புதன், 17 டிசம்பர், 2014

வலிகள் (PAIN) மற்றும் நோய்கள் (DISEASES)

வலிகள் ( PAIN)
"வலிகள் மனித உடலின் புத்திசாலித்தனம்" என்கிறார் கர்நாடகா மாநிலம் மணிப்பால்  மருத்துவ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும்,ஏராளமான இருதய அறுவை சிகிச்சைகள் செய்து பத்மஸ்ரீ பட்டம் பெற்றவரும்,இருதய நோய் நிபுணருமான டாக்டர்.பி.எம்.ஹெக்டே அவர்கள்.  
"உடலின் எந்த ஒரு பாகத்திலும் ஒரு வலி ஏற்படுகிறது என்றால் அந்த குறிப்பிட்ட பாகத்தில் நோயின் ஒரு விளைவு எதிர்க்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பொருள்.நோயின் விளைவை மட்டுமல்ல நோயின் அடிப்படைக் காரணத்தையும் அழித்து விடும் மிக மேன்மையான செயல் நடந்து கொண்டிருக்கிறது என்பதுவும் ஆகும்.உடலில் தோன்றும் வலிகள் தாம், உடலில் மறைவாயுள்ள நோய்களை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதன் பரிபூரணமான உண்மையாகும்".என்கிறார் டாக்டர்.ஃபஸ்லுர் ரஹ்மான் MBBS.MD.DV.PhD(ACU) அவர்கள்.            
வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

மேல் உள்ள கேள்விகளுக்கு, வலி நல்லது... என்ற பதிலை சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும..

இன்று அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் பல நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் வலி சம்பந்தப்பட்ட அறிகுறிகளை கொண்டுள்ளனர், எடுத்துகாட்டாக : தலைவலி, இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி, கழுத்துவலி, தசை இறுக்கம், ..... என்று பல வலிகளை கூறலாம். இவர்கள் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் முன்னர் ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை எடுத்தவர்களே பெரும்பாலானவர்கள். 

முதலில் வலி என்றால் என்ன என்பதனை அறியும் முன்னர் இதற்கு ஆங்கில மருத்துவம் சொல்லும் காரணங்களும், அவை தரும் சிகிச்சையும் என்ன என்பது பற்றி பார்ப்போம். 

வலி ஏற்படுவதற்கு காரணம், எங்கு வலி வருகிறதோ அந்த இடம்தான் காரணம் தலைவலிக்கு தலையும், கழுத்துவலிக்கு கழுத்தும், மூட்டுவலிக்கு மூட்டுக்களும் காரணம். இப்படிதான் ஆங்கில மருத்துவம் கூறுகிறது. இந்த அடிப்படையில் தான் சிகிச்சையும் செய்து வருகிறது. எனவே தான் சாதாரண தலை வலிக்கு கூட தலையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு இது சாதாரண தலைவலி அல்ல இதற்கு பெயர் “Migraine Headache” என்று கூறுகிறது. ஏன் என்றால் அதற்கு காரணமும் தெரியாது, குணப்படுத்த மருந்துகளும் கிடையாது. எனவே புதிய பெயர் வைத்து இதனை குணப்படுத்த முடியாது என்று கூறி அனைவரையும் நம்பவைத்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை, இதனை யாரும் கேள்வி கேட்கப்போவதும் இல்லை என்றுதான் இன்று பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் புதிய புதிய பெயர் வைக்கிறது.


நமக்கே நன்றாக தெரியும், அதிகம் வெய்யிலில் போவதால், அதிகம் பசிக்கும் போது சாப்பிடாமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகம் சாப்பிடுவது, ஒன்று இரண்டு நாட்கள் மலம் கழிக்காத போது இப்படி பல சூழல்களில் தலைவலி ஏற்படுகிறது. ஆனால் தலைவலிக்கு தலை மட்டுமே காரணம் என்று நினைத்து அதனை மட்டுமே சுற்றி சுற்றி வருவது எந்த காலத்திலும் நோயை குணப்படுத்த உதவாது. 

இதே போல மூட்டு வலி. இன்று பலர் இந்த நோயால் அவதிப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம், இதற்கு ஆங்கில மருத்துவம் ஆரம்ப காலங்களில் வலி மாத்திரையை கொடுக்கிறது [வலி மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி பின்பு பார்க்கலாம்..]. சில நாட்கள் குணம் அடைந்தது போல தெரிந்தாலும் பின்பு மீண்டும் நோய் தீவிரம் அதிகரிக்கிறது. இப்போது X-Ray, Scan மற்றும் அனைத்து டெஸ்ட்டும் செய்து பார்த்துவிட்டு [ஏன் இந்த டெஸ்ட்கள் செய்வதற்கு முன்பு தெரியாதா நம்மால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது என்று என்ன செய்ய பல லட்சம் செலவு செஞ்சு வாங்கிய மெஷினை என்ன பண்ண], உங்க மூட்டு தேய்ந்து விட்டது இனி அதை சரி செய்ய முடியாது என்று கூறி, இதற்கு ஒரே தீர்வு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைஎன்று இருந்த மூட்டையும் மாற்றி விடுவது எப்படி ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என்றுதான் புரியவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பலருக்கும் மூட்டு மாற்றிய பின்னும் வலி தொடர்வதும், படி ஏறக் கூடாது, காலை மடித்து உட்காரக்கூடாது என்று கூறுவதும் வேதனைக்கு உரியது.

சரி இப்போது மருந்துகளின் கொடூரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

ஒரு நோயை [வலியை] சரி செய்ய இரண்டு முறைகள் உள்ளது. ஒன்று அந்த நோய் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, என்பது பற்றிய தெளிவு இருந்தால் அந்த காரணத்தை [நோய் என்பது ஒன்றே ஒன்றுதான் அதுதான் இந்த மூலகாரணம்] சரி செய்வதன் மூலம் நோய் அறிகுறிகளான வலிகள் மற்றும் பல அறிகுறிகளை சரி செய்து விடலாம் [இந்த அறிகுறிகளைத்தான் ஆங்கில மருத்துவம் நோய் என்று நினைக்கிறது]. ஆனால் எந்த ஒரு மருத்துவ இயந்திரமும் நோயின் மூலகாரணத்தை கண்டறிய முடியாது [என்றாவது மனிதனின் அடிப்படை தேவைகளான/உணர்வுகளான பசி-தாகம்-தூக்கம்-சோர்வு-வலிகள் இவற்றை அளவிட மருத்துவ உபகரணங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமா..?]. எனவே ஆங்கில மருத்துவம் இரண்டாவது முறையை கையில் எடுக்கிறது, நோயாளிகளின் உடலை/உயிரை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல்..!

அது தான் வலி மாத்திரைகள். வலி மாத்திரைகள் அவ்வளவு கொடுமையானதா என்றால், நிச்சயம் ஆம் என்றுதான் கூற வேண்டும். ஏன் என்றால் நாம் சாப்பிடும் மாத்திரைகள் எப்படி வலியை சரி செய்கிறது என்பதே இதற்கு பதில்...!

நம் தலையில் Pituitary Gland என்ற சுரப்பிக்கு அருகில் Hypothalamus என்ற ஒரு பகுதி உள்ளது. இது நம் உடலில் ஏற்படும் உணர்வுகளில் ஒன்றான வலிகளை மூளைக்கு தெரிவிக்கிறது. எனவே மருந்துகளை கொடுத்து இந்த Hypothalamus இன் செயல்பாட்டை நிறுத்தி வைத்தால் வலிகள் மூளைக்கு எட்டுவது நிறுத்தப்படும் [என்ன ஒரு வில்லத்தனம்]. ஆகமொத்தம் வலி உடலில் இருக்கும், வலிக்கான காரணிகளும் உடலிலேயே இருக்கும். ஆனால் வலியை மட்டும் உணராமல் வைக்கபடுகிறது. அப்படி என்றால் உடல் எவ்வளவு நேரம் வலி இல்லாத இந்த நிலையிலேயே இருக்கும்..?

நம் உடல் ஒரு அற்புதமான கட்டமைப்புடன் செயல்படுகிறது, எனவே அது நல்ல நிலையில் உள்ள போது எந்த ஒரு ரசயனங்களுக்கும் கட்டுப்படுவது இல்லை. எனவே தான் தினம் தினம் மாத்திரைகள் எடுக்கும் தேவை அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து மாத்திரைகள் எடுக்கும் போது உடலின் இந்த கட்டமைப்பு சின்னாபின்னம் செய்யப்படுகிறது. இப்போது பலருக்கு உடலில் ஏற்படும் பல உணர்வுகள் குறைபடுகிறது, காலில் ஒரு முள் குத்தினாலோ அல்லது ஒரு கல் பட்டு காயம் ஏற்பட்டாலோ கூட தெரிவது இல்லை. இரத்தம் வெளியேறிய பின்பு யாராவது சுட்டிக்காட்டினால் மட்டுமே அவர்கள் சுதாரிப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம்.

இது மட்டும் அல்ல, தொடர்ச்சியாக மருந்துகள் எடுப்பவர்களுக்கு சில நாட்களுக்கு பின்னர் அதிக கோபம், பயம், கண் எரிச்சல், தெளிவற்ற சிந்தனை, ஆண்மை குறைவு, கர்ப்பப்பை பிரச்சனைகள், தூக்கமின்மை, பசியின்மை, இடுப்புவலி, புதிய இடங்களில் வலிகள் என்று பல புதிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் நம் உடலில் உள்ள பிரதான உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைய தொடங்குவதே ஆகும். காரணம் உடல் ஒருபோதும் ரசாயனங்களை நோய் தீர்க்கும் சக்திகளாக ஏற்றுகொள்வது இல்லை. இதற்கு ஒரு உதாரணம் அக்குபங்சர் சிகிச்சை மேற்கொள்ளும் பல நோயாளிகள் அவர்களின் உடல் கழிவுகள் வெளியேறும் போது சிறுநீர் மஞ்சள் நிறமுடனோ அல்லது மருந்துகளின் நாற்றமுடனோ வெளியேறுவதாக கூறும்போது நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அது.., உடல் நோயெதிர்ப்பு சக்தி பெறும்போது மருந்துகளை சக்திகளாக நினைத்து இருந்தால் அவற்றை ஜீரணித்து தன் தேவைக்கு உபயோகம் செய்திருக்கும். ஆனால் நடந்ததோ நேர் மாறானது, உடல் சக்தி பெறும்போது தனக்குள் தேங்கிய ரசாயன மருந்துகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவது, உடல் ரசாயன மருந்துகளை புறக்கணிக்கிறது என்பதை ஆதாரமாக காட்டுகிறது. உடல் என்றுமே கழிவுகளை மட்டுமே வெளியேற்றும் சக்திகளை அல்ல.

சரி இப்போது மீண்டும் மேல் உள்ள கேள்விகளுக்கே வருவோம்...

வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

முதலில் ஏன் வலிகள் ஏற்பட வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும், உடலில் கழிவுகள் தேக்கம் அடையும்போதும், உடலில் உள்ள சக்தியோட்ட பாதைகளில் தடைஎற்பட்டு உடலின் சமநிலை [பஞ்சபூத உறுப்புகளின் இயக்கம்] மாறுபடும்போதும் உடல் அதனை பல அறிகுறிகளாக வெளிப்படுத்தும் அவற்றில் ஒன்றுதான் வலிகள். அதுவும் நமக்கு பிற்காலத்தில் ஏற்படும் பெரிய நோயை தடுக்கும் ஒரு முன் அறிவிப்பே..! முன்னறிவிப்பு எப்படி நோயாகும். எனவேதான் அதனை, வலி நல்லது... என்று மேலே குறிபிட்டுள்ளேன்.

அப்படியென்றால், மேலே உள்ள அனைத்து வியாதிகளையும் நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா..? ஆம், நோய் காரணம் தெரிந்தால் நிச்சயம் முடியும். குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறுவது ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமே பொருந்தும் அக்குபங்சர் உட்பட மற்ற எந்த ஒரு மாற்று மருத்துவங்களுக்கும் பொருந்தாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

தலைவலிக்கு அடிப்படை கல்லிரலின் இயக்க குறைபாடாக இருக்க பெரும்பகுதி வாய்ப்பாக உள்ளது. இதனை சரியாக உணர அக்குபங்சர் நாடியறிதல் முறையோ அல்லது கேட்டறிதல் முறையோ உதவியாக இருக்கிறது.

மூட்டு வலிக்கு காரணம், மூட்டு தேய்வது இல்லை மாறாக, மூட்டுகளை சுற்றி உள்ள தசைநார்கள் பலம் இழப்பதும், மூட்டுகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு பகுதியில் நீர் தன்மை குறைவதால் அவை சுருங்கி விரியும் தன்மையை இழந்து இரு எலும்புகளும் உறைவதால் வலி ஏற்படுகிறது. இதற்கு உதவியாக உள்ள உள்ளுறுப்புகளை சரியான சிகிச்சை மூலம் பலப்படுத்துவதால், இன்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த பல நோயாளிகள் அதனை தவிர்த்து, முழு குணம் பெறுவதனை அக்குபங்சர் மருத்துவர்களான நாங்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். இது போன்ற அடிப்படையில் தான் அனைத்து வலிகளும் ஏற்படுகின்றன. அதனை புரியாமல் நோய் அறிகுறிகளை மட்டும் தடுப்பதால், உடலினுள்ளே கழிவுகள் மேலும் மேலும் அதிகரிக்கும்போதுதான் உள்ளுறுப்புகள் செயல் இழக்கின்றன. இப்போதுதான் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்ற ஒன்று தேவை என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. [ஒருவருடைய இரத்தம் உட்பட உடல் உறுப்புகள் எதுவும் மற்றவருக்கு பொருந்தாது.]

சரி இப்போது அக்குபங்சர் சிகிச்சை செய்யும்போது என்ன நடக்கும்..? எங்களிடம் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் முதலில் நாங்கள் செய்யச் சொல்லும் விஷயம் மருந்துகளை[ரசாயன விஷங்களை] நிறுத்துங்கள் என்றுதான்...! இப்போது உடல் சக்தி பெறப்பெற தனக்குள் தேங்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றும், இப்போது மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருந்த Hypothalamus மீண்டும் புத்துணர்வு பெரும். இந்த நிலையில்தான் நோயாளிகள் மீண்டும் வலி அதிகரிப்பதனை உணர்வார்கள். ஏன் வலி அதிகரிக்க வேண்டும் என்றால், உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் இப்போது தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளித்தள்ள முயற்சி செய்யும்.. இந்த நிலையில் வலி அதிகரிக்கும், பசி குறையும், சிலர் இரவு நேரங்களில் தான் அதிகம் வலிகளை உணர்வார்கள். காரணம் உடல், இயக்கம் இல்லாத இந்த நிலையில் தான் தன்னுடைய முழு சக்தியையும் நோயை எதிர்த்து போராட உபயோகிக்கும். ஒரு சிலருக்கு இடுப்பிலும் வலிகள் அதிகரிக்கும், காரணம் இதுவரை சாப்பிட மருந்துகள் சிறுநீரகத்தை பழுதுபடுத்தி இருக்கும் இதனை உடல் சரி செய்யும் முயற்சிதான் இந்த வலி. இந்த வலிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இப்போது வலிகள் மட்டும் அல்லாமல், உடலில் இருந்த நோய்கள் என்று நாம் நினைக்கும் பல அறிகுறிகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பிக்கும். கடைசியில் மிஞ்சுவது முழுமையான ஆரோக்கியம் மட்டுமே. காரணம் உடல் என்றுமே தவறு செய்வது இல்லை...! உயிரின் வேலை, உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றி அந்த உடலை என்றுமே ஆரோக்கியமாக வைத்துகொள்வது மட்டுமே கடமையாக நினைக்கிறது. 

இன்னொரு உண்மை என்னவென்றால், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் செய்யப்பட 112 வகையான மருத்துவ முறைகளில் [அக்குபங்சர், ஆங்கில மருத்துவம் உட்பட] ஒன்றுகூட எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது. மருத்துவத்தின் வேலை உடலின் இயக்கங்களை முழுமையாக புரிந்துகொண்டு பக்கத்துணை நிற்பதுமட்டுமே. அதனை விட்டுவிட்டு, உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் எந்த மருத்துவத்தாலும் எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுதவோ எள்ளளவும் சாத்தியக்கூறு இல்லை.

பசி தாகம் தூக்கம் சோர்வு போன்ற உடலின் அடிப்படை தேவைகளை உடல் நம்மிடம் எதிர்பார்க்கும்போது, அதனை முறையாக கவனித்து அந்த தேவைகளை பூர்த்திசெய்து வந்தால், நிச்சயம் அக்குபங்சர் உட்பட எந்த ஒரு மருத்துவமும் மனித உடலுக்கு தேவை இருக்காது. காரணம் நம் உடலில் உள்ள உயிரின் வேலை, எப்போதும் தான் அந்த உடலில் உள்ளவரை அதில் உள்ள நோய்களை களைந்து அந்த உடலுக்கு நலனை கொடுப்பதுமட்டுமே....! இதனை கவனிக்க தவறியவர்களுக்கு மட்டுமே மருத்துவம் தேவைப்படுகிறது.

மருந்துகளின்றி மனித இனம் காப்போம்!  மருந்துகளிடம் இருந்து மனித உயிர்களை மீட்போம்!!            
                                                நோய்கள்    (DISEASES)                                   
உண்மையில் நோய் என்றால் என்ன...?

உடலில் கழிவுகள் தேக்கமே நோய், அதனை உடலே வெளியேற்ற எடுக்கும் முயற்சியே நோய் அறிகுறிகள், நோய் ஒன்றே ஒன்றுதான் ஆனால் அது வெளியேறும் முறைகளை பொருத்து அதன் அறிகுறிகள் பல தோன்றும், அந்த அறிகுறிகளை நோய் என்று நினைக்கும் ஆங்கில மருத்துவம் முதலில் மருந்துகளை கொடுத்து அந்த அறிகுறிகளை மறைக்க பார்க்கின்றது. ஆனால் இந்த ஆங்கில மருந்துகள் அனைத்தும் வியாதியை [அறிகுறியை] அப்போதைக்கு மறைத்து மட்டுமே வைக்கும் குணப்படுத்த முடியாது. [இதனால்தான் ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்று கூறுகிறது. - உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்த முடிந்தால் அதனை குணபடுத்தவும் முடியும் அல்லவா...? எனவேதான் இந்த மருத்துவத்தில் வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்கவேண்டி உள்ளது.] 

இதனால் உடலில் மேலும் மேலும் கழிவுகள் தேங்கும், இத்துடன் உடல் ஏற்றுக்கொள்ளவே முடியாத ரசாயன மருந்துகளை கொடுப்பதால், உடலில் ஏற்கனவே இருந்த கழிவுகளுடன் இப்போது இந்த புதிய ரசாயன கழிவுகளும் சேர்ந்துகொள்ளும். இப்போதும் உடல் தனக்குள் தேக்க பட்ட கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது, ஆனால் இந்த முறை சற்று கடினமாக வெளியேறுகிறது. முன்பை விட சில புதிய அறிகுறிகள் வெளிப்படுகிறது. இதனை உணராமல் இப்போது மருத்துவம் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து அதற்கும் அதே ரசாயனங்களை தான் கொடுக்கிறது, [எடுத்துகாட்டாக: ஒவ்வாமை [Allergy], மற்றும் வேறு சில புதிய பெயர்களை கூறி அதற்கும் ஒரு புதிய மருந்தை கொடுக்கிறது. ]

இந்த நிலை மேலும் தொடரும்போது கழிவுகளை உடலை விட்டு நீக்க வேண்டிய உறுப்புகளின் [கல்லீரல், சிறுநீரகம்] இயக்கம் குறையும் இதனையும் மருந்துகளை கொடுத்து சரிசெய்ய முயற்சிக்கும் மருத்துவம் தோற்று, அந்த உறுப்பு கெட்டு போய்விட்டது என்று கூறி அந்த உறுப்பையே வெட்டி எறிந்துவிட்டு மாற்று உறுப்பு சிகிச்சை என்னும் பெயரில் மற்றவரின் உறுப்புகளை வெட்டி வைக்கும் முயற்சியில் ஈடு படுகிறது, ஆனால் இதனையும் தன்னுடையது அல்ல என்று அடையாளம் கண்டுகொண்ட உடல் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் போது அதனையும் நிராகரிக்கும். [மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தொடர்ந்து மருந்து எடுப்பது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி வைக்கவே என்பதை இங்கு கவனிக்க வேண்டும்: 
                    
: சுமார் 60 வயது மதிக்க அவர், ஒரு நுரையீரல் புற்றுநோயாளி, அவருக்கு ஆங்கில மருத்துவத்தில் கொடுத்த சிகிச்சை, ஸ்கேன் செய்து விட்டு Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியின் ஒரு பகுதியை வெட்டி உள்ளனர். பின்பு இதனை சரிசெய்ய முடியாது என்று கூறி அனுப்பி விட்டனர். ஏன், இந்த நோயை ஆங்கில மருத்துவம் குணப்படுத்த முடியாது என்பது அந்த Test செய்யும் முன்பே தெரியாதா..? இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், உண்மையில் புற்றுநோய் என்றால் என்ன என்பதனை உணரவேண்டும் மேலே கூறியபடி உடலில் தொடர்ந்து கழிவுகள் தேக்கப்படும்போது உடல் அதனை வெளியேற்ற போதுமான சக்தி இல்லாவிட்டால், அந்த கழிவுகள் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும் என்று அறிந்த உடல் அதனை ஒரு கட்டியாக ஒன்று திரட்டி, அதன் மேலே ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி ஒரு பகுதியில் ஒட்ட வைக்கிறது. இந்த நிலையில் அந்த உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் நிச்சயம் அந்த கட்டியை கரைத்து அந்த கழிவை வெளியேற்றும் தகுதியுடன் இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியை வெட்டி துளை இடுவது அந்த கழிவுகள் உடல் முழுமைக்கும் பரவ ஏதுவாக இருக்கும். பின்பு எப்படி அதனை குணப்படுத்த முடியும். 

இப்படிதான் உடலின் [உயிரின்] எந்த ஒரு உணர்வையும் புரிந்து கொள்ளாத மருத்துவத்திடம் சிக்கி நோயுடன் போராடும் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறதே தவிர. ஆரோக்கியம் என்றும் நிலைபடுவது இல்லை. இந்த மருத்துவம் தன் போக்கை மாற்றாத வரை பல உயிர்கள் பலி ஆவதை யாராலும் மறுக்க முடியாது... 

#
ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக