உலகமாக, நாடாக பார்க்கையில் வெவ்வேறு நோய் பீடித்து, கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கும் மக்களை கொண்ட நாடாகவே இந்தியா என் கண்களுக்கு படுகிறது. என்ன நடக்கிறது? எதனால் இப்படி நிகழ்கிறது?? எங்கு தொடங்குவது இதை சரி செய்ய? மேலும் மேலும் புது மருந்துகளை கண்டுப்பிடிக்கவேண்டுமா?? புது புது அறுவை சிகிச்சைகள் கொண்டு வரவேண்டுமா?? 
மருத்துவம் எனக்கு - உடல் எப்படி அணு அணுவாக உருவாகிறது, எப்படி ஒவ்வொரு உறுப்பும் வேலை செய்கிறது, அந்த உறுப்பு பழுதடைந்தால் பார்க்க எவ்வாறு இருக்கும், எப்படி அதன் வேலை நிறுத்தம் உடலை மொத்தமாக பாதிக்கிறது, அதை எவ்வாறு மருந்தால், சிகிச்சையால் சரி செய்யலாம்(??) என்று எனக்கு தினமும் சொல்லிக்கொடுத்து கொண்டே இருக்கிறது. ஆனால் something is missing out of the equation. ஒவ்வொரு பாகமாக பார்க்க இருதய, வயிறு, குடல், சிறுநீரக, மூளை specialists உருவாக்கி கொண்டே இருக்கும் மருத்துவம், ஏன் இவை நடக்கிறது என்பதை இன்னமும் சரியாக சொல்லவில்லையோ என்று தோன்றவைத்து கொண்டே இருக்கிறது என் சிறு அறிவிற்கு.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று சொல்வார்கள். ஒவ்வொரு மனிதனும் பல்வேறு ரசாயன கலவையின் கூட்டு தானே. ``எந்த ஊரு மண்ணெடுத்து உன்னை செஞ்சாங்களோ`` என்று என் பாட்டி கேட்பது காதில் விழுகிறது. உலகின் எந்த பகுதியில் இருக்கிறோமோ அந்த சூழலில் நன்கு சிந்திக்கவும் வேலை செய்யவும் தானே நம் உடல் தயார் செய்து அனுப்புகிறது தாயின் கருவறையில் இருந்து. 
சமீபத்தில் மிகவும் சிந்திக்க வைக்கும் இரண்டு வாக்கியங்கள் `` You are what you eat ‘’ மற்றும் `` ¼ of what you eat keeps you alive and ¾ of what you eat keeps your doctors alive `` என்பது தான். சிரிக்க வைக்கும் மிதமான வேடிக்கை வாக்கியம் போல தோன்றினாலும் யோசித்து பார்க்கையில் இது நிஜம் தானே. எத்தனை வேலை செய்யினும் அது இந்த வயிற்றுக்காக தானே. If we all are to be considered as a car/motorbike/train/plane, isn’t it the fuel/food that keeps our engine healthy and keeps us to our speed. உலகின் ஒவ்வொரு மனிதன் அவனுடைய உடலுக்கும், அவன் பிறந்து வாழும் சூழலுக்கும் ஏற்ற சரியான உணவை சாப்பிடாமல் போவதால் தான் வரும் ஒவ்வாமையினால் தான் இத்தனையும் நிகழ்கிறதா ??? இவ்வளவு பெரிய பெரிய பூதாகரமான விஷயங்களான இருதய, நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய்களால் வரும் இறப்புகள் அனைத்திற்குமே காரணம் தற்சமயம் உண்ணப்படும் உணவு என்ற வெகு சாதாரணமான சிறிய விஷயம் பதிலாக முடியுமா?? 
ஆமென்று சொல்கிறார்கள் இதை பற்றி உலகின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு வகையான ஆராய்ச்சிகள் செய்துக்கொண்டே இருப்பவர்கள். தற்சமயம் நாம் உண்ணும் உணவு பொருட்களில் தொடங்கி குடிக்கும் தண்ணீர் அனைத்துமே ரசாயனம் கலந்தவை. விதைக்கும் விதையில் இருந்து வளர்ந்து பழமாகவோ, காயாகவோ, தானியமாகவோ மாறும் வரை ரசாயனத்தில் தோய்த்து வருகிறது. உபயோகிக்கும் பொருட்களின் shelf life அதிகப்படுத்து, அவை சீக்கிரம் கெட்டுவிடக்கூடாது என்று ரசாயனத்தில் முக்கி எடுக்கப்படுகிறது. பொருட்கள் கவர்ச்சியாக இருக்க உபயோகிக்கப்படும் நிறங்களில் ரசாயனம். சக்கரை, எண்ணெய், உப்பு, என்று சமையலின் மிக அடிப்படை விஷயங்களும் chemically processed foods தான். 
உணவில் இருக்கும் சத்து பொருட்களையும் தாது பொருட்களையும் ஜீரணித்து உயிர் வாழவேண்டிய நாம், அதில் கலக்கப்படும் மெதுவாக கொல்லும் இது போன்ற வேதிப்பொருட்களை உண்ணுவதாலும் வரும் நோயால் உயிரத்து போகிறோம். எல்லாமே வேகமாகிவிட்ட இந்த 2 minutes உலகத்தில், இப்பொது வளர்க்கப்படும் முட்டையிட்ட 2 மாதத்தில் முழுவளர்ச்சி அடையும் ப்ராய்லர் கோழிகளை போலவே, மனிதர்களும் சீக்கிரம் பிறந்து சீக்கிரம் தேய்ந்து கொண்டேயிருக்கிறோம்.
Overweight but under nourished.. இதன் அர்த்தம் தமிழில் எப்படி சொல்வதென்று தெரியவில்லை. சக்கையான உணவை சாப்பிட்டு மனிதர்களும் சக்கையாகவே ஆகிறோம், என்னையும் சேர்த்து. சரியான உறக்கமில்லை, சரியான வாழ்க்கை முறையில்லை, மனிதம் சாதிப்பதன் அர்த்தம் கார், வீடு, காசு என்ற பொருட்களால் தராசில் நிறுத்தி வைத்திருக்கப்படுகிறது. Pink flyod பாடும் Another brick on the wall போல எல்லாருமே ஏதோ ஒரு zombie போல அவசரமாக ஓடி அவசரமாக வாழ்க்கையை முடித்துவிடுகிறோம், போல. வாழ்க்கையின் உயர் பொருட்களான மனசமாதானம், அன்பு, பரிவு, நம்பிக்கை இவைகள் தழைத்து வளர திடமான மனது வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம்.. திட மனதும், தெளிவான சிந்தனைகளும் வளர திடமான உடல் வேண்டும்.
மாற்றம் நிகழ முதலில் உணர்தல் தேவை. நம்முடைய பாரம்பரிய முறைகள், பழையதென்று தள்ளிவைக்கப்பட்டவைகளை, நம்முடைய நாட்டில் பண்டு தொட்டே இருந்த உணவே மருந்து என்ற பழக்கங்களை மீண்டும் retrace செய்து பார்க்கவேண்டும். எங்கள் பாட்டி சாப்பிட்ட களியும், கொள்ளுபயிறு குழம்பும் அவர்களை 70 வரை திடகாத்திரமாக வைத்திருந்தது என்பதை இப்போது என் மனம் நம்பத்தொடங்குகிறது. மீண்டும் இயற்கை வழி விவசாயம் வேண்டும், மீண்டும் ரசாயண கலவையால் பதப்படுத்தாத காய்கறி, பழம், தானியங்கள் முக்கியமாக தேவை. முடிந்த அளவில் refined/processed எண்ணெய், சக்கரை, உப்பு, உணவு பொருட்களை புறக்கணிக்க வேண்டும். 
கண்ணை விட்டு மறைந்தவை எல்லாம் கருத்தை விட்டு மறையுமாம். அப்படி மறையாதிருக்க, இப்படி ஒரு காலகட்டத்தில் நீங்கள் இப்போது ஈடுப்பட்டிருக்கும் இந்த பழங்குடி உணவு திருவிழா மிக பெரிய ஒரு முயற்சி. இந்த முயற்சியால் பழங்குடி மக்களுக்கு நல்லவிஷயங்களை செய்து கொடுக்க முயற்சிப்பதும் வெகுவாக பாராட்டப்பட வேண்டிய விஷயம். இவர்களின் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் புத்தகமாகவோ, அல்லது இணையத்திலோ போட முயன்றால், இன்னும் மரபை மறந்து pizza, burgerல் மூழ்கி மெல்ல தத்தளிக்கும் மற்றவர்களுக்கு பயனளிக்கக்கூடும்.
உங்கள் முயற்சிகள் அனைத்தும் நல்ல அங்கீகாரமும், மக்களுக்கு நன்மை பயக்கவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
Priya

Contact details:
Dr. Priya Vijayaragavan
Medical Registrar,
Bassetlaw District General Hospital
Worksop, Nottinghamshire
UK – S80 2BJ
Email: drvpriya@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக