ஒரு
செல்லின் இயக்கமே ஒட்டு மொத்த உடலின் இயக்கம்
நம் உடலை பெரும்பாலான மருத்துவங்கள் வெறும் தசைகள், நரம்புகள், இரத்தம், எலும்பு, உள்உறுப்புகள் என்று பொதுவாகவே அணுகுகின்றன. ஆனால் துண்டு, துண்டாகப் பகுத்தாலும் இறுதியாகக் கிடைக்கும் பிரிக்கவே முடியாததாக எஞ்சும் பகுதிதான் – செல்!. நம் உடல் 50 – 70 ட்ரில்லியன் செல்கள் கொண்டது [ஒரு ட்ரில்லியன் என்பது “ஒரு லட்சம் கோடி“], இந்த செல்லிகளின் தொகுப்பான நம் உடல் ஒரு சிற்றியக்கம் அல்ல அது ஒரு பேரியக்கம்... ஆனால் ஒற்றை செல்லின் இயக்கத்தை புரிந்து கொண்டால் ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்...

வாருங்கள்
செல்களில் அப்படி என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம்...
செல்லின் இயக்கத்தைப் புரிந்து கொள்வதே உடலியலின் துவக்கமாகவும் அமையும்.
செல் – என்பது உடலின் கடைசித்துக்கள். உயிருள்ள கடைசிப் பொருள்.
நம் உடலின் எந்தப் பகுதியை துண்டு, துண்டாகப் பகுத்தாலும் இறுதியாகக் கிடைக்கும் பிரிக்கவே முடியாததாக எஞ்சும் பகுதிதான் – செல்!
இந்த செல்கள் கூட்டாக இருப்பதை – திசு என்று (TISSUE) என்று அழைக்கிறார்கள். செல்லை கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியால் தான் பார்க்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட செல்கள் இணைந்து திசு என்ற பெயரைப் பெறுகிறது. இந்த செல்களின் கூட்டு அதிகமாகிற போது – கண்களால் பார்க்க முடிகிற அளவாக மாறுகிறது. செல்கள் இணைந்தால் – திசு, திசுக்கள் இணைந்தால் பகுதி அல்லது உறுப்பு.
உடலிலுள்ள பகுதிகளின் பெயரால் இத்திசுக்களும், செல்களும் அழைக்கப்படுகின்றன.
உதாரணமாக – தோலில் உள்ள திசுக்கள் – தோல் திசுக்கள்.
செல்கள் – தோல் செல்கள்.
அதேபோல, முடியில் உள்ள திசுக்கள் – ரோமத் திசுக்கள்.
செல்கள் – ரோம செல்கள்.
இதயத்தில் உள்ள திசுக்கள் – இதயத் திசுக்கள்.
செல்கள் – இதய செல்கள்.
சிறுநீரகத்தில் – சிறுநீரகத் திசுக்கள் – சிறுநீரக செல்கள்.
...இவ்வாறு, நரம்பு செல்கள், எலும்பு செல்கள், தசை செல்கள், மூளை செல்கள்... என்று எல்லா உறுப்புக்களின் பெயர்களாலும் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள திசுக்களும் – செல்களும் பெயரிடப்படுகின்றன. அமைந்திருக்கும் பகுதிக்கேற்ப செல்களின் பணிகளும் மாறுகின்றன.
அனைத்து செல்களுக்கும் வெவ்வேறு விதமான பணிகள் இருந்தாலும் – எல்லா வகையான செல்களும் ஒரே அடிப்படையில் தான் இயங்குகின்றன. அந்த அடிப்படைப் பணியை நாம் புரிந்து கொள்வது ஒட்டுமொத்த உடலையே புரிந்து கொள்ளத் துணை நிற்கும்.
ஒவ்வொரு செல்லும் – தனக்குத் தேவையான உணவை உட்கிரகிப்பதும், அதிலிருந்து உருவான கழிவுகளை வெளித்தள்ளுவதுமான இரண்டு தன்மைகளோடு கூடிய ஒரு வேலையைச் செய்து வருகிறது.
செல்லின் உட்புறம் கழிவுகள் ஒன்று திரட்டப்பட்டு செல்சுவர் அருகே நிறுத்தப்பட்டிருக்கும். செல்லிற்குத் தேவையான உணவு செல்லிற்கு வெளியே இருக்கும். சவ்வூடு பரவல் (Asmotic Pressure) இயக்கம் மூலம், செல்லின் உட்புறம் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு, வெளியே இருக்கும் உணவு உட்கிரகிக்கப்படுகிறது. செல்லின் சுவராக அமைந்துள்ள சவ்வை ஊடுறுவி உணவு உள்ளேயும், கழிவுவெளியேயும் பரவுவதால் ‘சவ்வூடு பரவல்’ என்று அழைக்கப்படுகிறது.
இது செல்லின் அடிப்படையான இயக்கமாகும். இதனையே ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு உடலும் செய்கிறது. தனக்குத் தேவையானதை உட்கொண்டு, தேவையற்றதை வெளித்தள்ளுகிறது.
இதில் – கழிவு வெளியேற்றத்தை இன்னும் நுட்பமாக அறிந்து கொள்வோம்.
செல்லில் வெளியேற்றப்படும் கழிவானது – அன்றாடம் உருவாகும் சாதாரணக் கழிவாகும். இதே கழிவு தேக்கம் அடைந்து விஷக் கழிவாக மாறும் போதும், இரசாயனங்களின் [மருந்துகளின்] தாக்கத்தால் இரசாயனக் கழிவுகள் செல்லினுள்ளே உருவாகும் போதும் என்ன நடக்கிறது?
கழிவு வெளியேற்றம் மூலம் இவ்விதமான கழிவுகள் வெளியேற்றப்படுவதில்லை. இரசாயன [மருந்து], விஷக் கழிவுகள் இப்படி சாதாரண முறையில் வெளியேற்றப்பட்டால் பிற செல்களும், உடலின் இயக்கமும் பாதிப்படையும். இரத்தம் மூலம் இரசாயன[மருந்து], விஷப் பொருட்கள் சிறுநீரகத்திற்கு கடத்தப்பட்டால் சிறுநீரகங்கள் பழுதடையும்.
அப்படியானால் – இவ்விதமான கழிவுகள் என்ன ஆகும்?
இப்போது செல்லின் அமைப்பைப் பாருங்கள். செல் – செல் சுவரால் சூழப்பட்டுள்ளது. அதனுள்ளே செல் திரவம் (Cyto plasm) உட்கரு, கோல்கை உறுப்புக்கள், மைட்டோ காண்டிரியா ... போன்ற பல பகுதிகள் காணப்படுகின்றன.
‘லைசோசோம்’ (Lysosome) என்ற ஒரு புதிய பகுதியும் செல் திரவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. Lyso – அதாவது ’LYSE’ என்ற சொல்லிற்கு ‘அழிக்கும்’ என்று பொருள். LYSOSOME என்பது அழிக்கும் உறுப்பாகும்.
இந்த ‘லைசோசோம்’ – இரசாயன விஷக் கழிவுகளை அழிக்கிறது. லைசோசோமின் ‘அழிக்கும் இயக்கம்’ அற்புதமானது.
செல்லின் உட்புறம் இரசாயன விஷக் கழிவுகள் ஒன்று திரட்டப்பட்டு – சவ்வால் (Mucus Membrane) சூழப்பட்டிருக்கும். சவ்வு போன்ற (சளி போன்ற) பிசுபிசுப்பான பொருளால் விஷக் கழிவு சூழப்படும் போது அதன் தீய அதிர்வுகள் வெளியேறாதபடி பாதுகாக்கப்படுகிறது. அப்படி, சூழப்பட்ட இரசாயனக் கழிவுகளின் முன்னால் லைசோசோம் மிதந்த படியே வருகிறது. நேருக்கு நேராக அக்கழிவுகளின் மேல் மோதி, தானே உடைகிறது. இந்த லைசோசோம் செறிவு மிகுந்த அமிலங்களால் ஆனது. லைசோசோம் மோதப்பட்டு விஷக் கழிவுகள் எச்சமின்றி அழிக்கப்படுகிறது. இப்படி, ‘அழிக்கும் இயக்கம்’ முழுமையான நிலையில் ‘லைசோசோம்’ மீண்டும் உருவாகி விடுகிறது.
உடலின் மிகச்சிறிய துகளான செல்லில் நடைபெறும் இயக்கம் இது! உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டுமா? அல்லது அழிக்கப்பட வேண்டுமா? என்பதை ஒவ்வொரு செல்லும் முடிவு செய்கிறது. தானே இயங்குகிறது.
இந்த செல்லின் அடிப்படையைக் கொண்டு, ஒவ்வொரு உள்ளுறுப்பையும் அணுகுவோமானால் – உடலை முழுமையாகவும், எளிமையாகவும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இன்றைய நவீன மருத்துவம் இந்த இயக்கத்தை அணு அளவுகூட உணரவில்லை என்பதே உண்மை...
மேலும், நம் உடலில் உள்ள செல்கள் உணர்வுகளின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை அடைகின்றன, அதாவது நல்ல உணர்வுகள் ஒவ்வொரு செல்களிலும் உள்ள அனைத்து நோய்க்கூருகளையும் எளிதில் வெளியேற்றி ஆரோக்யத்தையும், பய உணர்வு ஒவ்வொரு செல்லையும் அழித்து நோயை உருவாக்குகிறது.
செல்கள் எவ்விதம் இயங்குகின்றன? என்ற கேள்விக்கு இன்றைய நவீன விஞ்ஞானம் ஜீன்களை காரணமாகக் கூறுகிறது. ஆனால் மனிதனைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் ஜீன்கள் மனித சிந்தனைகளால், நம்பிக்கையால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன? என்பதை அமெரிக்க ஆய்வாளர் டாக்டர்.புரூஸ் லிப்டன் தன் கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்து வருகிறார்.
மேலும் டாக்டர்.புரூஸ் லிப்டன் அவர்கள் செல்களைப் பற்றிய ஞானமிக்க “THE BIOLOGY OF BELIEF” மற்றும் SPONTANEOUS EVOLUTION என்ற இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.

மேலும் டாக்டர்.புரூஸ்
லிப்டன் அவர்கள் "உணர்வுகளின் உயிரியல் - Biology of
Perception" என்ற வீடியோவில் மிகவும் தெளிவாக இதுபற்றி விளக்கம்
கொடுத்துள்ளார் நீங்களும் பார்த்து பயனடையுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக