சனி, 13 டிசம்பர், 2014

நோய்களிலிருந்து நீங்க இறை பிரார்த்தனை எவ்வாறு?

                  ‘’ என்றென்றும் நிலையாக வளர்ச்சி பெறும் சுகத்துடன் வாழ வேண்டும் ’’. மனம் அதை ஏற்கிறது.இந்த ஏற்புதல் இறை பிரார்த்தனை ஆகும்.இதற்கான கூலி நோய்களிலிருந்து விடுபடக் கூடிய சுகமான வாழ்க்கையே!
                       இந்தப் பிரார்த்தனை நிறைவேற வேண்டுமென்றால் மனிதர்களிடத்தே பணிவும் வேண்டும்.இரக்கமும் வேண்டும்.அவர்கள் முன்பாக பெருமையும் கூடாது.இதனை பிரார்த்தனையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.அகிலங்களே உங்களுக்கு சிரம் பணியும்.இதுவே மாபெரும் ஆட்சியதிகாரம்!.உங்களுக்காக காத்திருக்கக் கூடிய இறை பாக்கியம்!
                          'புகழுக்குரியவன் நீ (இறைவன்)   ஒருவனைத் தவிர இல்லை.எனக்கு இவ்வுலகத்தில் பணிவாக நடக்கும் நற்குணத்தைக் கொடு' என்ற பிரார்த்தனையின் மீது விருப்பத்துடன் வாழும் பொழுது தனித்தன்னையோடு சிறந்து விளங்கக் கூடிய பெரும் இறையாற்றலை நம் இறைவன் நமக்கு நிச்சயமாக அளிக்கிறான்.
      'மீண்டும் மீண்டும் சுகம் அடையுங்கள்' இறைவனுடைய இந்த நினைவூட்டுதலை இறையாற்றலாக நம்பிக்கை கொள்ளுங்கள்.அந்த எண்ணத்தை உங்களுடைய மனதில் எந்நேரமும் பதிய வையுங்கள்.அது உங்கள் வாழ்க்கையில் சத்தியமாக அமையும். 
    'என் இறைவனே! உன்னுடைய ஞானமிக்க ஆற்றலைக் கொண்ட உன்னுடைய செய்தியை நான் சந்தேகம் கொள்வதிலிருந்தும் என்னைப் பாதுகாத்துக் கொள்.இன்னும் மனிதர்களின் அறிவை நம்பும் கேடுகளிலிருந்தும் என்னைப் பாதுகாத்துக் கொள்'.
    'என்  இறைவனே !  நீ என் இருதயத்தில் விதைத்திருக்கக் கூடிய நன்மைக்கு விரோதமான மனிதர்களின் அறிவை நீக்கி விடுவாயாக'.
       'என்  இறைவனே ! நீ என்னை மன்னிப்பாயாக; கருணை புரிவாயாக'.
           'என் இறைவனே ! நீ விதித்த சுகமான உணர்வில் என் நெஞ்சம் எப்பொழுதும் விசாலமாக இருக்கட்டும்'.
            'என் இறைவனே ! நீ இன்றளவில் எனக்கு அனுமதித்திருக்கும் சுகத்தின் மீது நான் உனக்கு நன்றியோடு வாழும் பொறுமையைக் கொண்டு உதவி செய்வாயாக'.
                 'என் இறைவனே!       என் மனதை நான் குழப்பங்களுக்குள் ஆக்கி விட்ட போதிலும் என்னை   மன்னிப்பாயாக; பொறுத்தருள்வாயாக'.
              'எங்கள் இறைவனே ! எங்களைப் பாதுகாத்துக் கொள்வாயாக; எங்கள் கல்வியறிவை விட்டும் உன்னுடைய இறை ஆற்றல் மிக்க விதியின் பக்கம் எங்களை உயர்த்துவாயாக'.
                                                               நன்றி; ஹெல்த் டைம் டிசம்பர் 2014

                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக