திங்கள், 19 ஜனவரி, 2015

ஹீமோகுளோபின் (Haemoglobin) உடலில் அதிகரிக்க எளிய வழி !

                                                     உடலில் அதிகமான அசதி,எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் மனநிலை,உற்சாகமின்மை,எதிலும் ஆர்வமின்மை,உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு,தூங்க வேண்டும் போல் இருக்கும்.ஆனால் படுத்தால் தூக்கம் வராது.தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி,அதனால் ஏற்படும் அசதி,எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம்,இந்த நிலையில் தான் இன்று பல பேர் இருக்கின்றனர்.
                                              இந்த நிலைமையை நீக்க,மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை,மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரைப் பார்த்தால் இரத்தப் பரிசோதனை,இ.சி.ஜி என பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார்.அவர் கூறிய பரிசோதனைகள் அனைத்தும் செய்து,அந்த பரிசோதனைகள் அனைத்தையும் அவரிடம் காட்டினால்,உங்களுக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார்.நான் உங்களுக்கு மாத்திரை,மருந்து எழுதியிருக்கிறேன்.ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள்.சரியாகி விடும் என்பார்.அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும்,மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து,ஆறு மாதம் சாப்பிட்டதும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதி கூட சரியாகவில்லை.
                                                         நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த இரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடியவில்லை.உடல் களைப்பு அடைகிறது.பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால் எவ்வளவு தாமதம் ஏற்படுமோ,அதே தடங்கலும்,தாமதமும் உடலில் ஏற்படுகிறது.உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப் படுகிறது.
                                                         நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை,நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்கிறது.எவ்வளவு சத்துக்கள்,எந்தெந்த சத்துக்கள் தேவையோ,அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு,மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிலிருந்து வெளியேற்றி விடுகிறது.அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும்,அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக் கொள்வதில்லை.மீதியை கழிவுப் பொருட்களாக வெளியேற்றி விடுகிறது.

                                 இரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14-18 கிராம் அளவிலும்,பெண்களுக்கு 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் போது,இரத்த சோகை என்ற நோயும்,மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.இரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை பரிசோதனைச் சாலையில் இரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரிய வரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து,களைப்பு,இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
                                                      இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது இரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும்,உடலில் இரத்த ஓட்டத்தின் போது,நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போது அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இரத்தம் ஏற்று  உற்சாகம் பெறுகிறது.பிறகு இரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது,தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்-டை-ஆக்ஸைடாக மாற்றி,நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.பிறகு உற்சாக இரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது.மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை இரத்தத்தில் ஏற்றுக் கொண்டு,உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி,அவைகளை நன்கு இயக்கி உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
                                                        உடலில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.நாட்டு மருந்து கடைகளில் உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும்.அவற்றை வாங்கி 72 நல்ல உலர்ந்த பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு,அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற விடுங்கள்.காலை 6 மணிக்கு பல் துலக்கி விட்டு,காலை ஒரு பழத்தை தின்று விட்டு சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு,சிறிது பழம் ஊறிய நீரைக் குடியுங்கள்.மாலை 6 மணிக்கு அல்லது இரவு 9 மணிக்கு கடைசியாக உள்ள ஒரு பழத்தை தின்று விட்டு மீதியுள்ள  நீரை குடியுங்கள்.இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்ட படி பழங்களை தின்று விட்டு,பழம் ஊறிய நீரை குடியுங்கள்
        நாட்கள்
காலை 6 மணி
மதியம்12 மணி
இரவு 9 மணி
மொத்தபழங்கள்
முதல் நாள்
1
1
1
3
2 ஆவது நாள்
2
2
2
6
3 ஆவது நாள்
3
3
3
9
4 ஆவது நாள்
4
4
4
12
5 ஆவது நாள்
4
4
4
12
6 ஆவது நாள்
4
4
4
12
7 ஆவது நாள்
3
3
3
9
8 ஆவது நாள்
2
2
2
6
9 ஆவது நாள்
1
1
1
3



மொத்தபழங்கள்
72
                                                         ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள்.தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டுள்ள படி செய்து பாருங்கள்.இப்பொழுது உங்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும்.இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.உடலில் உற்சாகம் பெருகும்.வலிவோடும்,வனப்போடும் உடல் மிளிரும்! இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர் இரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும்,உற்சாகத்தையும் நாம் மீண்டும் பெறலாம்.
                                                     செய்து பார்க்கலாமே!
                                                              (நன்றி : மாற்று மருத்துவம் இதழ் அக்டோபர் 2009)

                          

சனி, 10 ஜனவரி, 2015

மகா சக்தி ( ALMIGHTY) என்றால் என்ன?

"இந்திய அக்குபங்சரின் தந்தை" என்று அன்புடன் அழைக்கப் படுபவரும்,தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாதந்தோறும் நடைபெறும் இறைவழி மருந்தில்லா மருத்துவ கூட்டங்களில் உரையாற்றி வருபவரும்,இறைவழி மருத்துவத்தை மேற்கொண்டு மருத்துவ சேவை செய்து வருபவரும் ஆகிய டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின்   (Website: www.foolproofcure.net) இணைய தளத்தில் வாசகி ஒருவர் ஆங்கிலத்தில் கேட்டு எழுதிய கேள்விக்கு, நமது டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் எழுதிய பதிலின் தமிழ் மொழியாக்கத்தினை நமது அனைவரின் நலன் கருதி இங்கு வெளியிடப் படுகிறது.
கேள்வி;     அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு,
உங்களின் பேச்சும்,எழுத்துக்களும் எனக்கு நிறைய அமைதியையும்,நிம்மதியையும் அளித்திருக்கிறது.எனக்கு மிகக் கடுமையான காய்ச்சல் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்தன. அந்த சமயத்தில் எனக்கு பத்து கிலோ எடை குறைந்து விட்டது.அனைத்து மருத்துவங்களையும்,மாற்று மருத்துவங்களையும் பார்த்தும் எனக்கு குணமாகவில்லை.மனநிம்மதி இல்லாமல் பைத்தியம் பிடித்தவள் போல் உணர்ந்தேன்.உங்கள் மருந்தில்லா மருத்துவ கூட்டத்தில் கலந்து கொண்டஅன்று முதல் இறைவனின் கருணையால் என் வாழ்வில் நிறைய நன்மைகள்.ஆனால்,சமீப காலமாக ஒரு விஷயம் என்னை உறுத்துவதாக இருக்கிறது.மகாசக்தியான இறைவனை குறிப்பிடும் போது நீங்கள் "அல்லாஹ்" என்கிறீர்கள்.மேலும் குர்ஆனை எதற்காக மூலாதாரமாக சரிபார்ப்பதற்கு தேர்வு செய்கிறீர்கள்? நீங்கள் கூறுவதோ,'பின்பற்றுவதற்கு என்று எந்த மதமும் கிடையாது.வழிபடுவதற்கு எந்த இடமும் கிடையாது.நம்முடைய இருதயத்தை தவிர' என்று.இந்த விஷயத்தில் எனக்கு தெளிவு தேவைப் படுகிறது.
                                                                                                                                     கவிதா    A.S
                          டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் பதில் ;
 மகாசக்தி என்பது பற்றி
அல்லாஹ் ஒருவன்.அவன் ஒருவன்தான்.அவனுடைய எண்ணிக்கையில் அடங்கா பெயர்களில் ஒன்று மகாசக்தி.நாம் மகாசக்தி என்று குறிப்பிடும் போது தொடர்ச்சியாக அவன் ஓருவனைத் தவிர இல்லை என்று குறிப்பிட வேண்டும்.அல்லாஹ் என்பதன் அர்த்தம் மனிதர்களின் அனைத்து தேவைகளுக்கும் அவன் ஒருவனைத் தவிர இல்லை என்பதாகும்.நாம் அந்த ஒரே ஒருவனுக்கு எந்த ஒன்றையும் பூமியிலோ,வானத்திலோ அல்லது எவரையுமோ இணையாக்கக் கூடாது.அவ்வாறு செய்வோமானால் நமது பிரார்த்தனைகள் அல்லாஹ்விடமிருந்து பதிலைப் பெற்றுத் தராது.அவன் ஒருவனைத் தவிர இல்லை என்பதை கூறியிருந்தால் தவிர.ஆகவே நாம் இவ்வாறு கூறக் கூடாது. அல்லாஹ்வை மகாசக்தி என்று. நாம் கூற வேண்டியது மகாசக்தி அல்லாஹ் அவன் ஒருவனைத் தவிர இல்லை என்று.
                                           மகாசக்தி என்பது போல் நமது அனைத்து தேவைகளிலும் அவனுடைய பெயர் அல்லது பண்பு இருக்கிறது. உதாரணம்.தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்.அவன் ஒருவனைத் தவிர இல்லை.செவியேற்பவன் அல்லாஹ்.குணமாக்குபவன் அல்லாஹ் .மன்னிப்பவன் அல்லாஹ்.கவனிப்பவன் அல்லாஹ். யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ். கருணையாளன் அல்லாஹ்.ஞானமிக்கவன் அல்லாஹ்.அமைதி அளிப்பவன் அல்லாஹ்.இப்படி பல..
                                    நாம் நம்முடைய கஷ்ட காலங்களின் தொடக்கத்திலேயே இறைவனை அழைக்கும் போது "அவன் ஒருவனைத் தவிர இல்லை" என்பதை தொடர்ச்சியாக கூறவில்லையானால்,கஷ்ட காலங்களின் உச்சத்தில் "கடவுளே,உன்னைத் தவிர என்னைக் காப்பாற்ற எவரும் இல்லை" என்று கூற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். மேலும்,குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது ஒட்டு மொத்த மனித குலத்திற்கானதாகும்.குர்ஆன் மத சட்டங்களை நிராகரிக்கிறது.ஆனால், மனித குலத்தின் நேர்மையான வாழ்க்கைக்கு ஈருலகிலும் ( இம்மை,மறுமை ) வழி காட்டுகிறது.
                                                          அடுத்து, உங்களுடைய அடுத்த கேள்வியான குர்ஆனை எதற்காக மூலாதாரமாக எடுத்துக் கொண்டீர்கள் என்பதற்கு  நான் ஒப்புக் கொள்ள வேண்டும். எனக்கு என்ன தெரியுமோ? எதில் வாழ்கிறேனோ அதைத்தான் நான் கூற முடியும். நான் கேள்விப் பட்டதையெல்லாம்,இன்னும் நான் வாழாததை யெல்லாம் கூற இயலாது.நீங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நான் என்னுடைய வாழ்க்கையில் வாழாததை உங்களிடம் கூறியிருந்தால் நீங்கள் உங்களுடைய மனதில் அமைதியையும்,ஆறுதலையும் அடைந்திருக்க மாட்டீர்கள். மேலும் உங்களுடைய நாட்பட்ட ஜூரத்திலிருந்தும் சுகமான முறையில் விடுபட்டிருக்க மாட்டீர்கள். மேலும் குர்ஆன் அகிலங்களின் அரசனாகிய அல்லாஹ்விடமிருந்து வழி காட்டக் கூடியது.
                               தமிழ் மொழியாக்கம்; மருத்துவர்.ஞானமூர்த்தி செல்; 093633 28741

                                             நன்றி;ஹெல்த் டைம் ஜனவரி 2015

வெள்ளி, 9 ஜனவரி, 2015

யார் சுகவாசி?

 சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி!
அதிகாலையில் எழுபவன் சுகவாசி!
 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி!
 முளைகட்டிய தானியங்களை உணவில்  பயன்படுத்துகிறவன் சுகவாசி!
 மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி!
 உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி!
 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி!
வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி!
 கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி!
 மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி!
 கவலைப்படாத மனிதன் சுகவாசி!
 நாவடக்கம் உடையவன் சுகவாசி!
 படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி!
எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி!
 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி!
 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!
 கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி!
 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி!
 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி!
 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி!
இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!
 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி!
 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி!

  பத்து  நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி!