ஆங்கில
மருத்துவம் எத்தகைய துன்பங்களைத் தரக் கூடியது என்பதையும், அந்த மருத்துவத்தினால் ஏற்பட்ட கேடுகளை எவ்வாறு
தன் சித்த மருத்துவத்தின் மூலம் சித்த மருத்துவர் குணமாக்கிய அனுபவங்களை வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளதை படித்துப்
பயன் பெறுமாறு வெளியிடப் பட்டுள்ளது.
குளியல் நல்லது.
நம்
குழந்தைகளுக்கு தறபோதய நவீன உலகில் கிடைக்காதது – நம் பணத்தால் வாங்கித்தர இயலாதது மிக சில
தான்.அவற்றுள் சில; அவர்களின் உடல் நலம், மன நலம், அவர்களின் தாத்தாகளும், தந்தைகளும் அனுபவித்த இளம் பருவ சுதந்திரம் போன்றவை தான்.
நடைமுறையில்
எவ்வளவுக்கெவ்வளவு நாம் வசதி படைத்தவர்களாய் இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மேற்கண்ட
தேவைகள் நமது குழந்தைகளுக்கு அன்னியமாகிப் போகிறது.
நமது
பிள்ளைகளுக்கு நல்ல தூக்கம், கழிவுகளை வெளியேற்றல், குளியல், சுவைத்துச் சாப்பிடுதல், பிற குழந்தைகளுடன் விளையாடுதல், இயற்கையை சுவைத்தல் (இரவு வானத்தை
நட்சத்திரத்தை பார்ப்பது போன்ற) போன்ற தேவைகள் மிக ஆடம்பரமாக,
நினைத்துப் பார்ப்பதே சுமை
என்றாகிப் போனது. சிலருக்கு! (உடல் நலம் பேணும்! பெற்றோரைப் பெற்ற குழந்தைக்கு)
எல்லாம் கடமைக்கு நேரத்துக்கு செய்ய வேண்டிய கட்டாயமாகிப் போனது.
மரபுவழி
சித்த மருத்துவர் எனும் என் அனுபவத்தில்.
பரமக்குடியில், என் பையன் எவ்வளவு நேரம் படித்தாலும் நல்ல
மதிப்பெண் வாங்குவதில்லை. அவன் அப்பா கடுமையாய் அடிக்கிறார், எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, உதவ முடியுமா? என 13 வயது பையனை அழைத்து வந்தார் அவனது தாய்.
பையனை
பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். கால்களின் பெருவிரல் நகங்கள் கடுமையாய் சிதைந்து
போய் இருத்து அவற்றை சுற்றிலும் உள்ள தோல் அழுகிப்போய் இருந்த்து. அடுத்த விரல்
நகமும் பாதிக்கப் பட்டிருந்த்து. கைவிரல் நகங்களும் கருத்துப்போய் மேடுபள்ளமாக
அதனடிப்பகுதித் தோல் புண்ணாகி இருந்த்து. மேலும் நாடி ஆய்வுக்குப் பின் கேட்டேன், இவன் உடல் முழுமையும் கடும் எரிச்சலும், வலியும் இருக்கிறது மேலும் வாயும்
உணவுப்பாதையும், வயிறும் புண்ணாகிப் போயுள்ளது நீங்கள் கொடுத்த
எதிர்முறைய மருந்துகள் தான் காரணம் என்றேன்.
அவன்
தாய் அதன் பின்தான் அவன் பழக்கங்களை பொருத்திப் பார்த்துவிட்டுக் கூறினார்,
ஆமாம் டாக்டர் அவன் அதிக
நேரம் குளியலறையில் தான் கிடப்பான். பள்ளிவிட்டு வந்தவுடன் பையைத் தூக்கிப் போட்டுவிட்டு
நீர்க் குழாய்க்கடியில் உட்கார்ந்து விடுவான். சிறு வயதிலிருந்தே எங்கள்
வீட்டிலும் பிறர் வீடுகளிலும் உள்ள மாத்திரை மருந்துகளை எடுத்துத் தின்றுவிடுவான்
இதற்காகவே புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளுவான் என்றார்.
அவன்
உடல் நிலையை நீண்டகாலமாக அவன் வீட்டுப் பெரியவர்கள் அறியாது இருந்துள்ளனர்.
தங்களின் கனவுகளின் சுமையை இந்த குழந்தையின் தலையில் எற்றியுள்ளனர். தங்களுக்குத்
தெரியாத-தங்களின் சக்திக்கு மீறிய ஆங்கில வழிக் கல்வி –
தாங்கள் இழந்த்தைத் தங்கள்
குழந்தை மூலம் ஈடு செய்கிறார்களாம். அதிக சத்துணவு, மூளையை வளர்க்கும் சத்து மாத்திரைகள்,
விடுமுறை எடுக்காது பள்ளி
செல்ல சுர மாத்திரைகள், வலி மாத்திரைகள், சிறப்புத் தனிப்பயிற்சி வகுப்புகள்;
இன்று இவை எல்லாமும்
சேர்ந்து அந்தச் சிறுவனின் உடலை நாசமாக்கி உள்ளன.
இப்போதய
நிலையில் இவனால் உறுதியாகப் படிக்க முடியாது எனவே ஒரு ஆண்டு ஓய்வெடுத்து உடலை
சரிசெய்த பின் சுமையைக் குறைத்து (ஆங்கில வழியிலிருந்து தமிழ்வழிக்கு (தாய்
மொழிக்கு), எளிய பள்ளிக்கு மாற்றக் கூறினேன்) மாற்றிப் படிக்க
வைக்கும்படி கூறினேன்.
சென்னையில், வங்கி அதிகாரி ஒருவர் தன் மூன்று குழந்தைகளை
அழைத்து வந்தார். மூத்தவள் பொறியியல் மூன்றாம் ஆண்டு,
இரண்டாவது பையன் உடல் நிலை
காரணமாக கல்லூரி படிப்பை நிறுத்தியிருந்தான். இளைய பெண் மேல்நிலை முதலாம் ஆண்டு.
மூவரின்
உடல்நிலையும் மிக பாதிக்கப்பட்டிருந்த்து. பார்வைக் குறைவு,
கடும் உடல்வலி,
கடும் மாதவிடாய் கோளாறுகள்,
தலைவலி,
தலைநீரேற்றம்,
கண்வலி-எரிச்சல்,
மனஅமைதியின்மை,
சளி,
இருமல்,
உடல் கருத்துப் போதல்,
பொடுகு,
முடிஉதிர்தல்,
மலச்சிக்கல்,
மூலம்,
உடல் அரிப்பு,
புண்கள்,
வயிற்றுவலி,
நாளெல்லாம் தூக்க கலக்கம்
இது போன்ற நிலை. இவர்கள் தாயின் நிலையும் இது தான்.
நோய்க்கான
காரணங்களை ஆய்ந்த போது, சரியாகத் தூங்குவதில்லை (இரவு நீண்ட நேரம் விழித்துப்
படித்தல் 12-1 மணி வரை), தினமும் தலைக்கு குளிக்காத்து (7-10 நாளுக்கு ஒரு முறை
குளிப்பது), கழிவுகளை வெளியேற்றுவதில் முறையின்மை (2-3 நாட்களுக்கொரு
முறை), உணவை சுவைத்து சாப்பிடாமை, போன்ற அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்த்தே
நோய்க்கான அடிப்படைக் காரணம் என்று அறிய முடிந்த்து. இவர்கள் தாய்க்கு;
யாரும் உதவுவதில்லை,
அன்பாகப் பேசுவதில்லை,
வேலை பளு தாள முடியவில்லை,
சரியான தூக்கம் இல்லை இதனால்
கடும் சோர்வு, படபடப்பு, நடுக்கம், தலைவலி, மூட்டுவலிகள், உடல் எரிச்சல் என்னுடன் பேசிக்
கொண்டிருக்கையிலேயே தூங்கிவிட்டார்.
இவர்கள்
தொல்லைகள் தீர வேண்டுமானால், இரவு மணி 9 முதல் அதிகாலை 3 மணி வரை கண்டிப்பாக
ஓயவெடுக்க-தூங்க வேண்டும். காலை 6 மணிக்குள் பச்சைத் தண்ணீரில் நன்கு தலைக்கு
குளிக்க வேண்டும். சூடாக்காத- மண் பானைத் தண்ணீரைத் தாகம் அறிந்து குடிக்க
வேண்டும். மூன்று வேளையும் உணவுக்கு முன் நன்கு பழுத்த இனிப்பான பழங்கள் சாப்பிட
வேண்டும். உயிராற்றலுக்கு எதிரான எதிர்முறைய (அலோபதி) மருந்துகளை உடன் நிறுத்த
வேண்டும், இரவு 8 மணிக்கு மேல் கண்களுக்கு வேலை தரக் கூடாது (படிக்க,
தொலைக்காட்சி-கணினி
பார்க்கக் கூடாது).
எனது
எளிய சோதனை முறைகளால், நான் அவர்கள் உடல நிலையை கணித்துக் கூறியதும்,
பின் இறைவழி மருத்துவத்தால்
உடனடியாக அவர்கள் உடல் மனத் தொல்லைகள் குறைந்து புத்துணர்வைப் பெற்றதாலும்,
தூரத்திலிருந்தும் கூட
இறைவழி மருத்துவ உதவி பெற முடியும் எனும் புரிதலாலும் தங்கள் பழக்கங்களை மாற்றிக்
கொள்ள ஒப்புக்கொண்டனர்.
இதுவரை
அவர்களது நடைமுறை வாழக்கை;
காலை
6 மணியை ஒட்டி எழுவது உடன் அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டே தேனீர்,
உடலைக் கழுவிவிட்டு,
அம்மா எரிச்சலுடன் தலை
பின்னும் போதே வயிற்றில் அல்லது சிறிய டப்பாவில் கிடைத்த்தை நிரப்பிக்கொண்டு
6.45க்கு வரும் கல்லூரி வாகனத்தைப் பிடிக்க ஓட்டம்.
பின்
மீண்டும் இரவு 7மணிக்கு மேல் வீடு (டியூசன், சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு) உடலைக்
கழுவிவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்து எதையாவது கொறிப்பது. பின் எழுத்து வேலை
(வீட்டுப்பாடம் அல்லது ரெக்கார்டு ஒர்க்). பின் 11 மணிக்கு இரவு உணவு பின்
மீண்டும் ஆசிரியர் கொடுத்த எழுத்து வேலையை பொருத்து 1 அல்லது 2 மணிக்கு மேல் தான்
தூக்கம். இரவில் படிக்காதீர்கள், காலையில் படிக்கலாம் என்று சொன்னால் நாங்கள்
எங்கே படிக்கிறோம் எழுத்து வேலைக்கே நேரம் போதவில்லை என்று கூறி வருந்துகிறார்கள்.
இது
பொதுவாக மாணவர்களின் அன்றாட வாழ்க்கை.
குறிப்பாக 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுடைய நிலை மிகப்
பரிதாபம். அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகளும் உண்டு. விடுமுறை
என்பதே கிடையாது இவர்களுக்கு.
இந்த
மரண வேதனைகளுடன் – கல்லூரிக் கணவுகளுடன் பள்ளிப் படிப்பில் நல்ல மதிப்பெண்
பெற்றுத் தேறுபவர்கள், அதிக பணம் கொடுத்துச் சிறப்பு பாடப் பிரிவுகளில் சேர்ந்தால
அவர்களின் நிலை சொல்லி மாளாது. நீங்களே சிறிது கவனித்துப் பாருங்கள் கல்லீரல் கெட்டுப்
போன உங்கள் பிள்ளைகளை.
இந்த
நரக வேதனையை பணத்துக்காக – தன் குடும்பத்துக்காக தியாகமென்று அனுபவித்தவர்கள் எவரும்
பிற மனிதர்களை நேசிப்பவராகவோ, தன் குடும்பத்தை நேசிப்பவராகவோ,
ஏன் தன்னை நேசிப்பவராகவோ
இருக்கவே முடியாது. பணத்தை மட்டும் நேசிப்பவராக மட்டும் தான் உருவாகமுடியும். இதற்கு உதாரணம். நம் நாட்டு அதிகார வர்க்கமும்,
அறிவியலாளர்களும் தான்.
குளியல்
என்பதே தலைக்குக் குளிப்பது தான். முதலில் தலையை நனைத்த பின்தான் உடலை நனைக்க
வேண்டும். காரணம் உடலில் முதலில் நீர் ஊற்றினால் உடல் வெப்பம் வேகமாகத்
தலைக்கேறுவதால் பாதிப்புண்டாகும். குளத்தில் குளிக்கும் பெரியவர்களை கவனித்துப்
பார்த்தவர்கள் –குளிப்பவர்கள் ஓரளவு ஆழத்துக்குச் சென்று குனிந்து தலையை
அலசிய பின் தான் முழுவதும் மூழ்கிக் குளிப்பார்கள் அப்போது முதுகின் வெப்பத்தை
உணர்ந்து பார்த்தவர்கள் அறிவர். தலையில் உள்ள மிக முக்கிய உடல் கருவிகளைத் திடீரென
ஏற்படும் உடல் வெப்ப மாற்றத்திலிருந்து காக்க வேண்டியுள்ளது. தலைக்கு தண்ணீர்
விடாது. குளித்தால் தலை வெப்பம் குறையாது மேலும் அதிகரிக்கவே சேய்யும். வாரம்
முழுவதும் இவ்வாறு செய்துவிட்டு வாரம் ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு தடவையோ அல்லது
வாரத்துக்கு இருமுறையோ குளித்தால் என்னவாகும்? உடல் உள்ளுறுப்புகள் எல்லாம் வெந்து
நாறிப்போகும். இதை மறைக்க எத்தனை முயற்சி எடுக்கிறார்களோ அந்தளவு கெடுதி
அதிகமாகும! உடல் வியர்வைத் துளைகளை அடைக்கும் சோப்பும்,
உடல் சூட்டை அதிகரித்து
முதுகெலும்பைப் பலவீனமாக்கும் ஷாம்பு (பிளீச்சிங் பவுடர்களும்),
தோலில் வறட்சியை உண்டாக்கும்
இரசாயனம் கலந்த சியக்காயும் மேலும் சூட்டை (நோய்களை) அதிகரிக்கும்.
இதனால் தலையில் நீர் அதிகம் உருவாகி தலை
நீரேற்றத்தால் தலைவலி, தும்மல், வறட்டு இருமல் போன்றவை உருவாகும் உடன் அதற்கு எதிர்முறைய
மருத்துவரிடத்தில் போனால், அவர் சொல்லும் பத்தியம்-10 அல்லது 15 நாளைக்கு ஒரு முறை
தான் குளிக்கனும், உடலில் குளிர்ந்த தண்ணீர் படவே கூடாது,
சுடுதண்ணீரில் தான்
குளிக்கனும் சுடுதண்ணீர் தான் குடிக்கனும், வேண்டுமானால் வாரம் ஒரு முறை துணியைத்
சுடுதண்ணீரில் நனைத்து துடைத்துக் கொள்ளுங்கள்.
குளிர்ச்சியான உணவைத் தொடவே கூடாது,
பழங்களை உண்ணக் கூடாது,
ஆட்டிறைச்சி கூடாது,
பிராய்லர் கோழி சாப்பிடலாம்
என்று கூறி மளிகைக் கடைச் சிட்டையளவு, வலி நீக்கிகளையும் ஒவ்வாமைக்கான உயிராற்றலை
அழிக்கும் மருந்துகளையும் எழுதித் தந்து, மூக்கு வளைந்திருக்கிறது எவ்வளவு முடியுமோ
அவ்வளவு விரைவில் அறுவை தேவை என்பர்.அவர்கள் சொல்வதைக்கேட்டவர்கள் கதி அதோகதி
தான்.
எனது
மருத்துவமனை மாடியில் வேதாத்திரியின் அறிவுத் திருக்கோவில் உள்ளது. அவர்கள் ஆன்மீக
கல்விக்கு தற்போது பட்டயம், பட்டம் எல்லாம் தருகின்றனர். அந்த வகுப்புக்கு வந்த இளம்
பெண் முன்னதாக வந்ததால் காத்திருந்தாள்.
அவளாக
தன் மனக்குறைகளை கூற ஆரம்பித்தார். தான் ஆன்மீக கல்வி பட்டய வகுப்பில் சேர்ந்து
இருப்பதாக கூறியவள் மேலும், எளிதாயிருக்கும் என்று சேர்ந்தேன் அங்கிள்,
ஆனா வார்த்தைகளை புரிந்து
கொள்ள முடியலை நானும் 4 நாளா படிக்கிறேன் 3 பக்கத்தைவிட்டு மேலே போகமுடியவில்லை
என்றாள்.
நான்
எனது தொழில் பழக்கத்தால் அவளைக் கவனித்தேன். நீண்டகாலமாகவே அவளது மண்ணீரல்,
கல்லீரல்,
வயிறு போன்ற முக்கிய
உறுப்புகள் அனைத்தும் பலவீனமாக உள்ளதை அறிய முடிந்தது. அதன் விளைவாக பல ஆண்டுகளாக அதிக வியர்வை உடல்
எரிச்சல், தசை, நரம்பு பலவீனம், கடும் சோர்வு, கழுத்துப் பிடிப்பு,
தோள் மற்றும் கை மூட்டுகளில்
வலி, மூச்சிறைப்பு, தலைநீரேற்றம், தலைவலி, மலச்சிக்கல், மூலம் போன்ற பல தொல்லைகளால் ஏற்பட்ட மன
உழைச்சல் ஆகியவற்றால் துன்பம் அடைகிறாள் என்பதை முதல் பார்வையிலேயே உணர
முடிந்த்து.
பல
ஆண்டுகளாக பல எதிர்முறைய மருத்துவர்களால் சோதனைகள், மருந்து மாத்திரைகள் என அலைக்கழிக்கப்பட்டு
கடைசியில் மன நோயாளி என முடிவு செய்துவட்டார்களே என்ற வருத்தம் அவள் பேச்சில்
தொனித்த்து.
அன்றாட
உணவு மற்றும் பழக்கங்களைக் கேட்டேன். அவளது எதிர்முறைய சிறப்பு நரம்பியல் நிபுணருடைய
ஆலோசனைப்படி 15 நாளைக்கு ஒரு முறை தான் சுடுநீரில் குளிப்பதாக்க் கூறினாள்.
பழங்கள் எதையும் சாப்பிடக் கூடாதென கூறியுள்ளதாகவும்,
குளிர்ச்சியான உணவுகளை
தவிர்த்து வருவதையும் கூறினாள்.
மேலும்,
தனியார் நிறுவனத்தில் வேலை
செய்வதாகவும், அஞ்சல் வழியில் இளம் கலைப் பட்டம் படிப்பதாகவும்,
இடையில் இந்த பட்டயப்
படிப்பும் படிக்கிறாள். வேலைக்கு பேருந்தில் போகும் போதுதான் படிக்க நேரம்
கிடைக்கிறது என்றும் கூறினாள். அவளிடம் தன் உடல் குணமாக வேண்டும் எனும்
விருப்பம்-நம்பிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது காரணம் அவளுக்குத் தெரிந்த –
பார்த்த ஆங்கில மருத்துவம்
தான். சுகமாக-நலமாக முடியும் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.
ஆங்கில
மருத்துவர்கள் வார்த்தைகளையும், மருந்துகளையும், அவர்கள் சோதனை முறைகளையும் புறம்தள்ளிவிட்டு
நமக்கு நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினால் சில
நாட்களிலேயே உன்னால் முழுமையான நலம் பெறமுடியும் என்று கூறினேன்.
அதற்கு
உடனடி அடையாளமாகவும், நம்பிக்கை உண்டாக்கவும் சில வினாடிகளுக்குள் உங்கள் உடல்
தற்காப்பு சத்தியை இறைவழி மருத்துவத்தால் சீராக்கி உடன் உடல்வலிகளை நீக்கி, மனதுக்குப் புத்துணர்வுஉண்டாக்குகிறேன்
என்றேன்.
அந்த
நேரத்தில் அவளது ஆசிரியர் வந்தார். அவரும் எனது நெருங்கிய நண்பரே. என்ன நண்பரே
உங்கள் மாணவி இவ்வளவு மோசமான உடல் நிலையில் இருக்கிறாள் நீங்களும் உடல்நலம்
குறித்து அறிந்தவர்தானே, அவளுக்கு புத்திமதி சொல்லக்கூடாதா?
என்று கேட்டேன் ஆங்கில
மருத்துவர்கள் 15 நாளைக்கு ஒருமுறை சுடுநீரில் தான் குளிக்க வேண்டும் என்று
கூறியதையும், அதை அவள் பின்பற்றியதால் அவளுக்கு வந்த உடல்,
மனத் தொல்லைகளையும்
கூறினேன்.
அதற்கு
அவர் ’இது என்னுடைய வேலை இல்லை’ என்றார். நீங்களே சொல்லவில்லை என்றால் யார்
இவளுக்கு சொல்வார்கள் என்று கேட்டேன் ‘எல்லாம் இறைவன் பார்த்துக கொள்வான்’ என்றார். அப்போது அவரிடம் கோபம் கொண்டாலும்
புரிந்து கொண்டேன் உண்மையைச் சொன்னால் அவர்களது பெருமையும்,
பிழைப்பும் நிலைக்காது
என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இதில்
வேடிக்கை என்னவென்றால், சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்ணிடம் அந்த நண்பர்
உபதேசித்துக் ‘கொண்டிருந்தார் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை தட்டி
எழுப்பி முதுகுத்தண்டு வழியே மேலேற்றி புருவ மையத்தில் அமர்த்த வேண்டும்’ என்று.
வித்தாற்றலே
அற்றுப் போன வெட்டை மனிதர்களால் ஆன்மீக கூடாரங்கள் நிறைந்துள்ளதை பல்வேறு
நிலைகளிலும் பார்க்கமுடிகிறது. இவர்கள் தங்களிடம் இல்லாத வித்தாற்றலை மேலேற்றுவது
எப்படியோ?
உண்மையில்
ஆன்மீகமானது உடல்நலமும், மனநலமும் உள்ள விழிப்புணர்வும்,
விடுதலை வேட்கையும் கொண்ட
மனிதர்களுக்கானதே. தன் வீட்டாருடனும், தனது இயற்கையுடனும் இயைந்து வாழத் தெரியாத
அனாதைகளுக்கானது அல்ல.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவேதாத்திாி மகரிசி நல்லவா் ஒரு ஆயா் வேத சித்த மருத்துவா்
பதிலளிநீக்கு