ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

இறைவழி மருத்துவம்

‘நினைத்தால் சுகம்’ எனும் இறைவழி மருத்துவம்
அகிலங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளும் படைப்பாற்றல் தாம் படைத்த அனைத்து உயிர்களுக்கும் தம்மைத் தாமே காக்கவும், குணப்படுத்திக் கொள்ளவும் வல்ல ஆற்றலைக் கொடுத்துள்ளது.
அவ்வாறே மனிதனுக்கும். மனித உடல் தன்னைத் தானே குணம் செய்து கொள்ளும் ஆற்றலை படைப்பாற்றல் கொடுத்துள்ளது.. மனித அறிவு அதற்கு உதவக்கூடியதாய் உள்ளது.
இந்த தற்காப்பு ஆற்றலே கருவில் இருந்து முடிவு வரை உயிருக்கும், உடலுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. நாம் இந்த தற்காப்பு சத்தியை பாதுகாக்க, புதுப்பிக்க, உறுதிப்படுத்திக் கொள்ள உதவும் அறிவையே மருத்துவ அறிவு என்கிறோம்.
இந்த வகையில் சித்தா, வர்மம், யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர். ரெய்கி, பிரானிக் ஹீலிங் போன்ற பல மருத்துவ முறைகளை இறை ஞானங்களாக படைப்பாற்றல் மனிதனுக்கு வழங்கியுள்ளது.
சித்தர்களாகிய முன்னோர்கள் தொகுத்துத் தந்த படைப்பாற்றலின் இந்த அருட்கொடையை, தன்னில் பிறரைக் காணும் தன்மை உடையவரும், தனது நலன்- மகிழ்ச்சி என்பது பிற உயிர்களின் நலத்தில் உள்ளது என்பதை அறிந்தவர்களால் மட்டுமே சிறப்பாக பயன் படுத்த முடியும்.
படைப்பாற்றலின் விதிகளை உணர்ந்து இறைவழியில் வாழ முனைபவர்க்கும், பிற உயிர்களின் நலத்தை விரும்புவோர்க்கும் பெரும் நன்மையாக, நினைத்தால் சுகம் எனும் இறைவழி மருத்துவ ஞானத்தை படைப்பாற்றல் கொடுக்கின்றது.
 ஓர் இறைவழி மருத்துவரால் உடல், மன நலம் பெற வேண்டி தம்மை அணுகுபவரின் துயரை விரைவில் தீர்க்க உதவ முடியும்.
இறைவழி மருத்துவம் பெற விரும்புபவர்களுக்கு, தான் நலம் பெற வேண்டும் எனும் ஆழமான விருப்பம் தேவை, தவிர வேறு எந்த வகையான, பிரார்த்தனையோ, சடங்குகளோ தேவையில்லை.
ஒப்பீடற்ற இறைவழி மருத்துவத்தின் சிறப்புகள் சில
1. சோதனை முறைகள் தேவையில்லை.
2. மருந்து மாத்திரை ஊசி போன்றவற்றை பயன்படுத்துவது இல்லை.
3. மருத்துவர் அருகில் இருக்கத் தேவையில்லை
.4. உதவி தேவைப்படுபவரை தொடத் தேவையில்லை
.5. வினாடிக்கும் குறைவான நேரத்துக்குள் வைத்தியம் நடந்து விடுகிறது.
6. உடன் துன்பம் நீங்கி உடல், மனம் சுகம் பெறுவதை உணர முடியும்.
7. மிகக் குறுகிய காலத் தவணைக்குள் நோய் நீங்கி சுகம் பெறலாம்
.8. கருவில் உள்ள குழந்தை முதல் மிக முதியவர் வரை எல்லொர்க்கும் ஏற்றது.
9. மருத்துவச் செலவை விரைவில் வாழ்விலிருந்து நீக்கிவிடலாம்.
10. கல்வித் தகுதியின்றி எல்லோரும் எளிதில் கற்று நன்மை பெறலாம்.
நீங்களும் சுவைக்கலாம் இறைவழியை.
நண்பர்களே, இறைவழி மருத்துவம் பற்றி கேட்டிருந்தீர்கள், எங்கு யார்,எப்படிச் செய்கிறார்கள்? என்பது வினா.
மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமைகளை நன்கு சிந்தித்துணர்ந்து நன்மையை நாடுவோர்க்கே, சித்த மருத்துவம், இறைவழி மருத்துவம் பயன்தரும்.
இறைவழி மருத்துவத்தை பலர் இயல்பாக்ப் பயன்படுத்துகிறார்கள். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு, எல்லாம் விரைவில் சுகமாகிவிடும், அமைதியாக இருங்கள், இறைவன் நன்மையுண்டாக்குவான் என்று கூறுபவர்கள் இறைவழி மருத்துவம் செய்தவர்களாகிறார்கள். பெருமைக்காக, அந்த மருத்துவமனைக்குப் போ, இந்த மருந்துகளைச் சாப்பிடு, என்று நிலமை தெரியாமல் பயத்தையும், பதட்டத்தையும் ஊட்டி மேலும் குழப்புபவர்கள் துன்பத்திலிருப்பவரை மேலும் துன்பப் படுத்துபவர்களே.
கண்ட டாக்டர்ட எல்லாம் போய் மேலும், மேலும் துன்பத்தை இழுத்துகிடாம வீட்டில பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுட்டு ஓய்வெடுங்க சரியாகிடும் என்று சொல்பவர்களும் இறைவழி மருத்துவர்கள் தான்.
திருவள்ளுவர் சிறந்த இறைவழி மருத்துவரே, மருந்து பற்றிய குறள்களில் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் சுவையுங்கள் மருந்து தேவையே இல்லை என எளிமையாக நலவாழ்வக்கான வழிகாட்டுகிறார்.
நான் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து எந்த ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தியதில்லை. என் குழந்தைகளுக்கு மருந்துகளோ,தடுப்பூசிகளோ போட்டது இல்லை. என் குடும்பத்தினரோ, நணபர்களோ அலோபதி பக்கம் திரும்பியதில்லை.
தனக்குள் இருக்கும் இறையாற்றல் தன்னை குணப்படுத்தப் போதுமானது என்ற உணர்வை இறைவழி மருத்துவம் மூலம் பெற்றவர் யாரும் மருந்துகள் என்று எதையும் உட்கொள்வதில்லை. மேலும் அவர்கள் பிற மனிதர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ எண்ணுவதில்லை, தமக்கு வெளியே இறைவனைத் தேடுவதில்லை. தனது அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து வாழ்க்கையைச் சுவைப்பதையே இறைவழிபாடாக செய்வதுவருவதினால் அவர்களால் பிறர்க்கும் துன்பமில்லை.
நண்பர் சித்தர். பஸ்லூர் ரகுமான் மற்றும் அவரால் இறைவழியில் இணைந்தோரும் பல ஆண்டுகளாக  மக்களுக்கு இறைவழியில் வழிகாட்டி வருகிறார்கள். தங்களின் அனுபவத்தையும், ஆங்கில மருத்துவத்தின் கேடுகளையும்  அவரது ஹெல்த் டைம் மாத இதழ் மூலமாகவும், கூட்டங்கள் நடத்துவதன் மூலமாகவும், தமிழன் தொலைக்காட்சி நிகழ்ச்சி (6,30 வெள்ளிக் கிழமை மாலை) மூலமாகவும் வெளிப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வைத் தூண்டிவருகிறார். அவரது மாணவர்கள், இறைவழிமருத்துவம் பெற்றவர்கள் யாரும் சாதி மதம், இனம், என வேறுபாடு பார்ப்பதில்லை. விழிப்படைந்த மனிதர்களையும் சூழலையும் நேசிப்பவர்களாகவே பார்க்கிறேன்.
சித்தமருத்துவம் என்பது சாகாக் கலையைப் போதிக்கும் தமிழ் அறிவியலின் ஒரு சிறு பகுதியே. மனிதன் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை உணர்ந்து, கலந்து, அதன் தன்மைகள்ப் பெறும் முயற்சியே சாகாக் கலை. இதில் வெற்றிபெற்றவர்கள் சித்தர்கள்.
உலகெங்கும் சித்தர்கள் இருக்கிறார்கள்.சீனாவின் லாவோட்சு தொகுத்துத் தந்த தாவோ, ஜப்பான் கொரியாவில் ஜென்,கார்லோஸ் வெளிப்படுத்திய டான் ஜுவானின் வழிகள் –இவை போல…
தாவோ சித்தர்கள் போல சொன்னால், ‘சொல்லப்பட்ட தாவோ உண்மையானதல்ல’ இறைவழியை உணரத்தான் இயலும். வாய்ப்பிருந்தால் மரபுவழி நலவாழ்வு மையம் வாருங்கள். பிறருக்கு நான் இறைவழியில் சுகப்படுத்துவதைப் பாருங்கள் நீங்களும் சுவைக்கலாம் இறைவழியை.
இறைவழி மருத்துவம் யாருக்கானது
மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமையைப் பற்றிய இறையச்சத்தை நன்மையாக கருதி சிந்தித்துணர்ந்து நன்மையை நாடுபவர்களுக்கே இறைவழி மருத்துவம்.
திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம். படித்தவர்கள் பலர், திருக்குறளில் நலவாழ்வு பற்றிய இறைவழி மருத்துவ-சித்த மருத்துவ நுட்பங்கள் மிக எளிமையாக விளக்கப் படுகின்றது. உணர்ந்து பின் பற்றுபவர் மிகச் சிலரே.
தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியாததா திருக்குறள். நம் நாட்டில் மக்கள் பணத்தைப் பயன்படுத்தி மருத்துவ காப்பீடு என்ற பெயரில் நடப்பது என்ன?
எந்த ஒரு நோயையும் குணப்படுத்த வக்கில்லாத மருந்து-அறுவை வணிகத்துக்கு மக்கள் பணம் விரையமாகிறது. மக்களின் உயிரும் உடலும் பலியிடப் படுகிறது.
இந்திய அரசின் சட்டப்பிரிவு மருத்துவம் மற்றும் அழகு சாதனங்கள் பற்றிய சட்டம் செட்யூல் J 51 படி எயிட்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, ஆஸதுமா, கல்லீரல் சார்ந்த நோய்கள், கர்ப்ப பை சார்ந்த நோய்கள, போன்ற பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்க தடைகள் இருந்தும் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப் பணம் விளம்பரங்களாகவும், விழாக்களாகவும், கருவிகளாகவும் தடுப்பு மருந்துகளாகவும் வீணடிக்கப் படுவதும், மனித நலத்துக்கு எதிரான வணிகர்களின் பைகள் நிரப்ப படுவதும் ஏன்?
நம் நாட்டின் பல்கலைக்கழகங்கள் மனித எதிரிகளை வெளிப்படுத்தாமல அவர்கள் கொள்ளைகளுக்கு ஆதரவாக இருக்க காரணம் தமது செயல்பாடுகளுக்கு பெரிய வணிகர்களின் நிதி உதவியைச் சார்ந்திருப்பது தான்.
மக்கள் நலவாழ்வு பற்றிச் சிந்திக்காமல் இருக்க அனைத்து வழிகளிலும் (தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் போன்ற அனைத்து ஊடகங்களும்) தடுக்கப் படுகின்றனர். அடிமைக்கல்வி முறை, அடிப்படைத் தேவைக்கே(உணவு, தண்ணீர், உடை, வீடு) இவற்றுக்கே தொட்டுக் கொள் துடைத்துக் கொள் என்ற நிலையில் மக்கள் வாழ்க்கை.
காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை உழைத்தால்தான்- படித்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் எனும் நிலையில் மக்கள் வாழ்க்கை.
இதை எல்லாம் மீறி சிந்திக்க வாய்ப்பு பெற்றோர்தான் நலவாழ்வைத் தேடி நலம் பெறுகிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் விழிப்படையும் போது தான் தனி மனித விடுதலை சாத்தியம். இதற்கே என் எழுத்தும் பேச்சும்.
நீங்கள் குறிப்பிட்டது போல் போலியான தற்போதைய மருத்துவ முறைகளையும், மனித நேயமற்ற அறிவியலையும் பழம் பொருள் காட்சியகத்தில் வைக்க போதுமான அறிவியல் மற்றும் நூட்பங்களுக்கு குறைவில்லை இந்த உலகத்தில்-நம் நாட்டில்.
ஆனால் மக்கள் தம் நிலை உணர்ந்தவர்களாக இல்லை. நீண்ட நாளைய அடிமைக் கல்வி, வாழ்க்கை முறை, துய்ப்பு வெறி, இதில் கிடைப்பதாக நினைக்கும் சுகம், இது கூட இல்லாமல் போய்விடுமோ எனும் பயம், என எல்லாம் தான் மனிதனை நல வாழ்வில் இருந்து தடுக்கிறது.
சிறிது துணிவும், விழிப்புணர்வும் போதும் நலவாழ்வைப் பெற.

                                                                                                                                      நன்றி: தமிழவேள்நளபதி
                                                                                                                    கைபேசி-93458 12080

திங்கள், 15 பிப்ரவரி, 2016

அக்குபங்சர் ஆரோக்ய இல்லம், ACUPUNCTURE HEALTH HOME,

அக்குபங்சர் ஆரோக்ய இல்லம்,
                          ACUPUNCTURE  HEALTH  HOME, 
                           43,44  கார்த்திக் நகர், விசுவாச புரம்,
                                சரவணம்பட்டி, கோவை – 641 035

                        ஹீலர். S.ராஜேந்திரன், D.Asc, M.Acu,
                                    அக்கு டச் ஹீலர்.

                      செல்:  90437 30050,  94434 78850

                                 ஆரோக்கிய வாழ்விற்கு
                                இந்திய அக்குபங்சர்
                               (மருந்தில்லா மருத்துவம்)

             உணவாகப் பயன்படுத்த முடியாத எந்த ஒன்றையும், கண்டிப்பாக மருந்தாக பயன்படுத்தக் கூடாது.
           எந்த வகையான நோயாக இருந்தாலும், ஒருபோதும் கிருமிகளால் தோன்றுவது இல்லை. நிச்சயமாக எந்தவித மருந்துகளாலும் குணமாவதும் இல்லை.
                     கிருமிகள் என்பது நோய்களின் அடையாளம் மட்டுமே. அதுவே நிச்சயமாக நோய்க்கான காரணம் அல்ல.
                     பசித்துப் புசி ( நன்றாகப் பசித்தால் மட்டுமே உணவு உண்ண வேண்டும்)
           நொறுங்கத் தின்றால் நூறு வயது ( உணவை நன்றாக உமிழ்நீரோடு மென்று விழுங்க வேண்டும் )
           உடலில் உள்ள பல நோய்களுக்கும் மூலகாரணமாக அமைவது நமது வயிறு மட்டுமே.
                 பசியில்லாத போது ருசிக்காக உண்பது நல்ல நிலையில் இயங்கும் நம் ஜீரண உறுப்புக்களை பாதிக்கிறது..
           நோய்வாய்ப்படுதலும், சுகப்படுதலும் உயிர்ச்சக்தியின் தன்மையைப் பொறுத்ததேயன்றி மருத்துவரைச் சார்ந்தது அல்ல.
            மனித உடம்பு இயற்கையானது.  உணர்வுகள் உள்ளது. எனவே, சர்க்கரை,   B.P பரிசோதனைகள் தேவையற்றது.
               அனைத்து நோயாளிகளும் படும் கஷ்டங்கள் நோயின் விளைவுகள் தானே தவிர அதுவே நோய் அல்ல.
            மனதின் உறுதிதான் ஒருவருடைய வாழ்க்கையில் நோய் நொடியில் இருந்து பாதுகாப்பதாக இருக்கிறது.
                       தைராய்டு நோய்க்கு நமது வயிறும், சிறுநீரகமும் சக்தி குறைந்த நிலைதான் காரணம்.
     கர்ப்பப்பை,  பித்தப்பை,  குடல்வால் (Appendix), தைராய்டு, டான்சில்ஸ் போன்ற உறுப்புக்களுக்கு ஒவ்வொரு உணர்வுகள் உள்ளன. எனவே, அறுவை சிகிச்சை செய்து இவற்றை நீக்கி வாழ்நாள் முழுக்க நோயாளியாக ஆகி விடாதீர்கள்.
        உங்களுக்கு எப்போது புளிப்பு சுவை அதிகமாக பிடிக்க ஆரம்பிக்கிறதோ, அப்போதே உங்கள் கல்லீரல் கெட்டுக் கொண்டு வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
           எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுத்தவோ வேண்டுமென்றால் அந்த நோயின் அடிப்படைக் காரணத்தை அறிந்து அதனை குணப் படுத்த வேண்டும்.
      இரசாயன முறையில் தயாரிக்கப் பட்ட உணவுகள், ஊட்டச்சத்து நிரம்பிய மாவுப் பொருட்கள் (பவுடர்கள்), வைட்டமின், கால்சியம், இரும்புச் சத்து  மாத்திரைகள், குளிர்பானங்கள் ஆகிய இவைகள் உடல் இயற்கைக்கு புறம்பானதே. 
                மனம் அது செம்மையானால், எவ்வித மருந்துகள் எப்போதும் நமக்கு தேவையில்லை.
        ஒரு மனிதனின் குணம் என்பதே அவனுடைய இராஜ உறுப்புக்களின் (இதயம், மண்ணிரல், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல்) பலம், பலவீனத்தை பொறுத்தே அமைகிறது..
           அடிக்கடி ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை போன்ற டெஸ்ட்டுகள் நமது உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும்.
          முடிந்த அளவு நம் உணவுகளில் ருசியை மிதமிஞ்சிய அளவுக்கு அதிகமாக கூட்டி விடாதீர்கள். எப்போதும் ருசியை மிதமான அளவே வைத்துக் கொள்ளுங்கள்.
            இளநீரோ, பழ ஜீஸ் வகைகளையோ, தண்ணீரையோ வாய் வைத்து உதடு நனையும் படி குடிக்கவும் ( ஸ்ட்ரா வைத்து குடிக்க வேண்டாம்)
                  கிருமிகள் என்பது நோய்களின் அடையாளங்களே தவிர, அவைகளே நோய்க்கான காரணங்கள் அல்ல.
              தூக்கத்தில் குறட்டை விடுவது நம் சுவாச உறுப்புக்களில் இயக்கச் சக்தி குறைபாட்டை உணர்த்துகிறது.
              தவறான வாழ்க்கை முறையிலிருந்து நம்மை விடுவிக்க நோய் என்னும் நிலையை நமது உடல் நமக்கு தோற்றுவிக்கிறது.
                உலகில் தோன்றும் எல்லா நோய்களுமே மனிதனை கொல்வதற்காக வருவதில்லை. மாறாக மனிதனை சுகப் படுத்தவே, குணப்படுத்தவே வருகின்றன.
      பிராண சக்தி என்பது இயற்கை என்கிற மகாசக்தியின் சக்தி. அந்த சக்தி உடல் முழுவதும் பரவியுள்ளது.
       பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளிப்படும் கருமை நிற உதிரப்போக்கு உடல் கழிவு வெளியேறும் நிகழ்வுதான்.
           நல்ல ஜீரணசக்தி இல்லாதவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை மிகுதியாகச் சாப்பிடக் கூடாது. ஜீரண சக்தி உள்ளவர்கள் சுத்தமான பசும்பாலை காலை வேளை மட்டும் அருந்தலாம்.
            உடனடியாக வரக் கூடிய அனைத்து நோய்களுக்கும் (Acute Diseases)  உண்ணாவிரதத்தைக் காட்டிலும் சிறந்த மருந்து உலகத்தில் எதுவும் இல்லை.
           இயற்கையாகக்  கிடைக்கும் உணவுப் பொருட்களை நாம் உண்பதால் நம் உடல் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாது.
            தும்மல், சளி, இருமல் இருக்கும் போது பால் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
        அதிக நேரம் டிவி மற்றும் கம்ப்யூட்டர் பார்ப்பது நமது இதயத்தை பலவீனப் படுத்தும்.
          அதிக நேரம் படுக்கையில் படுத்துக் கொண்டு இருப்பது நமது நுரையீரலை பலவீனப் படுத்தும்.
              மனிதர்கள் தங்களுக்கு வரக்கூடிய எந்த நோயையும் தாங்களாகவே குணமாக்கிக் கொள்ளும் ஆற்றலை இயற்கையாகவே பெற்றுள்ளனர்.
          உடல் உறுப்புக்களில் தோலும், கல்லீரலும் தான் தங்களுக்கு ஏற்படும் சேதத்தை வெகு சீக்கிரமாக தாங்களே குணப்படுத்திக் கொள்கின்றன.
            அளவுக்கு அதிகமான கடின உடலுழைப்பு, தூக்கமின்மை நமது கல்லீரலை பலவீனப் படுத்தும்.
            நமது தோலானது ஒருவரை ஒருவர் மனதாலும், உடலாலும் இணைத்து உணர்வுப் பூர்வமாக செயல்பட வைக்கிறது.
            உமிழ் நீரின் அளவும், தன்மையும் உணவுக்கு உணவு, சுவைக்கு சுவை வித்தியாசப் படும்.
       ஒரு நிமிட நாடி பரிசோதனை, ஒரே ஒரு புள்ளி (Point),  ஒரு நிமிட சிகிச்சை இதுதான் முறையான, முழுமையான இந்திய அக்குபங்சர்.  


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

குடிப்பழக்கம்! தவறான உணவுப்பழக்கம்! எது அதிக தீமை?

குடிப்பழக்கமும், புகைபழக்கமும் உடல் நலத்துக்கு தீங்கு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி தான். ஏன் அது உடல் நலத்துக்கு தீமை என்றால் அது நமது முக்கிய உள்ளுறுப்புகளின் சக்தியை விரயமாக்கி, அதன் இயக்கத்தை தடை செய்கிறது. நாளடைவில் அவ்வுறுப்புகளே செயலிழக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைகிறது.
உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படைவது வெறும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தால் மட்டும் தான் நிகழ்கிறதா? அப்படியானால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமல்லவா?
இக்கேள்வியானது நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
நமது உள்ளுறுப்புகளை பாதிக்கும் எந்த ஒரு செயலும் அல்லது பழக்கமும் உடல் நலத்துக்கு தீங்கு தான். அந்த வகையில் பார்த்தால் இன்றைக்கு மனிதர்களின் பல நோய்களுக்கு காரணம் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தை விட, அவர்களின் தவறான உணவுப் பழக்கம் தான்.
அனைவரும் குடிப்பதில்லை, அனைவரும் புகை பிடிப்பதில்லை. ஆனால் அனைவரும் சாப்பிடுகிறோம். “என்ன சாப்பிட வேண்டும்?, எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்?” என்ற தெளிவில்லாமல் நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவுமே நமக்கு நோய் விளைவிக்கக்கூடியது தான். குடி மற்றும் புகைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைக்கும், தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
உதாரணமாக,
அதிகமாக குடித்தால் கல்லீரல் பாதிக்கப்படும். உண்மை. அதை விட பெரிய உண்மை அதிகமாக புளிப்பு சுவை சேர்த்துக்கொள்வதும் கல்லீரலை பாதிக்கும் என்பது.
குடிப்பழக்கம் உள்ள ஒருவர் வாரம் இரண்டு முறை மது அருந்துகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரது கல்லீரல் நிச்சயம் பாதிக்கப்படும்.
தினமும் ஒருவர் இட்லி, தோசை சாப்பிடுகிறார். பிரட், பீட்சா, பிஸ்கட், பப்ஸ் சாப்பிடுகிறார். உணவுகளில் சுவைக்காக புளிப்பு சுவையை அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொள்கிறார். இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடுகிறார். பசிக்கிறதோ இல்லையோ நேரத்துக்கு சாப்பிட்டு விடுகிறார். இரவு தாமதமாக உண்பதும், பசியில்லாத போது உண்பதும் புளித்துப் போய் அமிலத்தன்மை ஏற்படுத்தி புண்கள் உண்டாக்கும். ஆகவே இவரது கல்லீரல் பாதிக்கப்படுவதும் நிச்சயம்.
மேற்கண்ட இருவரில் குடிப்பழக்கம் உள்ளவரை விட, குடிப்பழக்கம் இல்லாத, தவறான உணவுப்பழக்கம் கொண்டவருக்குத் தான் கல்லீரல் அதிகம் பாதிக்கப்படும்.
காரணம் பல இருக்கலாம். ஆனால் விளைவு ஒன்று தான். ஒரே விளைவை ஏற்படுத்தும் பல காரணங்களையும் ஒத்த தன்மையுடையதாக எடுத்துக்கொள்வதில் தவறில்லையே! இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அபாயம் குடிப்பழக்கமோ அல்லது புகைப்பழக்கமோ அல்ல. தவறான உணவுப் பழக்கம் தான்.
நாம் தினமும் மூன்று வேளைகள் குடிப்பதில்லை. ஆனால் அனைவரும் தவறாமல் உணவு உண்கிறோம். அந்த உணவு தான் நம் உடலாக மாறுகிறது. நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பது பெரும்பகுதி நாம் உண்ணும் உணவை சார்ந்தே இருக்கிறது. ஆகவே உணவைப் பற்றிய தெளிவான புரிதல் கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது.
ஒவ்வொருவருமே உணவைப் பற்றிய அறிவும் தெளிவும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். இது சிறு வயதில் இருந்து வேறெந்த கல்வி அறிவை விடவும் முக்கியமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய பாடமாகும்.

சரியான உணவுப்பழக்கமும், முறையான யோகப் பயிற்சிகளும் இன்றைய மனித குலத்தின் அத்தியாவசிய தேவைகளாகும். இது அவர்களின் உடல் பற்றியது மட்டுமல்ல. மனம் மற்றும் மனித வாழ்வின் மகத்துவம் பற்றியதுமாகும்.

உணவின் தெளிவே ஆரோக்கியத்தின் விடியல்!

உணவு தான். . . உணவு மட்டும் தான் மனித இனத்தின் முதல் தேடலாக இருந்தது. காரணம் உணவு தான் உடலை வளர்க்கிறது. உடலின் தேவைகளில் முதல் முக்கிய தேவை உணவு தான். நாம் உண்ட உணவு தான் நம் உடலாக மாறியிருக்கிறது. உணவு தான் மனிதனின் மையம். அவனை அங்கிருந்து தான் வளர்க்கவோ அழிக்கவோ முடியும். உணவே சகலமும் என்று சொன்னால் மிகையாகாது.
எந்த ஒரு மனிதனுக்கு உணவு பற்றிய தெளிவு இருக்கிறதோ, அவனை ஆரோக்கியம் அரவணைத்துக் கொள்கிறது. இவ்வுலக வாழ்விற்கு உடலே பிரதானம். உடலுக்கோ உணவே பிரதானம். பசிக்கும் அது தான் தீர்வு. நோய்க்கும் அது தான் தீர்வு.
என்றைக்கு மனிதன் தன் நோய்களுக்கு தீர்வாக(மருந்தாக) உணவை விடுத்து ரசாயனங்களை நோக்கி தன் பார்வையை திருப்பினானோ அன்றிலிருந்து வளர்ந்தது தான் இன்றைக்கு இருக்கும் பல வகையான நோய்களும். இன்று நாம் கேள்விப்படும் பல நோய்கள் ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லவே இல்லை. மனிதன் தன் நோய்களுக்கு தீர்வாக மீண்டும் உணவுக்குத் திரும்பாத வரை அவனுக்கு ஆரோக்கியம் வாய்க்கப்போவதில்லை. உடலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை உள்ளேயே அடக்கி வைத்து ரசாயனங்கள் தரும் தற்காலிக சுகமானது, நிச்சயம் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டே ஆகவேண்டும்.
மனித உடல் ஏற்றுக்கொள்ளக் கூடிய உணவுகளை தயாரிக்க இயற்கையால் மட்டுமே முடியும். மனிதன் தனக்கு தேவையான உணவின் ஆற்றலை தன் சொந்த ஜீரண சக்தியில் இருந்துதான் தயாரிக்க முடியும். மனிதனால் ஆரம்பிக்கப்பட்ட ரசாயன தொழிற்சாலையில் அப்பணி நிகழ முடியாது. ரசாயன தொழிற்சாலையும் இயற்கையும் ஒன்றாகிவிடுமா என்ன? மனித அறிவானது அதனைப் படைத்த இறை ஆற்றலுடன் தன்னை இணை வைத்துக்கொள்ளும் பெரும் பாவத்தை செய்யத் தொடங்கியுள்ளது.
உணவாகக் கொள்ள முடியாத எதையும் மருந்தாகக் கொள்ள முடியாது என்பது மனிதனுக்கான இயற்கையின் உணவு விதியாகும். இதனை நாம் முழுமையான தெளிவுடன் உணர்ந்து கொள்ளவேண்டிய முக்கியமான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத் தான்’ என்பது பழமொழி. இதில் சொல்லப்படும் மருந்து என்பது உணவின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. அதையே கூட மூன்று நாட்களுக்கு உண்டாலே போதும் என்கிறது நம் கலாச்சாரம். ஆனால் நாம் இன்றைக்கு ரசாயனத்தால் ஆன மருந்துகளை வருடக்கணக்கில் சலிக்காமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். வருடக்கணக்கில் மருந்துகள் சாப்பிடுகிறோமே, இருந்தும் நோய்கள் நமக்கு சரியாகவில்லையே என்று நாம் என்றைக்காவது யோசித்திருக்கிறோமா?

‘உணவே மருந்து, மருந்தே உணவு’, ‘உண்ணும் உணவில் நோயில்லை, உண்ணும் முறையில் தான் நோய்’ என்ற எளிமையான தெளிவுகளில் மனிதனுக்கான மாற்றம் ஒளிந்திருக்கிறது.