சித்த மருத்துவர் இறைவழி மருத்துவம் பயின்று, வைத்தியம் பார்த்த அனுபவத்தை வலை தளத்தில் பகிர்ந்து
கொண்டுள்ளதை அனைவரின் நலன் கருதி தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
பகுத்தறிபவர்கள் யார்?
ஆறு ஆண்டுகளுக்கு முன்
பாண்டிச்சேரி பகுத்தறிவாளர்களுடன் ஓர் அனுபவம். அப்போது நான் கும்பகோணம் நகரில்
இருந்தேன். எனது அப்பாவின் நண்பர் திரு.தமிழ்மணியிடம் எனது தம்பி லெனின் செங்கதிர்
வேலை செய்து வந்தான். சில மாதங்களுக்கு முன் திரு. தமிழ்மணி மற்றும் அவரது
குடும்பத்தில் சிலருக்கு சித்த மருந்துகளைக் கொண்டு மருத்துவம் பார்த்திருந்தேன்.
ஒரு நாள்
திரு.தமிழ்மணியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. தனக்கு உடலில் மீண்டும் சிறிது
தொல்லை இருப்பதாக கூறி மருந்து அனுப்ப வேண்டினார். அதற்கு நான் தற்போது
மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை,
பதிலாக சித்த மருத்துவத்தின் வேறு சில
நுட்பங்களைப் பயன்படுத்துகிறேன். இது மிக எளிமையானது, நீங்கள்
விரும்பினால் நேரில் வந்து விளக்கம் கூறிப் பிறகு உதவுகிறேன் என்றேன். சரி
வாருங்கள் என்றார்.
பாண்டி பேருந்து
நிறுதத்தில் இருந்து லெனினிடம் பேசினேன். மிதிவண்டி எடுத்துவருவதாக கூறினான். நான்
நடந்து வந்து கொண்டிருப்பதாக கூறினேன். திரு. தமிழ்மணி அலுவலகத்தில் இருந்து சில
நூறு அடிகள் தூரத்தில் மிதிவண்டியை உருட்டிவந்த லெனினைச் சந்தித்தேன்.
என்ன பை எடுத்து வரவில்லையா? எனக்
கேட்டான். நான் தற்போது மருந்து கொடுப்பதில்லை என்றேன். சரி அக்குபங்சர் முறையில்
வைத்தியம் செய்யப் போகிறாயா?
என்றான். இல்லை என்றேன். அவர் வைத்தியத்துக்குத்
தானே உன்னை வரச்சொன்னார்? என்றான்.
ஆமாம். ஆனால் நான்
இப்போதெலெலாம் சித்த மருந்துகளையோ, அக்குப்பஙசரையோ
பயன்படுத்துவதில்லை. நான என் மனதில் நினைத்தாலே பிறரின் உடல் துன்பங்கள்
நீங்கிவிடுகிறது என்றேன்.
அதற்கு லெனின், என்ன
சொல்கிறாய்? இவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியாது பேசுகிறாய் இவர் தீவிர
நாத்திகர் இப்படி நீ கூறுவதைக் கேட்டால் என்னையும் சேர்த்து விரட்டி விடுவார்
என்றான்.
அதற்கு நான் உனக்கு என்னைத்
தெரியுமல்லவா. நான் மட்டும் என்ன கோவில், குளம் என அலைபவனா? என்னுள்
உள்ள ஆற்றலை அறிந்தேன், பயன்படுத்துகிறேன் என்றேன்.
அப்படி என்றால் என்னைக்
குணப்படுத்து, நீ பேசும் போது கழிப்பறையில் இருந்தேன், இரத்த
மூலம் கடுமையான எரிச்சல் வலி அதனால் தான் நான் வரத் தாமதமாகி விட்டதென்றான்.
மிதிவண்டியை உருட்டிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.
சரி குணப்படுத்துகிறேன்
என்ற நான், இப்போதே சரியாகி விட்டதென்றேன். உடன் மிதிவண்டியை கீழே போட்டுவிட்டு
ரோட்டிலேயே குதிக்க ஆரம்பித்து விட்டான். இப்படியும் அப்படியுமாக, பரபரப்பாக
நடந்தான் லெனின். என்ன நிகழ்ந்த்து எனக் கேட்டேன்.
என்ன ஆயிற்று எனக்கு? இவ்வளவு
நேரம் கடும் எரிச்சலும், வலியுமாக அவதிப்படுத்திக் கொண்டிருந்த வலியும் எரிச்சலும் மறைந்து
விட்டதே! உடல் ஏதோ புதிய சத்தி பெற்றது போல் உள்ளது என கூறி வியப்படைந்தான்.
வீடு வந்துவிட்டது.
வீட்டில் அவனது துணைவி அமுதா வரவேற்றார். உடன் லெனின், எனக்கு
என்ன செய்தாய் என தெரியவில்லை அமுதாவுக்கு கடும் பல்வலி அதைச் சரிசெய் பார்ப்போம்
என்றான்.
ஏன் உனக்கு சரியாகும் போது
அமுதாவுக்குச் சரியாகாதா அங்கும் சரியாகி விட்டதென்றேன். உடன் வலி நீங்கிச் சுகம்
பெற்றார் அமுதா. அப்போது அங்கிருந்த சுரேஷ் என்ற நண்பரும் தனக்கு இருந்த மூலக்
கடுப்பை சரி செய்து கொண்டார்.
அதன் பிறகு தான் திரு.
தமிழ்மணி வீட்டுக்கு அழைத்துச் செல்ல லெனின் ஒப்புக் கொண்டான். வீட்டு வாசல் வரை
வந்தவன் அண்ணன் ஏதோ சொல்கிறார். நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு
கிளம்பிவிட்டான்.
திரு.தமிழ்மணியிடம், நானும்
பகுத்தறிவு வழி குடும்பத்தில் வந்தவன் தான ஆனால், சில புரிதல்கள்-நீண்ட கால
அனுபவங்கள் பயனாக, மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாத ஆற்றல்களை மருத்துவத்துக்குப்
பயன்படுத்த துணிந்துள்ளேன் என கூறி மேலும் 30 நிமிடம் பலவாறாக விளக்க
முயன்றேன்.
பொறுமையாகக் கேட்டுக்
கொண்டவர் மருத்துவம் பெற சம்மதித்தார். சிறிது நேர அமைதிக்குப் பின் மருத்துவம் முடிந்த்து, என்ன
உணர்கிறீர்கள் என்றேன்.
அவர் தான் எதையும்
உணரவில்லை என்றும், தனது மனைவியையும் மகளையும் அனுப்புகிறேன் அவர்களுக்கு சிறிது உடல்
நலக்குறைவு உள்ளது அதைச் சரி செய்யுங்கள் என்றார். மேலும், சில
நிபந்தனைகளை கூறினார். அவர்களுடன் எதுவும் பேசவோ, தொடவோ கூடாது என்றார். நான்
சம்மதித்தேன்.
முதலில் அவரது மனைவி
வந்தார்கள் சில வினாடிக்கு பின் திரும்பிச் சென்றார். அவரது மகளும் வந்து
சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்த திரு.தமிழ்மணி எனக்கு இதற்கு மேல்
அடையாளம் தேவையில்லை என்று கூறி தனது மனைவி மிக கடுமையான தலைவலியின் துன்பத்தில்
இருந்த்தாகவும் என்ன நடந்த்து என தெரியவில்லை, தற்போது வலி முழுமையாக
நீங்கித் தாம் புத்துணர்வடைந்ததாகக் கூறியதாகச் சொன்னார். பல்வலியிலிருந்து
விடுபட்ட அவரது மகள் அந்த அங்கிள் என்ன-எப்படிச் செய்தார் எனது பல்வலி எங்கே
போயிற்று என கேட்டதாகக் கூறினார்.
மேலும் தனக்கு அப்போது வேலை
இருப்பதால் மாலையில் அவசியம் தன்னை தனது அலுவலகத்தில் சந்திக்கும் படி
கேட்டுக்கொண்டார்.
மாலை 7 மணிக்கு
சந்தித்தோம். காலையில் என்னைச் சந்தித்தபோது தனது வயிற்றில் சிறிது இயல்பற்ற நிலை
இருந்த்தாகவும், மன உடல் உழைச்சலாக இருந்த்தாகவும எனது சிகிச்சையில் சரியானதாகவும்
கூறியவர், மேலும் தெளிவுபெறவே தன் மகள், மனைவிக்கு அளித்த
மருத்துவம் உதவியதாக கூறினார். தனது மகிழ்ச்சியையும், நன்றியையும்
தெரிவித்தார். மேலும் இன்று நாள் முழுவதும் இதுவரை அனுபவித்திராத மனம் மற்றும்
உடல் புத்துணர்வனுபவத்தைப் (some unuseal relaxation) பெற்றதாக
கூறினார்.
பிறகு தன் வாழ்வில் தான்
சந்தித்த ஆன்மீகவாதிகள் பற்றியும், தனக்குள்ள அறிவுக்கு
அப்பாற்பட்ட அனுபவங்கள் பற்றியும் பேசினார். பலமுறை வரட்டுத்தனமாக பலரை
விமர்சித்திருப்பதையும் நினைவுகூர்ந்தார். தனது பிடிவாதமான நாத்தீக நிலைபாட்டால்
பல ஆன்மீக சுய அனுபவங்களை இழந்திருப்பதாக தான் தற்பொழுது உணர்வதாகவும்
குறிப்பிட்டார்.
நான் எனக்குள்ளிருக்கும்
ஆற்றலை உணருகிறேன். எனது தேவையை அது நிறைவேற்றுகிறது அறிவுப்பூர்வமாக என்னால்
விளங்கிக்கொள்ள-விளக்கம் சொல்ல முடியவில்லை என்றேன். ஆனால், பிறருக்கு
அந்த அனுபவத்தைக கொடுக்க முடிகிறது என்றேன்.
மிக மெதுவாக நீண்டகால
அனுபவத்துக்குப் பின் நான் இந்த இறைவழி மருத்துவத்துக்குள் ( இறைவழி மருத்துவம்
எனும் பெயர் சில ஆண்டுகளுக்குப் பின் நண்பர் சித்தர் பஸ்லூர் ரகுமான் அவர்களைச் சந்தித்த
பின் அவர் அனுமதியுடன் பயன்படுத்துவது.) வந்தாலும் எனக்கு மிரட்சியாகத்தான்
இருந்த்து. நான் அதுவரை எனது வாழ்க்கைத் தேவைக்காகச் செய்துவந்த சித்தமருத்துவம்-
அக்குபஞ்சர் முறைகளை (பிறரைக் குணப்படுத்த இவை எனக்கு தேவைப்படவில்லை என்பதால்)
கைவிட்டதால் எனக்குப் பொருளாதாரரீதியில் கடும் இழப்பே.
நான் எந்த மதத்தையோ, சாதியையோ, அமைப்புகளையோ
சாராதவன் என்பதால், எதையாவது சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்ட மக்களுக்கு எனது
மருத்துவமுறையை விளக்க முடியவில்லை. என்னைவிட என் மூலம் சுகம் பெற்றவர்கள், தான்
பெற்ற இன்பம் தன்னைச் சார்ந்தோர் பெறவேண்டும் என விரும்பினாலும் அதைச் சரியான
வார்த்தைகளில் விளக்கத் தெரியாத்தால் அவர்களுக்கும்-எனக்கும் உதவ முடியவில்லை.
இது குறித்து திரு.தமிழ்மணி
கூறுகையில், மக்கள் பணம் கொடுத்துப பொருள் வாங்கியே பழக்கப்பட்டவர்கள். அவர்களை
குணப்படுத்துவதை விட அவர்களைத் திருப்தி படுத்துவதையே விரும்புவர். எனவே, சிறிது
அரிசி மாவையாவது குப்பிகளில் அடைத்து கொடுத்து, சில நாள் சாப்பிடச் சொல்லி
பின் உங்கள் மருத்துவத்தை கொடுத்தால் எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் உங்களுடைய பணத்
தேவைகளும் பூர்த்தியாகும் என்றார். பொதுவாக எனது நலம் விரும்பிகள் கூறியது இது
தான்.
தான் உணர்ந்த இறையை தனது
மனித அறிவால் விள்க்க முயன்றவர்கள் தோல்வியே தற்போதய மதங்கள். இறையாற்றலை குறுக்கு
வழிகளில் மனித அறிவால் பெறவோ,
பயன்படுத்தவோ முடியாது. விழிப்புணர்வும், நல்ல
சிந்தனையுமே நம்மை இறைவழியில் கொண்டு சேர்க்கும்.
பின் சில மாதங்கள் கழித்து
திரு.தமிழ்மணி வீட்டுக்கு சென்றபோது அங்கு மூடநம்பிக்கை ஒழிப்பு சம்மந்தமான
பயிற்சி முகாம் குறித்த துண்டறிக்கை ஒன்றைப் பார்த்தேன். அன்று அந்த முகாம் கடைசி
நாள். நான் அதுவரை இது போன்ற பகுத்தறிபவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. அங்கு
சென்றால் எனக்குள்ளிருக்கும் ஆற்றல் குறித்த எனது சந்தேகங்களுக்கு விளக்கம்
கிடைக்கலாம் என நினைத்ததால் திரு.தமிழ்மணியிடம் தெரிவித்தேன்.
அதற்கு அவர் நீங்கள் இது
போன்ற கூட்டங்களுக்குச் செல்வது உங்களுக்கோ, உங்களால் அவர்களுக்கோ
பயனில்லை. பொதுவாக இக் கூட்டங்களில் இருப்போர்-வருவோர் உண்மையைத் தேடுபவர்கள்
இல்லை. வரட்டுத்தனமான அறிவியலில் மூடநம்பிக்கை உள்ளோர் எனக் கூறி, போய்ப்
பயனில்லை என்றார்.
ஆனாலும் அக்கூட்டத்துக்குச்
சென்றேன். ஹைதராபாத் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் திரு. தேவேந்திரநாத்
என்பவர் நடத்திய நிகழ்ச்சி. முடிவு நாள் 60 பேர் வரை இருக்கலாம். தெரு
வித்தைக் காரர்களும் சில பூசாரிகளும் செய்யும் வித்தைகளுக்கு அறிவியல் விளக்கம்
கொடுத்து செய்முறை விளக்கம் செய்துகாட்டிக் கொண்டிருந்தார். கூட்டம் கைதட்டிக்
கொண்டிருந்த்து.
முடிவில் பேசிய பேராசிரியர்
தேவேந்திரநாத் தான் இது போல பல ஆயிரம் கூட்டங்கள் நடத்தியிருப்பதாக கூறினார்.
மேலும் இது போன்ற மோசடிவித்தை தான் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, மற்றும்
வர்மம், அக்குபஞ்சர் எல்லாம், எனக் குறிப்பிட்டு அதைச்
செய்யும் மருத்துவர்களை குவாக்ஸ் (அடிப்படை அறிவற்றவர்கள்) என்றும்
குறிப்பிட்டார். உண்மையான மருத்துவம் என்பது அலோபதி மட்டும் தான் என்றும்
குறிப்பிட்டார்.
அதற்கும் அந்தக் கூட்டம்
பலமாக கைதட்டியது. தாயையும்,
தாய்மொழியையும் கேவலப் படுத்தியவர்களைக் கைதட்டித்
தலைவனாக்கிய சுயமரியாதை இல்லா கைதட்டிக் கூட்டம்.
இவர்களிடம் பேசிப் பயனில்லை
என்று உணர்ந்தாலும் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பியதால் எழுந்து கேட்டேன்.
நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விளக்கம் கூறுங்கள் என்றேன்.
நீங்கள் இப்போது குவாக்ஸ்
என கேவலமாக குறிப்பிட்ட மருத்துவ முறைக்ள் தாம் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் அனுபவத்தில்
வளர்ந்து இன்று வரை மக்களை நோயின்றி வாழவைத்து வருகின்றன.
நீங்கள் அறிவுப்பூர்வமானது
என உயர்த்திப் பேசும் ஆங்கில- அலோபதி மருத்துவத்தால் ஏதாவது ஒரே ஒரு நோயையாவது
குணப்படுத்த முடியுமா? அப்படி இருந்தால் அதற்காக மட்டுமாவது ஆங்கில மருத்துவத்தை ஏற்றுக்
கொள்கிறேன் என்றேன்.
பாவம், மனிதர்
மேடையில் துடிதுடித்து விட்டார். அந்த கைதட்டிக் கூட்டத்தில் தன்னிடம் கேள்வி
கேட்பவர் இருக்கமாட்டார்கள் என நிணைத்திருந்தார் போலும்.
ஆனால் நான் கேட்ட
கேள்விக்கு ஆங்கில மருத்துவத்தில் பதில் இல்லாத்தால், அவர்
கூறினார், என்ன இப்படிக் கேட்டுட்டீங்க நாங்க புற்று நோய்க்கெல்லாம் சிகிச்சை
கொடுக்கிறோம் என்றார்.
ஆமாம். சிகிச்சை
அளிக்கிறோம் என்ற பெயரில் அதிகத் துன்பத்தில் ஆழ்த்தி புற்று நோய்க்கு
முந்திக்கொண்டு மருந்துகளால் கொல்கிறீர்கள் என்றேன். உனக்கு புற்றுநோயைப் பற்றி
தெரியுமா? என்றார். செல்களின் முறையற்ற வளர்ச்சி- தேக்கம் தான் புற்றுநோய்
என்றேன்.
என்ன இவ்வளவு எளிதாய்
சொல்லி விட்டீர்கள் என்று கூறி தான் படித்த்தை சிறிது நேரம் ஆங்கிலத்தில்
ஒப்பித்தார். நான் சொன்னதைத் தான் ஆங்கிலத்தில் சுற்றி வளைத்து பேசினீர்கள் எனது
கேள்வி இதல்ல. யாரையாவது, எந்த நோயையாவது முழுமையாக ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த
முடியுமா? என்பதே கேள்வி என்றேன்.
கூட்டம் என்ன சொல்வது என
விழித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியுமா? என்ற எதிர்க் கேள்வி தான்
அந்த மருத்துவ பேராசிரியரிடம் இருந்து வந்த்து.
என்னால் முடியும். செய்திருக்கிறேன்.
எங்கள் பாரம்பரிய மருத்துவங்கள் எவ்வளவு எளிமை என இங்கேயே நிரூபித்துக்
காட்டுகிறேன் என்றேன். மேலும்,
இந்தக் கூட்டத்தில் உள்ள எவருக்கேனும் உடல்
வலிகள்-தொல்லைகள் இருந்தால் கூறுங்கள் இங்கே அமர்ந்த படியே சரி செய்து
காட்டுகிறேன் என்றேன்.
கூட்டமும், மேடையும்
அமைதியாக இருந்தது. பிறகு, தேவேந்திர நாத் வலியைத் தீர்ப்பது பெரிய விசயமில்லை என்று கூறினார்.
வலியைத்தீர்ப்பது பெரிய
விசயமில்லை என்றால் நீங்கள் ஏன் கடும் எதிர் விளைவுகளைக் கொடுக்க கூடிய
மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டேன்.
கூட்டத்தில் பலவாறான
சலசலப்பு. ஒரு இளைஞர் எழுந்து கூறினார். என் அக்காவுக்கு மூட்டுவலிக்கு
அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்தோம் 6
மாதம் கழித்து மீண்டும் வலி வந்துவிட்டது நாங்கள்
அலோபதிக்கு திரும்பிட்டோம் என்றார். இதுபோலப் பேச்சுகள். தங்கள் பேராசிரியரை காக்க
கூட்டத்தினர் தயாராயினர்.
அந்த நேரத்தில் ஒரு
புத்திசாலி நபர், எலக்ட்ரானிக் இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியோடு வந்தார். நாங்கள்
கருவியைத்தான் நம்புவோம். நீங்கள் பிரசரைக் குறைத்துக் காண்பியுங்கள் என்றது
கூட்டம். ஒருவர் தனக்கு காலையிலிருந்தே பிரசர் அதிகமாக இருந்த்தாக கூறிச் சோதனைக்குத்
தயாரென்றார்.
நான் இரத்த அழுத்தம் என்பது
ஒரு நோயல்ல. தேவை கருதி இயங்குவது தான் இதயத்தின் இயல்பு எனக் கூறியதை யாரும்
காதில் வாங்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தினர். நானும் இவர்களிடத்தில் இருந்து
விலகினால் நல்லது என உணர்ந்தேன்.
பிறகு, நான்
மருத்துவம் பார்த்த பின் எந்த அளவுக்கு இரத்த அழுத்தம் அப்போது தேவையோ அந்த
அளவுக்குத் திரும்பும். எனவே,
இந்த சோதனைக் கருவியிலும் மாற்றம் உறுதியாக
இருக்கும் என்பது எனக்குத் தெரியும் எனவே சோதனைக்குச் சம்மதிக்கிறேன் என்றேன்.
முதலில் மேடையில் அமரச்
செய்து உடலில் சக்தி வேறுபாடு இருக்கும் போது உள்ளங்கால், உள்ளங்கைகளில்
உள்ள உயர வித்தியாசத்தை அனைவர்க்கும் காட்டிவிட்டு பின் பிரசர் கருவியால் அளக்கச்
செய்தேன். ஏதோ ஒரு அளவு காட்டியது கருவி. பின் கண்களை மூடித் திறக்கச் சொன்னேன்
உடன் உடல் வித்தியாசம் சரியானது. இதைப்பார்த்த தேவேந்திர நாத் மற்றும்
கூட்டத்தினர் சில் வினாடிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.
அந்த நேரத்தில் பிரசர்
சோதனை செய்யப்பட்ட நபர் எழுந்து தான் இந்த உடல் சோதனையை நம்ப மாட்டேன் என்று கூறி
ஒரே ஆர்பாட்டம் செய்து விட்டார். பிறகு அவருக்கு இரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டது.
முன்பு அளந்த்தைவிட 12 அலகுகள் குறைந்தே இருந்த்து.
உடன் தேவேந்திர நாத்
எழுந்து தனது அலோபதி முறையில் இயல்பானது என குறிப்பிட்ட அளவுக்குள் என்னால் இரத்த
அழுத்தம குறைக்கப் படாத்தால் எனது மருத்துவம் தோல்வி எனக்கூறி உடன் நேரம்
ஆகிவிட்டதாகவும் கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டார்.
கூட்டம் கலைந்து செல்லும்
வரை யாரும் என்னிடம் பேசவில்லை. கடைசியில் இரத்த அழுத்த சோதனைக்கு தன்னை
ஆட்படுத்திக்கொன்ட மனிதர் என்னீடம் வந்து, உங்கள் சிகிச்சையின் போது
நான் எனது உடலில் மாற்றத்தை உணர்ந்தேன் தேவேந்திரநாத் க்கு அவர் மேடையில்
அவமானமாகிவிடக் கூடாதென்பதற்காகவே, அப்படி நடந்து கொண்டேன்
என்றார். இதை என்னிடம் சொல்லி யாருக்கும் பயனில்லை என்று அவரிடம் கூறி பேச்சை
முடித்தேன்.
பகுத்தறிவுவாதிகள், அறிவியல்லாளர்கள், அறிவுஜீவிகள்
என என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சிந்திக்கத் துணிவில்லாதவர்கள் மனிதர்களே அல்ல, செம்மறியாட்டுக்
கூட்டம் தான்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக