சனி, 13 டிசம்பர், 2014

தண்ணீரை குடிக்கக்கூடாது. சாப்பிட வேண்டும்.

""அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை என்ற நூலினை எழுதிய ஹீலர்.பாஸ்கர் அவர்களை அனைவரும் அறிந்திருக்கக் கூடும்.இவர் கோவை மாநகரில் செல்வபுரம் பகுதியில் செவிவழி தொடு சிகிச்சை பார்த்து வரும் ஒரு சிறந்த மருத்துவர்.அவர் எழுதிய மேலே கண்ட புத்தகத்திலிருந்து சில பகுதிகள் நம் அனைவரின் நலன் கருதி இங்கு வெளியிடப் பட்டுள்ளது.
தண்ணீரை குடிக்கக்கூடாது. சாப்பிட வேண்டும்.
தண்ணீரை குடிக்கக்கூடாது, சப்பி சப்பி சாப்பிட வேண்டும்.
தண்ணீரை சாப்பிட வேண்டும். உணவை குடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது. உணவை வாயில் வைத்து நன்றாக மென்று கூழ் போலசெய்து நிராகாரமாக மாற்றி குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரை மெதுவாக உணவு சாப்பிடுவதைப் போல சப்பி சப்பி சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரில் ஆறு சுவைகள் உள்ளது தண்ணீரை மெதுவாக சப்பி சப்பி குடிப்பது மூலமாக நம் உடலுக்கு தேவையான ஆறு சுவைக்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் தண்ணீரில் உமிழ் நீர் கலந்து வாயில் உள்ள நொதிகள் கலந்து உள்ளே செல்வதால் நம் உடலுக்கு பல விதமான நம்மைகள் ஏற்படுகிறது. மேலும் தண்ணீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் மற்றும் தண்ணீரை நமது உடல் வெப்ப நிலைக்கு மாற்றுவதற்கும் டான்சில் எனப்படும் உறுப்பு உதவி செய்கிறது. வேகமாக அன்னாந்து கடகடவென தண்ணீர் குடிப்பவர்களுக்கு இந்த தண்ணீர் டான்சில் எனப்படும் உறுப்பில் நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தண்ணீர் வேகமாக டான்சில் வழியாக கடக்கும்போது டான்சில் வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறது. எனவே அதில் நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. தண்ணீரை எவ்வளவு மெதுவாக குடிக்கிறோமோ அவ்வளவு தூரம் நம் உடலுக்கு ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும். டான்சில், வீசிங், நெஞ்சு சளி போன்ற நுரையீரல் சம்மந்தப்பட்ட மூக்கு சம்மந்தப்பட்ட சைனஸ் போன்ற எந்த வியாதிகயும் நமக்கு வராது. வந்தால் அது உடனே குணமாகிவிடும். எனவே தண்ணீரை மெதுவாக சப்பி சப்பி சுவையை ரசித்து குடிக்கலாம்.
வாழ்க லமுடன்!

வாழைப்பழத்தோல் மூலம் சுத்தம் செய்யலாம்

நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத்தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோலை மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள்களையும் உறிஞ்சி எடுத்துவிடுகிறது ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்த சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக
கண்ணில்வரும் நோயை குணப்படுத்துவது எப்படி?
கண்ணில் வரும் கிடப்பார்வை, தூரப்பார்வை,என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நாம் கண்ணாடி அணிகிறோம் இந்த கண்ணாடியுடைய பவர் நாள் செல்ல செல்ல அதிகரிக்கிறதா?அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது. இதிலிருந்து என்ன புரிகிறது. கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் உங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம். 
பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாக கெடுப்பதற்கு கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம், கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?கிட்டப்பார்வை,தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்கு தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுபோய் உள்ளது. இது முதல் காரணம், இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுபோய்விட்டது என்று நம் மனம் கெட்டுபோய்விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணை குணப்படுத்தும் அறிவு கெட்டுபோய்விட்டது.
கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுக்கோமா,புரை மற்றும் பல நோய்களுக்கான கராணம் கண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், எந்த மருந்தும், மாத்திரையும், ஆபரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களை குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிபடுத்துவத்தின் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்தி கொள்ளலாம். 
வாழ்வோம் ஆரோக்கியமாக
ஏன் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது?***
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளதுபிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளது. இதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்கு கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலை செய்துவருகிறது. ஒரே அளவுள்ள இரண்டு காந்தத்தை வடக்கு திசைகளை ஒன்று சேர்க்க முடியாது. விலகிச்செல்லும், ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக்கொள்ளும். 
நாம் வடக்கே தலை வைத்துபடுத்தால், நம் உடலின் வடக்கு திசையும், பூமியின் வடக்கு திசையும் இணையும்போது ஓட்டுவது இல்லை. எனவே இரவு முழுவதும் நம் காந்தத் தன்மையில் விலகும் செயல் நடக்கிறது, எனவே நிம்மதியாகத் தூங்கமுடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலுக்கு நோய் வரும். எனவே வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது. 
தெற்கு தலை வைத்துப்படுத்தால் நம் வடதிசையும் பூமியின் தெற்கு திசையும் நன்றாக ஒட்டிக்கொள்ளும். எனவே நிம்மதியான தூக்கம் வரும். எனவே தெற்கில் தலை வைத்துப்படுப்பது மிகவும் நல்லது. புது மாப்பிள்ளை தெற்கே தலைவைத்து படுக்கவேண்டும்என கேரளாவில் பாட்டிமார்கள் கூறுவார்கள். ஏனென்றால் புது மாப்பிள்ளைகள் குறைந்த நேரமே தூங்குவார்கள்,இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் அல்லவா?அதனால்.கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது அம்மாவின் காந்த சக்தி தொப்புளுக்கு மேலே வடக்காவும், தொப்புளுக்கு கீழே தெற்காகவும் இருக்கும். ஆனால் குழந்தைக்கு தொப்புளுக்கு மேல்பகுதி தெற்காகவும், தொப்புளுக்கு கீழ் பகுதி வடக்காவும் இருக்கும்.இப்படி இருந்தால்தான் குழந்தையின் தலை மேல்நோக்கி இருக்க முடியும்.
பத்தாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு சற்று முன்னால் இந்தக் காந்த நிலையில் மாற்றம் ஏற்படும். அதாவது குழந்தையின் தொப்புளுக்கு மேல் வடக்காவும், கிழே தெற்காகவும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட்ட உடனே குழந்தையின் தலைப்பகுதியான வடக்குத்திசை, அம்மாவின் தெற்குப் பகுதியான கால் பகுதியை நோக்கி திரும்பும். அதனால்தான் தலை திரும்புகிறது. 
எனவே தயவுசெய்து வடக்கே தலைவைத்துப்படுக்ககூடாது. தெற்குத்திசை மிகவும் நல்லது. 
வாழ்வோம் ஆரோக்கியமாக. 

நம் உடலே சிறந்த மருத்துவர்

நாம் ஒரு அம்மா பெற்றெடுத்த குழந்தை,உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் ஒரு அம்மாவின் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள், ஒரு தாய் எப்படி குழந்தை பெற்று கொள்கிறார்? வாய் வழியாக உணவை சாப்பிடுகிறார், அது உள்ளே சென்று கண், காது, மூக்கு, வாய் போன்ற உடல் உறுப்புகளாக மாறி ஒரு முழு குழந்தை வெளியே வருகிறது. உணவை குழந்தையாக மாற்றியது அம்மாவின் அறிவா? அம்மாவின் உடல் அறிவா? என்ற கேள்வி எழுந்தால் இதற்குப் பதில் என்ன? அம்மாவின் அறிவு கிடையாது. அம்மாவின் உடல் அறிவுதானே நாம் பல புத்தகங்களில் படிப்பதன் மூலமாகவும் அனுபவத்தின் மூலமாக கிடைப்பது நம் அறிவு பிறக்கும்போதே நம் உடலுக்கு இருக்கும் அறிவு உடலறிவு. முதலில் நாம் அறிவை இரண்டாகப் பார்க்கவேண்டும். உடல் அறிவுவேறு, நம் அனுபவ அறிவு வேறு. 
எந்த அம்மாவாவது உணவை குழந்தையாக மாற்றியது என்னுடைய அறிவு என்று கூற முடியுமா?முடியாது. உடல் அறிவு மூலமாகத்தான் உணவு குழந்தையாக மாறுகிறது. ஒரு வேளை ஒரு தாய் என்னுடைய அறிவில்தான் நான் குழந்தையை பெற்றேடுத்தேன் என்று கூறினால் அந்த அம்மாவிடம் ஒரு கேள்வி கேளுங்கள்,உடல் உறுப்புகள் அனைத்தையும் படம் வரைந்து பாகத்தை குறிக்க முடியமா? முடியாது என்று கூறுவார்கள் அல்லவா? அப்போது உடல் உறுப்புகள் அனைத்தையும் தெளிவாகத் தெரியாத ஒரு அம்மா உணவை கொண்டு எல்லா உடல் உறுப்புக்களும் ஒழுங்காக இருக்குமாறு ஒரு குழந்தையை எப்படிப் பெற்றெடுக்க முடியும்?
இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் உணவை சாப்பிடுவது மட்டும்தான் அம்மாவின் வேலை, உணவை குழந்தையாக மாற்றுவது உடலின் வேலை, M.B.B.S படித்து மேற்கொண்டு நான்கு Ph.D., வாங்கிய ஒரு அம்மாவும், படிப்பறிவே இல்லாத ஒரு அம்மாவும், பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், நம் மூளைக்கு புத்தகங்கள், இன்டர்நெட் மற்றும் அனுபவம் மூலமாக கிடைக்கும் அறிவு எவ்வளவு தான் கிடைத்தாலும் அது வேறு, உடலறிவு வேறு, உடலறிவு பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஞானியாகத்தான் இருக்கிறது. நமது அறிவுதான் ஒரு சில நேரங்களில் புத்திசாலித்தனமாகவும், ஒரு சில நேரங்களில் முட்டாள்தனமாகவும் இருக்கிறது. 
அப்பொழுது உணவை கண்,காது, மூக்கு, வாய் ஆகிய உடல் உறுப்புகளோடு குழந்தையாகப் பெற்றுக் கொடுக்கும் ஒரு உடம்பு எவ்வளவு பெரிய ஞானி என்பதை சிறிது யோசித்துப்பாருங்கள்.உலகத்தில் யாராவது ஒரு கருவி கண்டுபிடித்து இருக்கிறார்களோ? உணவை அந்தக் கருவியில் ஒரு பக்கம் ஆண் குழந்தை அல்லது பெண்குழந்தை என்று வெளியே வருமாறு ஒரு கருவி உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?இல்லை எனவே அந்த மாதிரி ஒரு கருவியை ஒரு வேளை யாராவது கண்டுபிடித்தால் அவருக்கு எவ்வளவு நோபல் பரிசு கிடைக்கும்? அந்தக் கருவி இதுவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இல்லை என்று சொல்வீர்கள். ஆனால் நான் பார்த்திருக்கிறேன், குழந்தை பெற்றுக் கொண்ட அனைத்து அம்மாக்களும் அந்த கருவிகள்தான், எனவே குழந்தை பெற்றெடுத்த அனைத்துத் தாய்மார்களும் உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு உங்களுக்கு நீங்களே நோபல்பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.உணவை கண், காது, மூக்கு,கிட்னி போன்ற உடல் உறுப்புக்களோடு முழு குழந்தையாக பெற்றுக் கொடுக்கும் இந்த உடம்பு எவ்வளவு பெரிய ஞானி, புத்திசாலி, அறிவாளி எவ்வளவு ஆற்றல் இருக்கிறது இந்த உடம்புக்கு.
உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களை விட அனைத்து ஞானிகளை விட அனைத்து ஆராய்ச்சியாளர்களையும் விட புத்திசாலிகளை விட மிகப்பெரிய புத்திசாலி நமது உடலறிவு. இவ்வளவு அறிவுள்ள நமது உடம்பு போயும் போயும் சாதாரண சர்க்கரை,இரத்த அழுத்தம்,ஆஸ்த்துமா, தைராய்டு,மூட்டுவலி,முழங்கால்வலி ,தலைவலி, கர்ப்பப்பையில் கட்டி, கேன்சர்,எய்ட்ஸ் போன்ற நோய்களை குணப்படுத்த தெரியாது என்றால் ஒத்துக்கொள்ள முடியுமா? நமது உடலறிவு உலகிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். 
ஒரு மனிதனுக்கு ஒரு நோய் வந்துவிட்டது என்றால் அதற்கு காரணம் வேறொன்றுமில்லை,நமது உடல் அறிவில் ஏதோ ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.அந்த சிக்கலை சரி செய்வது மூலமாக உலகிலுள்ள அனைத்து நோய்களையும் எந்த மருந்து மாத்திரை மருத்துவர் இல்லாமல் கூட நமக்கு நாமே குணப்படுத்தி கொள்ள முடியும். ஒரு அம்மாவின் இரத்தம்தான் குழந்தைக்குப் பல உறுப்புகளாக மாறுகிறது. உணவை குழந்தையாக மாற்றத் தெரிந்த ஒரு அம்மாவின் உடலறிவுக்குக் கண்டிப்பாக நோய்களை குணப்படுத்த தெரியும்.
ஒரு தாய் எப்படி குழந்தை பெற்றுக் கொள்கிறார்? கர்ப்பப்பையில் ஒரு செல்லாக இருக்கும் குழந்தை தாயின் உடல் உறுப்புகள் ஒன்று சேர்ந்து அந்த ஒரு செல்லைப் பல கோடி செல்களாக மாற்றி கண்,காது, மூக்கு, கிட்னி, கணையம் ஆகிய உடல் உறுப்புகளைச் செய்து முழு குழந்தையாக உருவாக்குகிறது. நமது சமையல் அறையில் சுமார் ஐம்பது வகையான பொருட்கள் உள்ளன. அனைத்து வீட்டு சமையல் அறையிலும் இந்த 50 பொருட்கள் தான் இருக்கும். இந்த 50 பொருட்களை வைத்து 50,000 வகையான உணவுகளை நாம் தயாரிக்கிறோம்.
ஒரு சிறு கற்பனை செய்யுங்கள், சமையலறைதான் இரத்தம், உடலிலுள்ள உறுப்புகள் சமையல் செய்யும் நபர், இரத்தத்திலுள்ள பொருட்கள் சமையலரையில் இருக்கும் பொருட்கள். கர்ப்பப்பையில் உருவாகும் குழந்தையின் உறுப்புகள் உணவு வகைகள், இப்படிக் கற்பனை செய்து பார்த்தால் நம் உடலைப் பற்றி நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும், சமையல் செய்யும் நபராகிய உடல் உறுப்புகள் இரத்தம் என்ற சமையலறைக்குச் சென்று அங்கேயுள்ள கால்சியம், இரும்பு, சோடியம் போன்ற பொருட்களை எடுத்து கண், காது, மூக்கு போன்ற உறுப்புகளை உருவாக்கி குழந்தையை உருவாக்குகிறது. நாம் சமையலறையில் சென்று வெந்தயம்,அரிசி, கோதுமை போன்ற பொருட்களை எடுத்து இட்லி, தோசை, பொங்கல் ஆகிய உணவுகள் செய்வது போல நம் உடல் செய்கிறது. 

வாழ்க லமுடன்!

**அலாரம் வைத்து எழுந்திருக்கக் கூடாது**

நம்மில் பலருக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும். காலையில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நிம்மதியாக உடல் முழுவதும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அலாரத்தின் சத்தம் வேகமாக அடிக்கும்பொழுது, நாம் திடீரென எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படி அலாரத்தின் மூலமாக நம் தூக்கம் கலையும் பொழுது , நமது உடல் பாதிப்பு அடைகிறது. நமது உடலில் ஒருவிதமான டென்சன் ஏற்படும். அந்த டென்சன் அந்தநாள் முழுவதும் நமக்கு இருக்கும். எனவே தயவு செய்து அலாரம் வைத்து எழுந்திருக்காதீர்கள். சற்று சிந்தித்துப்பாருங்கள், ஒருவேளை அலாரம் அடிக்கவில்ல என்றால் என்ன நடந்திருக்கும். நீங்கள் ஒரு இரண்டு மணிநேரம் அதிகமாகத் தூன்கியிருப்பீர்கள் அல்லவா? அப்படி என்றால் என்ன அர்த்தம், நம், உடலுக்கு மேற்கொண்டு இரண்டு மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். நம் உடலுக்கு தூக்கம் தேவைப்படும்பொழுது அந்த தூக்கத்தை தூங்காமல் அதை கட் செய்து எழுந்திருத்தால் அந்த தூக்கத்தை யார் தூங்குவது? தினமும் நாம் அலாரம் வைத்து இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்தைக் கட் செய்தால், பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் மொத்தமாக தூங்கவேண்டியிருக்கும்.
எனவே தயவுசெய்து அலாரம் பயன்படுத்தாதீர்கள். நாங்கள் சீக்கிரமாக எழுந்திருக்கவேண்டும் அலாரம் இல்லாமல் எப்படி எழுந்திருப்பது என்று சிலர் கேள்வி கேட்கலாம், காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று அனைவரும் பிரச்சாரம் செய்கிறார்கள்,. ஆனால் சீக்கிரம் படுக்கவேண்டும் என்று இதுவரை யாரும் பிரச்சாரம் செய்வதே கிடையாது. இரவு சீக்கிரமாக படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியும். நாம் T.V அல்லது சினிமா படங்கள் போன்றத் தேவையில்லாத காரியங்களை இரவு 1 மணி வரை அல்லது இரண்டு மணி வரை பார்த்துவிட்டு காலதாமதமாகப் படுப்பது நமது தவறு. இரவு இரவு இரண்டு மணிக்கு யார் படுத்தாலும் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? எனவே இரவு தாமதமாகப்படுத்தால் காலையில் தாமதமாகத்தான் எழுந்திருக்கவேண்டும். எனவே நாம் எந்த நேரங்களில் எழுந்திருக்கவேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல் நாம் ஒரு 8 மணி நேரத்திற்கு முன்பாக நாம் படுக்கைக்கு செல்லவேண்டும். எனவே அலாரம் பயன்படுத்துவது ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டு தினமும் பயன்படுத்தாமல் எப்போதாவது அவசரக் காலத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 
மனதில் அதிகம் குழப்பம் இருந்து இரவு நீண்ட நேரமாக தூக்கம் வராதவர்களுக்கு ஒரு சுலபமான வழியுள்ளது. படுத்து ஓய்வு எடுத்தால் ஓய்வு மெதுவாகத்தான் கிடைக்கும். ஆனால் உட்கார்ந்து ஓய்வு எடுத்தால் ஓய்வு சீக்கிரமாக கிடைக்கும். எனவே படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள். நீங்கள் நேரடியாக படுக்காமல் அமர்ந்து முதுகுக்கு சப்போட்டு கொடுத்து ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து தலைக்கு சப்போர்ட் கொடுத்து கண்களை மூடி அமைதியாக காலை நீட்டியோ அல்லது சம்மணம் இட்டு அமர்ந்து தூங்க ஆரம்பியுங்கள். அமர்ந்துகொண்டு தூங்கினால் அல்லது தூங்க முயற்சி செய்தால் மனதும், புத்தியும் மிகவிரைவாக அடுக்கி VAITHTHUVIDDU உடனே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.
தூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உங்களது ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக்கொடுப்பதன் மூலமாக நன்றாக தூங்கமுடியும். இந்த இடத்திற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் DU 20 என்று கூறுவார்கள். வர்ம சிகிச்சையில் கொண்டை கொள்ளி என்று கூறுவார்கள். இன்றும் கிராமங்களில் ஒரு குழந்தைக்கு ஏதாவது வியாதி வந்தால் ஒரு பாட்டி வைத்தியம் செய்வார்கள். பூக்கட்டும் வெள்ளை நூலை ஒரு அடி அல்லது இரண்டு அடிக்கு எடுத்து அதை வாயில் வைத்து பந்துபோல் உருட்டி, எச்சில் கலந்து குழந்தைகளை அமரவைத்து, குழந்தையின் உச்சந்தலையிலிருந்து இரண்டு அடி அல்லது நான்கு அடி உயரத்திலிருந்து அந்த தாய் வாயிலுள்ள எச்சில் கலந்த நூல் உருண்டையை துப்புவதால், அந்த உருண்டை நேரடியாக உச்சந்தலையில் படும்பொழுது அந்த ஒரு வினாடி தொடுவதன் மூலமாக குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று, நோய்கள் குணமாகும் என்று பல கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்சிலர் கிராமங்களில் அந்த எச்சில் கலந்த பந்து உருண்டையை உச்சந்தலையில் ஒட்டி வைத்துவிடுவார்கள். எனவே உச்சந்தலை என்பது 72,000 நாடி, நரம்புகள் சங்கமிக்கும் இடம். இந்த இடத்தில் நாம் சக்தியை செலுத்துவதன் மூலமாகவும் மசாஜ்செய்வதன் மூலமாகவும், தொட்டு தடவுவதன் மூலமாகவும் அல்லது நினைத்து பார்ப்பதன் மூலமாகவும் 72,000 நாடி, நரம்புகளை நாம் அமைதிப்படுத்த முடியும். எனவே இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்றால், உச்சந்தலையை உங்களுக்கு நீங்களே தடவிக் கொடுத்து தூங்கிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு நோய் இருந்தாலோ அல்லது தூக்கம் வராமல் அழுதுக்கொண்டு இருந்தாலோ, உச்சந்தலையைத் தடவிக்க்கொடுத்தால் அந்த குழந்தைக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நமது கையில் உள்ள சுண்டுவிரலையும், கட்டைவிரலையும் தவிர மற்ற மூன்று விரல்களின் நுனிகளால் நமது தாடைக்கு கீழே உள்ள எலும்பில் லேசாக தடவிக்கொடுப்பதன் மூலமாக உடலில் தூக்கத்திற்கு தேவையான சுரப்பிகளை சுரக்கமுடியும். நமது வீடுகளில் குழந்தைகள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருப்பார்கள். நடந்துகொண்டு படிக்கும்பொழுதும், அமர்ந்துகொண்டு படிக்கும்பொழுதும் அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆனால் kகுப்புறப்படுத்து இரண்டு மணிக்கட்டுகளையும் தாடைக்கு கீழே சப்போர்ட் கொடுத்து, எப்பொழுது படிக்க ஆரம்பிக்கிறீர்களோ கண்டிப்பாக அரைமணி நேரத்திற்குள் நன்றாக தூக்கம் வந்து, அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு தூங்கிவிடுவார்கள். எனவே நமக்கு தூக்கம் வரவில்லை என்றால், குப்புறப்படுத்து கண்களை மூடி நமது இரு மணிக்கட்டுகளையும் தாடைக்கு சப்போர்ட் கொடுத்து சினிமா படங்களில் நடிகைகள் படுத்திருப்பதுபோல காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாக தூங்கிவிடுவீர்கள்.
வாழ்க லமுடன்!

1 கருத்து:

  1. தண்ணீர் பலமருத்துவ குணங்களை தனகத்தே கொண்டுள்ளது. தண்ணீரில் இருக்கும் நற்குணமே நம் உடலுக்குதேவையான ஆரோக்கியத்தை தரும் தண்ணீர் மருத்துவத்தின் நன்மைகள்

    பதிலளிநீக்கு