சனி, 29 நவம்பர், 2014

சர்க்கரை நோயாளிகளே... அக்குபங்சர் இருக்க கவலை ஏன்?

                      சர்க்கரை நோயாளிகளே... அக்குபங்சர் இருக்க கவலை ஏன்?
                                         ( Diabetes)
இன்றைய காலகட்டத்தில் பல நோய்களில் மிகவும் மோசமானது என்று சொன்னால் அது சர்க்கரை நோய்தான். சர்க்கரை அதிகம் உள்ள ரத்தம் உடல் முழுவதுக்கும் செல்வதால் நோயாளியின் கண், இதயம், சிறுநீரகம், மூட்டுகள் மற்றும் நரம்புகள் என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.
ஏராளமான காரணங்கள் இருப்பினும், கணையம் என்ற முக்கியமான உறுப்பு பாதிக்கப்படுவதால்தான் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
கணையத்தில் இருந்து சுரக்கும் "இன்சுலின்'தான், ஒருவருடைய ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
காரணங்கள் என்ன? கணையம் பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, பரம்பரைக் காரணங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூறலாம். இவை தவிர மன அழுத்தம், உடலுக்குள் ஏற்படும் அதிக வெப்பமும் மிக முக்கியமான காரணங்களாகும்.
அக்குபஞ்சர் கூறுவது என்ன? ஒருவருடைய உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களின் தொடர்ச்சியாக மனிதனுடைய உடலில் பாதிப்புகள் ஏற்படும் என்று அக்குபஞ்சர் மருத்துவ முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.
இது தவிர தவறான ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு சரியான மருந்து அல்லது சரியான தீர்வு என்றால், கணையத்தை மீண்டும் சீராகவும் ஒழுங்காகவும் வேலை செய்ய வைத்து தேவையான அளவுக்கு இன்சுலினை சுரக்கச் செய்ய வேண்டும்.
ஆனால், துரதிருஷ்டவசமாக கணையத்தை சீராக "வேலை' செய்ய வைக்கவோ, குணமாக்கவோ இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ முறைகள் ஒன்றுகூட இல்லை என்றே சொல்லலாம்.
இதனால்தான் "சர்க்கரை நோய் கட்டுப்படுத்தக் கூடியது; ஆனால், குணப்படுத்தக் கூடியதல்ல' என்று சொல்கின்றனர். ஆயினும் இந்த சர்க்கரை நோயை அக்குபஞ்சர் மருத்துவத்தால் குணப்படுத்த முடியும்.
கணையம் மற்றும் சுரப்பிகள் தொடர்பான அக்குப் புள்ளிகளையும், மண்ணீரல் ஓடுபாதையில் உள்ள அக்குப் புள்ளிகளையும் தொடர்ந்து தூண்டினால், சுமார் இருபது நாள்களில் இரண்டு அல்லது மூன்று யூனிட்டுகள் கூடுதலாக இன்சுலினை கணையம் சுரக்கும். இதனால் இன்சுலின் சுரப்பு ஒழுங்குபடுத்தப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம்.
மண்ணீரலும் காரணம்: சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு, சுரக்கப்படும் இன்சுலின் அளவு குறைவது மட்டும் காரணம் அல்ல: ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதற்காக, உடல் தசைகளில் உள்ள ஓர் அமைப்பான மண்ணீரல் சரிவர இயங்காததும் ஒரு காரணம் என்று ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்படுள்ளது.
மண்ணீரல் ஓடுபாதை, உடலில் உள்ள தசைப் பகுதியைப் பராமரிக்கும் குணம் கொண்டது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில், மண்ணீரல் ஓடுபாதையையும் சீனர்கள் சேர்த்திருக்கின்றனர் என்பதை அறியும்போது வியப்பு ஏற்படுகிறது.
வெப்பம் காரணமாக... சர்க்கரை நோய்க்கு, நம் உடலில் உருவாகும் வெப்பமும் முக்கியமான ஒரு காரணம் என்று அக்குபஞ்சர் மருத்துவம் சொல்கிறது. சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். அடிக்கடி சாப்பிடுவார்கள். அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உடலின் மேல்பகுதியில் ஏற்படும் வெப்பத்தால், தொண்டை வறண்டு அதிக தாகம் உண்டாகிறது. மத்தியப் பகுதியில் உள்ள வெப்பத்தால், உணவை இரைப்பை சீக்கிரம் செரித்து, பசியை ஏற்படுத்துகிறது. கீழ்ப்பகுதியில் உள்ள வெப்பத்தால், சிறுநீர் ஓடுபாதை அதிகமாகத் தூண்டப்படுவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக