என்ன ஒரு கொடுமை! சாப்பிடறது எப்படின்னு கூட சொல்லி தரணுமாப்பா
உனக்கு?
எப்படி சாப்பிட்டா நல்லதுன்னு ஜனங்களுக்கு தெரிய வேணாமா? அவங்க சார்பா தான்...
போதும்! அசடு வழியாத... சரி!
சொல்றேன் கவனமா கேளு!
முதல் விஷயம் என்னான்னா... நாம குறைவா சாப்பிட்டா உணவை நாம ஜீரணிக்கிறோம்.. அதிகமா சாப்பிட்டா
உணவு நம்பளை ஜீரணிச்சிடும்.
விளக்கமாவே சொல்றேனே! நாம அதிகமா வயித்தில போட்டு திணிக்காமModerate -ஆ சாப்பிட்டோம்னா அது உடம்புக்கு நல்லது! நோய் எதுவும் இல்லாம
நீண்ட நாள் குறைஞ்சது 10ல இருந்து 40 வருஷம் வரைக்கும்Extra -வா சந்தோஷமா இருக்கலாம்.
சிலரு, இல்ல.. இல்ல.. பலரும் செய்ற தப்பு
என்னான்னா, மணியை பாத்து சாப்பிடறது. பசி
இருக்கோ இல்லையோ, சாப்பிடற டைம் வந்தாச்சுன்னா, சாப்பாட்டு தட்டுக்கு முன்னால உட்கார வேண்டியது! இது ரொம்ப தப்பு
மாப்பு!
நிறைய பேரு செய்ற இன்னொரு தப்பு ஒரே நாள்ல 4 முறை 5 முறைன்னு
சாப்பிடவேண்டியது. இதுவும் பெரிய தப்பு தான்.
விஷயம் என்னான்னா, இப்படி பசியில்லாம சாப்பிட்ட உணவு, வயித்துக்குள்ளாற தங்கி தேவையில்லாம எல்லா பாகங்களுக்கும் டென்ஷன்
கொடுக்கிற வில்லன்பா. முக்கியமா ஜீரண உறுப்புகளுக்கு பெரிய வேதனை தான்போ! ‘ஏண்டா பாவி! எங்களை சும்மாவே விடமாட்டியான்னு’ அதுங்கெல்லாம் ஓன்னு ஒப்பாரி வெச்சி அழுவுங்க!
அப்படி உள்ளே தள்ளின உணவு, ஜீரணத்திற்கு வராமலே இருக்குதுங்கிறது மட்டும் இல்ல, அதை வெளியே தள்ளவும் முடியாம சிரமமா போயிடுது நம்ப உடம்புக்கு!
சாப்பிட்ட உணவு மூலமா நமக்கு சக்தி வரணும். ஆனா அதுக்கு மாறாக, நம்ப உடம்புக்குள்ள இருந்து இந்த வீணா போன உணவை வெளியே
தள்ளுறதுக்கு உடம்புக்குள்ள ஏற்கனவே இருக்கிற
சக்தி செலவு ஆகுது. இப்போ புரியுதா?
இந்த தப்பு அடிக்கடி தொடர்கதை மாதிரி தொடர்ந்தா, அப்புறம் சீக்காளியா மாற வேண்டியது தான். சோக்காளியா இருந்தவன் நோயாளியா ஆவறது, பெரிய கொடுமை தானே மாப்பு?
நான் திரும்பவும் சொல்றேன் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ! “கொஞ்சமா சாப்பிட்டா நாம உணவை ஜீரணிக்கிறோம். அதிகமா சாப்பிட்டா
உணவு நம்பளை ஜீரணிக்க ஆரம்பிச்சிடும்! O.kay வா!
புரியுது பங்காளி! சிலரு டேஸ்டா இருக்குன்னு அளவுக்கு அதிகமா, உணவை வயித்துக்குள்ள தள்ளுறாங்களே, என்னமோ நாளைக்கே உணவு ஏதும் கிடைக்காம, பஞ்சம் வந்துடும்ங்கிற மாதிரி...!!! இது கூட தப்பு தானே?
இதில என்ன சந்தேகம்? இயற்கையே இந்த தப்புக்கு அவங்களுக்கு தண்டனை கொடுத்திடுதே! வயிற்று உப்பசம், அஜீரணம், மந்தம், வாயு தொல்லை, தலை வலி, தொந்தி விழறது, சர்க்கரை வியாதின்னு பல பல நோய்களை அவங்க பக்கம் அனுப்பி வைக்குதே மாப்பு!
அமெரிக்காவில நடந்த ஒரு ஆய்வுல, அதிகமா சாப்பிட்டு நோய்வாய் பட்டவங்க, தினமும் ரெண்டு வேலை மட்டும் சாப்பிட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா
எவ்வளவோ நன்மைகள் அவங்களுக்கு கிடைச்சிருக்காம்.
அவங்களுக்கு இருந்த நோயெல்லாம் மறைஞ்சி, ஆரோக்கியம் நல்லபடியா கூடி இருக்கு. உடல் எடையும் ஒரு சம நிலைக்கு
வந்திருக்கு, அவங்க ஜீரண உறுப்புகள் எல்லாமும்
கூட நல்லபடியா வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காம்.
உடலுக்கு நம்மோட ஆரோக்கியத்தை பத்தி நிறைய விஷயங்கள் தெரியுமப்பா. அதனோட பேச்சை கேட்டாலே போதும்! எல்லா நோயிலிருந்தும் நாம
விடுபட்டுவிடுவோம்.
என்ன மாப்பு நான் சொல்றது?
சரியாத்தான் சொல்றீங்க! வேற எதனாச்சும் இருக்கா மாப்பு?
ம்... இருக்கே... உணவை நல்லா மென்னு சாப்பிடணும். Express ரெயில் மாதிரி சாப்பாட்டை உள்ளே தள்ள கூடாது. ஜீரணம் வாயிலிருந்தே ஆரம்பிக்குதுன்னு உனக்கு தெரியுமா பங்காளி?
உணவை நல்லா மென்னும் போது எச்சில்ல இருக்கிற Enzymes
உணவோடு சேர்ந்து ஜீரணத்துக்கு உதவி செய்யுது. அப்புறம் பல்லு
எதுவும், வயித்துக்குள்ள இல்லை தானே? அதனால உணவை மாவாக்கி, கூழாக்கி, வயித்துக்கு அனுப்பணுமே தவிர
அப்படியே அனுப்ப கூடாது.வயிறு பாவம் இல்ல! வாயில்லாத அப்புராணிப்பா! அதை கொடுமை
படுத்தலாமா, நீயே சொல்லு?
சாப்பிடும் போது தண்ணியை குடிக்க கூடாது. இது ஏன்னா?
ஜீரணத்துக்கு தயாரா வயித்தில தீவிர நிலையில Hydrochloric அமிலம் இருக்குது. தண்ணியை குடிச்சி அந்த அமிலத்தை நீர்த்து போக
செய்தோம்னா, ஜீரணம் நடப்பது பாதிப்பு அடையுது.
குறைஞ்ச பட்சம் சாப்பிட்டு 30 நிமிஷம் பொறுத்து தண்ணீரை
குடிக்கிறது தான் நல்லது.
அதுக்கேத்த மாதிரி காரம், உப்பு எல்லாம் குறைவா இருக்கிற மாதிரி உணவு இருக்கிறது பெட்டர்.
சாப்பிடும்போது பேச கூடாது. இதை பெரியவங்க சொல்லி கேள்விபட்டிருப்ப இல்ல! ஆனா அது எதுக்குன்னு
அவங்க சொல்லல இல்லை? அதுக்கு பதிலு இது தான்!
சாப்பிடறதை நாம தியானம் மாதிரி மனசை ஒருநிலை படுத்தி
சாப்பிட்டோம்னா, சாப்பாட்டு ருசியோட ஒன்றி போவோம்.
அதிகமாவும் சாப்பிடமாட்டோம், குறைவாகவும் சாப்பிடமாட்டோம், ஜீரண வேலை சுலபமா நடக்க உதவி செய்றோம். அது மட்டும் இல்லாம தியானம்
பழகுறதும் ஈஸி!
என்னது பங்காளி இது புது கதையா இருக்கு! சாப்பட்டை வெச்சே தியானம்
பழகிட முடியுமா?
மாப்பு! தியானம் என்கிறது வேற ஒன்னும் இல்ல!
நாம செய்ற செயலை மனம் ஒன்றி செய்தாலே அது தியானம் தான். நீ வேணா இன்னைக்கி சாப்பிடும் போது மனசு ஒன்றி, வேற ஏதும் சிந்தனை இல்லாம, யாருகிட்டேயும் பேச்சு கொடுக்காம, சாப்பாட்டிலேயே லயிச்சி, சாப்பிட்டு பாரு! அதனோட அனுபவம் எப்படி இருந்ததுன்னு அப்புறமா
சொல்லு!
கண்டிப்பா இத்தனை நாள் அனுபவிக்காத ஒரு வித்தியாசத்தை உன்னால
அனுபவிக்க முடியும்.
(படிக்கும் நீங்களும் கூடத்தான்! தியானம் போல சாப்பாட்டை
சாப்பிட்டு உங்களுக்கு ஏற்பட்ட அனுவங்களை எனக்கு தெரியபடுத்துங்களேன்!)
கவலையில, கோபத்தில இருக்கும் போது சாப்பாட்டை
மறந்திடு! கவலையில, கோபத்தில இருக்கும்போது வயித்தில ஜீரணிக்க தேவைபடுற அமிலங்கள், Enzyme-கள் எல்லாம் சரியாக சுரப்பதில்லை.
நீ அந்த மாதிரி நேரங்கள்ல, சாப்பிடாம விட்டேன்னா, உன் உடம்பு அதுக்காக, உனக்கு தேங்க்ஸ் சொல்லும்பா தேங்க்ஸ்!