வியாழன், 11 டிசம்பர், 2014

டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் சர்க்கரை நோய் குறித்த கட்டுரை.

வரலாற்றில் எந்த ஒரு நல்ல விஷயமும்,எந்த ஒரு சத்தியமும் கால வெள்ளத்தால் மறைந்து போனாலும்,அழிந்தே போனாலும்,பல திரிபுகளால் நீர்த்துப் போனாலும்,   பல நூற்றாண்டுகள் ஆனாலும் மீண்டும் தகுதி வாய்ந்த மனிதர்களின்( திரு டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள், திரு டாக்டர்.சித்திக் ஜமால் அவர்கள்) தேடுதல்களால் புதிய ஞானங்களோடு அவைகள் புதுப்பிக்க்ப் படும்,புத்துயிர் ஊட்டப் படும் என்பதற்கு அக்குபங்சர் ஒரு நிகழ்கால சாட்சியமாக விளங்குகிறது.
                சீன அக்குபங்சர் மருத்துவர் டாக்டர் வூ.வே.பிங் அவர்கள் "ஒரே ஒரு ஊசியைக் கொண்டு பதினாயிரம் உடல் உபாதைகளை ஒரு சேர,ஒரே நேரத்தில் ஒரு சில நிமிடங்களில் களைந்து விட முடியும் " என்ற அக்குபங்சர் தத்துவத்தின் மெய்ஞான கூற்றின் அடிப்படையில், சீனாவிலேயே நடைமுறைக்கு வராத இந்த சாத்தியக் கூற்றை டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் தனது மருத்துவப் பணியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு அக்குபங்சரில் மிக சரியான ஒரு சக்திப் புள்ளியை தேர்ந்தெடுத்து சிகிச்சை அளித்து நிரூபித்தார்.
                              டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் அக்குபங்சர் மருத்துவப் பணியின் அனுபவத்தாலும்,ஆழ்ந்த தேடுதலாலும் அக்குபங்சர் தத்துவத்தை மீட்டுருவாக்கம் செய்ததில்,தனக்கு உணர்த்தப் பட்ட ஞானங்களால் அக்குபங்சரை அடுத்த கட்டத்திற்கு மேன்மைப் படுத்தியதில் உருவானது "இந்திய அக்குபங்சர்"
             "இந்திய அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தையான"டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் அவர்கள் 1979 இல் தமிழகத்தில் தனது ஆங்கில மருத்துவ எம்.பி.பி.எஸ்.பட்டப் படிப்பை முடித்தார்.இதைத் தொடர்ந்து எம்.டி. மேல் பட்டப் படிப்பை 1982 ஆம் ஆண்டில் முடித்தார்.இதன் பின் தனது ஆறு ஆண்டு கால ஆங்கில மருத்துவப் பணியை கைவிட்டு அக்குபங்சர் மருத்துவப் பணியை 1984 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டார்.
                            அக்குபங்சர் மருத்துவப் பணியின் அனுபவத்தாலும்,ஆழ்ந்த தேடுதலாலும் அக்குபங்சர் தத்துவத்தை மீட்டுருவாக்கம் செய்ததில்,தனக்கு உணர்த்தப் பட்ட ஞானங்களின் அடிப்படையில் "ஆங்கில மருத்துவம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு" என ஆங்கில மருத்துவத்தை தனது ஏராளமான ஞானமிக்க கட்டுரைகளின் மூலம் சாடினார்.
                                  டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் ஆரம்ப காலத்தில் மங்கையர் மலர் என்ற பத்திரிக்கையிலும்,பின்னர் ஹெல்த் என்ற பத்திரிக்கையிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.ஹெல்த் பத்திரிக்கையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, ஃபேமிலி ஹெல்த் என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வந்தார். அந்தப் பத்திரிக்கையிலும் தடங்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவில் வெளியிடப் பட்டு வரும் "டைம்" பத்திரிக்கையைப் போன்று, தமிழகத்திலும்,தமிழக மக்களின் நலவாழ்வினையும்,நல்ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு "ஹெல்த் டைம்" பத்திரிக்கை 1999 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.
                      மேற்கண்ட பத்திரிக்கைகளில் மருத்துவம் பற்றிய கட்டுரைகள்,மருத்துவ இலக்கியமாக வெளி வந்து,தமிழக மக்கள் அனைவரின் ஏகோபித்த நல்லாதரவைப் பெற்றது.அக்கட்டுரைகளில் மனித உடல் நலம்,ஆங்கில மருந்துகள் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்குகள் மற்றும் பக்க விளைவுகள்,அக்குபங்சர் குறித்த கட்டுரைகள் மற்றும் டாக்டர் சகோதரர்களுக்கு எவையெல்லாம் ஞானங்களாக கிடைக்கப் பெற்றனவோ அவையெல்லாம் "ஹெல்த் டைம்" பத்திரிக்கையில் உடனுக்குடன் வெளியிடப் பட்டன.வெளியிடப் பட்டும் வருகின்றன.
                                           இவ்வாறு வெளியிடப் பட்ட கட்டுரைகளில் ஒன்றான "டயாபடீஸ்-சர்க்கரை" நோயைப் பற்றிய கட்டுரை கீழே வெளியிடப் பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் சர்க்கரை நோய் என்பது பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மூலதன சரக்காகி,தமிழக மக்கள் கார்ப்பரேட் மருத்துவ மனைகளின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள்.
அக்குபங்சர் சிகிச்சை மூலம் சர்க்கரை நோய் குணமாகுமா?
டாக்டர். பஸ்லுர் ரஹ்மான் M.B.B.S., DV., MD 
Top of Form

Bottom of Form
முதலில் சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டால்தான் - அதற்கு சிகிச்சை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
நவீன மருத்துவம் சர்க்கரை நோய்க்கான அடிப்படைக் காரணம் - கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் பற்றாக்குறைதான் என்று கூறுகிறது. இவ்வளவு சுரப்பு திடீரென குறைய என்ன காரணம்? அதுவும் நம் உடல் முழுவதும் பலவகையான சுரப்புக்கள் ஒழுங்காக இருக்கும் போது அந்த ஒரே ஒரு சுரப்பு மட்டும் ஏன் திடீரென குறைகிறது? முன்பு லட்சத்தில் ஒருவருக்கு வந்த கொண்டிருந்த சர்க்கரை நோய் இப்போது உலகையே பயமுறுத்தும் ஆட்கொல்லி நோயாக எப்படி மாறியது? இந்த கேள்விகளுக்கெல்லாம் நவீன மருத்துவத்தின் ஒரே பதில் - இன்னும் ஆராய்ச்சி முடியவில்லை என்பது மட்டும் தான்.
சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணத்தையும், அதற்கான சிகிச்சையையும் மிக எளிதாக முன் வைக்கிறது அக்குபஞ்சர்.
நம் முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஜீரண உறுப்புக்களின் இயக்கக் குறைவு காரணமாக, செரிமானத்தின் இறுதி எரிப்பொருளான குளுக்கோஸ் தரம் குறைந்ததாக கிடைக்கிறது. எப்படி கொழுப்பில் தரம் குறைந்த, தரம் கூடிய வகைகள் உள்ளனவோ அதே போல குளுக்கோஸிலும் இருவகைகள் உள்ளன. இப்படி செரிமானம் மூலம் கிடைக்கக் கூடிய குளுக்கோஸின் தரம் தான் இன்சுலின் சுரப்பின் அளவை தீர்மானிக்கிறது. பாதி அளவே தரம் உள்ள குளுக்கோஸ் செரிமானத்தில் கிடைக்குமானால் வழக்கமாக சுரக்கும் இன்சுலின் அளவு பாதியாக குறையும், தரம் குறைந்த குளுக்கோஸ் தொடர்ந்து உற்பத்தியாகுமானால் இன்சுலின் அளவு குறைந்து கொண்டே போகும். தரம் குறைந்த குளுக்கோஸ் இரத்தத்திலிருந்து சிறுநீராக பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. அதிகப்படியான தரம் குறைந்த குளுக்கோஸ் உருவாகும் போது அதிகப்படியான சிறுநீர் வெளியேறும். இந்த நிலையில் அதிகமான பசியும், உடல் மெலிவும் ஏற்படும். உடலில் இருந்து சிறுநீராக வெளியேறும் தரம் குறைந்த குளுக்கோஸை செயற்கையாக மருந்து மாத்திரை மூலம் உடலிலேயே அடக்கி வைக்க முயன்றால் சிறுநீரகம் படிப்படியாக செயலிழக்கும்.
சர்க்கரை நோய்க்கு அடிப்படைக் காரணமே இரத்தத்தில் உள்ள தரம் குறைந்த குளுக்கோஸின் பெருக்கம் தான். இதை அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி, சீர் செய்தால் தரம் குறைந்த குளுக்கோஸ் சிறுநீர் மூலம் முழுமையாக வெளியேறும். உடலிற்கு தேவையான தரம் உயர்ந்த குளுக்கோஸ் கிடைக்கும். இன்சுலின் சுரப்பு தானாகவே அதிகரித்து உடல் நலம் திரும்பி விடும்.
நன்றி : ஹெல்த் டைம்
Courtesy: Dr.Fazlur Rahman MBBS.MD.DV PhD(Acu)

Website: www.foolproofcure.net

2 கருத்துகள்: