இணைய
தளத்தில் வாசகர்கள் எழுதிய கேள்விகளும்,
அதற்கு நமது இந்திய
அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தையும்,
"ஹெல்த்
டைம்" மாத இதழின் ஆசிரியருமான டாக்டர் திரு.பஸ்லுர் ரஹ்மான் அவர்கள் எழுதிய
பதிலும் நமது அனைவரின் நலன் கருதி இங்கு வெளியிடப் படுகிறது.
கேள்வி : டாக்டர் எனக்கு சமீபத்தில்
காய்ச்சல் ஏற்பட்டது. நீர்கடுப்பு காரணமாக இருக்கலாம். சில நாட்களாக அடிக்கடி சிறுநீர்
கழித்துக் கொண்டிருந்தேன்.அதைத் தொடர்ந்து கடுகடுப்பான வலியுடன் சிறுநீர்
வந்தது.அதற்கு பின் காய்ச்சல் ஏற்பட்டது.மருந்து இல்லை. மருத்துவர் இல்லை.வெறும்
ஓய்வுமட்டும்தான்.எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் ஒரே உப்பாக இருந்தது.மிளகாய்
சட்னி கூட உப்பாக பட்டது.இந்த அறிகுறிகள் மூலம் நான் என்ன காரணத்தை அறிவது?
A.. மணிமாறன்
டாக்டர்
அவர்களின் பதில் : உடல் ரீதியாகவோ,
மன ரீதியாகவோ அல்லது
எந்த ரீதியாக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கக் கூடிய எந்தவொரு
பிரச்சினையிலிருந்தும் நீங்கள் விடுபட வேண்டுமென்றால் ஒரே வழி 'ஏன் உருவானது' அல்லது இதற்கு நான் என்ன செய்ய
வேண்டும்; அல்லது இது குறித்து செய்ய வேண்டியது என்ன? போன்ற காரணத்தை அறிவதற்காக கேள்விகள் கேட்கக் கூடாது.உண்மையான
கேள்வி என்னவென்றால் " உங்களுக்கு என்ன வேண்டும்?" அதற்கான ஒரே பதி்ல்,
" நான்
சரியாக வேண்டும்." அந்த பதிலில் நில்லுங்கள். இப்பொழுது இறைவனின் 'சுகம் ஆகுக !' நிறைவேறுகிறது. இது என்னுடைய பிரார்த்தனை.
உங்களின் பிரார்த்தனையும் இதுவே. அதைக் கொண்டு நீங்கள் சரியானீர்கள்.
கேள்வி : நம்பிக்கைக்கும்,மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
R. ஃபாஸில் அகமது
டாக்டர்
அவர்களின் பதில்
: உங்கள் நல்லுணர்வு அறிவிப்பதை
நம்புவது நம்பிக்கை. உங்களைத் தூண்டும் கெட்ட உணர்ச்சிகளை நம்புவது மூட நம்பிக்கை.
கேள்வி : மரியாதைக்குரிய டாக்டர் அவர்களே, இறைவழி
மருத்துவத்தில் (வாழ்க்கையில்)ஒருவரின் மரணத்திற்குப் பின் நாம் செய்ய வேண்டிய
முறை என்ன? மரணத்தருவாயில் ஒரு மனிதன் செய்ய
வேண்டியது; அதற்கு பின் மற்றவர்கள் செய்ய
வேண்டியது என்ன? உடலை எவ்வாறு அடக்கம் செய்வது? ஏதேனும் சடங்குகள் செய்ய வேண்டுமா? எங்களூக்கு
அன்பு கூர்ந்து தெளிவு தாருங்கள்.
டாக்டர்
அவர்களின் பதில்
: சடங்குகள் இல்லை. இறந்தவருக்கு சகல மரியாதையுடன் உடலை எவ்வளவு
சீக்கிரம் முடியுமோ அடக்கம் செய்யுங்கள். அவருடைய கணக்கு மூடப்பட்டு, அவருடைய இறைவனின் இறுதி தீர்ப்புக்காக அதாவது இவ்வுலகில் அவர் வாழ்ந்த
காலத்தில் அவர் செய்த நன்மை, தீமை அல்லது அவர் தன்னுடைய
இறைவனின் திருப்திக்கும், கோபத்திற்கும் அடி பணிந்ததில்
இருக்கிறது.
ஒருவருடைய வாழ்க்கை முடிந்து
அவருடைய கதை மூடப்பட்ட பின் எந்தவொரு சடங்கும் இறைவனுடைய தீர்ப்பை
மாற்றுவதற்கில்லை. ஒருவர் தன்னுடைய பரிசையோ,
தண்டனையையோ
எதிர்பார்ப்பதை தவிர.
தமிழ் மொழியாக்கம்;
மருத்துவர்
திரு.ஞானமூர்த்தி.
செல்; 093633 2874
நன்றி; ஹெல்த் டைம் மாத இதழ் மே 2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக