மருத்துவ உலகில் இன்று பைபாஸ் இருதய ஆபரேசன் என்பது
மகப் பேறு குழந்தை பிறப்பிற்கு செய்யப்படும் சிசேரியன் ஆபரேசன் போல சாதாரணமாகி
விட்டது. இருதயத்தில் ஏன் அடைப்பு
ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணம் பற்றி ஆராயாமல்,இருதயத்தில்
அடைப்பா உடனே ஆபரேசன்தான் செய்ய வேண்டும் என்பதே ஆங்கில மருத்துவத்தின் ஒரே
தீர்வாக இருக்கிறது. நம் அனைவரின் பயன் கருத அது பற்றிய ஒரு கட்டுரை கீழே
வெளியிடப் பட்டுள்ளது.
HEART
OPERATIONS AND PERMANENT SOLUTIONS
இதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
பைபாஸ் ஆபரேசன் (Open Heart Surgery) இன்று மிகவும்
பிரபலமான ஆபரேசன்களில் இதுவும் ஒன்று. இரத்த குழாயில் உள்ள அடைப்பை நீக்க செய்யப் படும் மிகப்
பெரிய அறுவை சிகிச்சையாகும்.மார்பு பகுதி பெரிய எலும்பை அறுத்து அகற்றி
இதயத்தையும்,நுரையீரலையும் பைபாஸ்
கருவிக்கு மாற்றி இதயத்தின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி செய்யப்படும்
ஆபரேசன்தான் பைபாஸ் ஆபரேசன். இதற்காக காலில் உள்ள சிரை அல்லது மார்பிலுள்ள தமனி பைபாஸ்
செய்ய பயன் படுத்தப் படுகிறது. சிரையின் ஒரு பகுதி பெருந் தமனியுடன் (AORTA) இணைக்கப்பட்டு மற்றொரு
பகுதி இரத்தக் குழாயிலுள்ள அடைப்புக்கு அடுத்து இணைக்கப் படுகிறது. சிகிச்சை முடிந்து இதயம் இயங்கச் செய்யப் பட்டு
மார்பு பகுதி மூடப் படுகின்றது.சாதாரணமாக இந்த ஆபரேசனை செய்து கொண்டவர்கள் பத்து
நாட்கள் மருத்துவ மனையிலும்,மூன்று மாத கால
ஓய்வுக்கு பிறகு சாதாரண வாழ்க்கையை தொடங்கலாம்.
இவ்வாறு பைபாஸ் ஆபரேசன்
செய்து,வருடக்கணக்கில்
மாத்திரை சாப்பிட்டும் மறுபடியும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டவர்கள் ஏராளமாக
உள்ளனர். இரத்தக் குழாயில் அடைப்பு ஏன்
ஏற்படுகிறது என்ற காரணம் தெரியாமல் வைத்தியம் செய்வதால்தான் அடைப்பு மீண்டும்,மீண்டும் ஏற்படுகிறது.
அக்குபங்சர் என்றாலே
வலியை மட்டும்தான் போக்கும் என்ற தவறான செய்தியை மட்டுமே உலகம் நம்பிக்
கொண்டிருக்கிறது.என்னிடம் வைத்தியம் பார்க்க வந்த ஒருவரும் அதே மனநிலையிலேயே
என்னைச் சந்தித்தார். இடுப்பு வலிக்காக வந்தவரிடம் விபரம் கேட்ட போது மேற்சொன்ன
பைபாஸ் சர்ஜரி பற்றிய விபரத்தை கூறினார்.நான் அவரிடம் கவலைப் பட வேண்டாம்.இடுப்பு
வலியும் சரியாகும்.பைபாஸ் சர்ஜரியும் தேவையில்லை என்று சொன்ன போது அவருக்கு
நம்பிக்கையில்லை.இடுப்பு வலி மட்டும் குணமானால் சரி என்ற அடிப்படையிலேயே டிரீட்மென்டை
தொடர்ந்தார்.
15 நாள் இடைவெளியில் 2
ட்ரீட்மென்ட் கொடுத்ததில் இடுப்பு வலி சரியானது. மீண்டும் 3
ட்ரீட்மென்ட் கொடுத்ததில் அவர் பிரச்சினை எல்லாம் தீர்ந்தது. பரிசோதனை செய்து
பார்த்ததில் இரத்த அழுத்தம் நார்மல்,இரத்தக் குழாயில்
அடைப்பு இல்லை.அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்வது தவிர்க்கப் பட்டது.ஐந்து
ட்ரீட்மென்டிற்கு எடுத்துக் கொண்ட காலம் இரண்டரை மாதம்.(ஒரு ட்ரீட்மென்டிற்கும்
அடுத்த ட்ரீட்மென்டிற்கும் இடைவெளி 15 நாள்)
1.ஆன்ஜியோகிராம் (ANGIOGRAM)
உடம்பில் குறிப்பிட்ட
இடங்கள் மரத்துப் போவதற்காக தொடை இடுக்கில் ஊசி போடப் படுகிறது. பிறகு DYE- ஐ இதற்காக செய்யப்பட்ட
CATHETER மூலம் இரத்தக் குழாயில் செலுத்தி புகைப்படம் மூலம் பதிவு
செய்யப் படுகிறது.அந்தப் புகைப்படங்கள் மூலம் அடைப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து
கொள்கிறார்கள்.
2. ஆன்ஜியோ பிளாஸ்டி (ANGIO PLASTY)
ஆன்ஜியோ பிளாஸ்டி என்பது ஆன்ஜியோகிராமை தொடர்ந்து செய்யப்படும் சிகிச்சை. இதற்காக சிறப்பான முறையில்
தயாரிக்கப்பட்ட மிக நுண்குழாய் இரத்த குழாயில் வைத்து GUIDE WIRE செழுத்தப்பட்டு பலூனை இரத்த குழாயின் அடைப்பின் குறுக்கே வைத்து கொஞ்சம்
கொஞ்சமாக பெரிது படுத்தப்படுகின்றது. இதனால் அடைப்பு நீக்கப்பட்டு இரத்த ஓட்டம்
ஏற்படுகின்றது.
சில
நேரங்களில் STENT என்னும் உலோக குழாய் சுருளை இரத்த குழாய் அடைப்பு பகுதியில்
வைத்துவிடுவார்கள். இதனால் இரத்த ஓட்டம் சீராக சென்றாலும் பலருக்கு இதனால் காய
தழும்பு ஏற்பட்டு தசை தடிமனாக மாறி மீண்டும் இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு விடுகின்றது.
ஒரு
நோயாளிக்கு ஏற்படும் தொந்தரவு நோயின் அறிகுறியாகும். இந்த அறிகுறியையே நவீன
மருத்துவம் நோயாக கருதி சிகிச்சை அளிக்கிறது. ஆனால் அக்குபஞ்சர் சிகிச்சை நோயின்
மூல காரணத்தை கண்டறிந்த சீராக்குவதன் மூலம் நோயையும் - அதன் அறிகுறிகளையும் வேரோடு
களைகிறது.
உதாரணத்திற்கு ஒருவருக்கு தலைவலி ஏற்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவம் முதலில் வலி நிவாரணிகளை கொடுத்துப் பார்க்கிறது. சரியாக போது தலையை ஸ்கேன் செய்து, பரிசோதித்து தலைவலி என்னும் அறிகுறியின் காரணத்தை தலையிலேயேதேடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மை நிலை என்ன? தலைவலி ஏற்படுவதற்கு தலை காரணம் அல்ல. மண்ணீரல் அல்லது இரைப்பை கோளாறுகளால் தலைவலி ஏற்படலாம். கல்லீரல், பித்தப்பை தொந்தரவுகளால் தலைவலி ஏற்படலாம். இதயம், இதயமேலுறையால் வெப்பம் சீரற்று கடத்தப்படும் போது தலைவலி ஏற்படலாம். சிறுநீரகம், சிறுநீர்ப்பையின் இயக்க குறைவால் தலைவலி ஏற்படலாம். நுரையீரலில் கழிவு தேங்கும் போது தலைவலி ஏற்படலாம். இன்னும் சொல்வதானால் தூக்கம் குறைவதாலும் மலம் கழிக்காவிட்டாலும், அதிகப்பசியின் போது உணவருந்தாவிட்டாலும், பசிக்கு மீறிய உணவை உண்டாலும் தலைவலி ஏற்படலாம்.
மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தால் தோன்றுகின்ற தலைவலியை - தலையை பரிசோதிப்பதன் மூலம் அறியவோ, நீக்கவோ முடியாது. உடலின் உள்ளுறுப்புக்களின் தேக்கம் கொள்கிற கழிவுகள், உடலின் வெளிப்புறத்தில் சில மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இந்த மாறுதல்கள் வெறும் அறிகுறிகளே. இதில் ஒன்றிரண்டு அறிகுறிகளை நீக்குவதன் மூலம் நோய் எக்காலத்திலும் குணமாகாது.
ஆங்கில மருத்துவம் நோய்க்கான காரணங்களை உடலிற்கு வெளியே தேடுகிறது. அக்குபங்சர் உடலிற்கு உள்ளேயே தேடி, தீர்வு காண்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக